Tuesday, November 30, 2010

இளவாலை வித்தகபுரம் பாகுதிகளில் ஒரு மாதத்திற்குள் மீள்குடியேற்றம் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிப்பு.

இளவாலை வித்தகபுரம் பாகுதிகளில் ஒரு மாதத்திற்குள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யாழ். குடா நாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த இளவாலை மற்றும் வித்தகபுரம் பிரதேசங்களில் அடுத்துவரும் ஒரு மாத காலத்திற்குள் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் யாழ்ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் வசித்த மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்றி வருகிறௌம்.
இதன்படி இளவாலை வடமேற்கு வித்தகபுரம் இளவாலை வடக்கு ஆகிய பகுதிகளில் ஒருமாத காலத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.
இதேபோன்று மயிலிட்டியில் கண்ணி வெடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு விரைவில் அங்கும் மீனவ குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர்.
மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
மயிலிட்டியில் மக்களை மீள் குடியேற்றுவதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு யாழ். இராணுவத்தளபதியுடன் பேசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு மக்களை மீள் குடியேற்ற ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு மிக விரைவில் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியலிலும் சேரும் பாகிஸ்தான் ஜனாதிபதி கூறுகிறார்

உலகிலே பயங்கரவாதம் இல்லாத ஒருசில நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளது. உலகிலே அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் இணைவதற்கும் தற்போது இலங்கைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஷிப் அலி சர்தாரி குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தின் மூலம் துன்புறுத்தப்படுகின்ற ஒரு நாடு என்ற வகையில் பயங்கரவாதத்தின் கொடூர செயற்பாடுகள் பற்றி பாகிஸ்தான் நன்கறியும் என்று குறிப்பிடுகின்ற சர்தாரி பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியுள்ள இலங்கைக்கு இன்று நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகிலே அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காணப்படும் உறவு பற்றி குறிப்பிட்ட பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, தாம் இங்கே வந்ததற்கான நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பினை மேலும் வலுப்படுத்துவதாகும். இந்த நாட்டின் டொலர்களை எமது நாட்டிற்கு கொண்டு செல்லும் நோக்கம் தமது பயணத்தில் கிடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் அழைப்பின் பேரில் நேற்று (29,11.2010) கோட்டே பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகைதந்த பகிஸ்தான் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாகிஸ்தான் ஜனாதிபதியை வரவேற்றார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர் பார்த்து உள்ளதாகவும், ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானுக்கு வருகைத் தரு மென தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். “பாகிஸ்தான் விமான சேவையைச் சேர்ந்த விமானங்கள் தற்போது இலங்கைக்கு வருகின்றன. எமது இரு நாடுகளுக்கும் இடையேயும் காணப்படும் நீண்டகால நட்புறவினை பேணி வருவது இரு நாடு களினதும் பொறுப்பாகும்.
இலங்கை எனக்கு வழங்கிய மகத்தான வரவேற்பினை நான் பெரிதும் மதிக்கிறேன் இவ்வாறு சர்தாரி கூறினார். இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இரு நாடுகளினதும் கடந்தகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்தார். முக்கியமாக இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாரிய நன்மை அடைந்து வருவதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்தனர்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிய கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார். இலங்கை எனக்கு வழங்கிய மகத்தான வரவேற்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்” இவ்வாறு சர்தாரி கூறினார். இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இரு நாடுகளினதும் கடந்தகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்தார். முக்கியமாக இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாரிய நன்மை அடைந்து வருவதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்தனர்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிய கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.

Monday, November 29, 2010

கிருஷ்ணாவுடனான தமிழ்க் கூட்டமைப்பு, அரங்கம் ஆகியவற்றின் சந்திப்பு இறுதி நேரத்தில்ரத்து

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து பேச இருந்த போதிலும் இந்தச் சந்திப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள் ளன. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே இந்தச் சந்திப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டதாக குறித்த கட்சிகளுக்கு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை வந்திருந்த கிருஷ்ணா, யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மற்றும் அங்கு ஏற்பாடாகியிருந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதனைத் தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலநிலை மாற்றம் காரணமாக அன்று மாலை நடைபெறவிருந்த நிகழ்வுகள், நேற்று ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டன. இதன் பிரகாரம் அம்பாந்தோட்டையில் புதிதாக இந்திய கிளை தூதுவர் ஆலயம் திறந்து வைப்பதற்கென அமைச்சர் கிருஷ்ணா நேற்று அங்கு சென்றிருந்தார். இதுவே சந்திப்பு இடம் பெறாமைக்கான காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்த எஸ்.எம். கிருஷ்ணா அங்கிருந்து நேரடியாக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று நாடு திரும்பியுள்ளார்.
இதேவேளை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் நேற்று கொழும்பில் கூடி கிருஷ்ணாவைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இறுதி நேரத்தில் இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து மகஜரை கையளிக்க முடியாத நிலை அரங்கத்தினருக்கு ஏற்பட்டது.

Saturday, November 27, 2010

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: மக்களின் வாழ்வாதாரம் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்த் தலைவர்கள் முடிவு.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலுள்ள சகல மக்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்றதொரு திறமையான தலைவர் வேறு எங்கும் கிடையாது எனவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்போது பெரும்பாலும் முடிவடையும் தருவாயிலேயே உள்ளன.
ஒரு வருடத்துக்குள் இந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு கிடைத்தமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றி என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திடம் தெரிவித்தார்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் எந்தவொரு நபரையும் மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்காது என சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றிய பின்னர் ஒழுங்கான முறையில் மக்கள் அவர்களின் இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதுடன் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடனும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற வெற்றியுடனும் எதிர் காலத்தில் மிகப் பெரிய சேவையை செய்வதற்கு ஜனாதிபதிக்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பதையும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியது.
இச்சந்திப்பின்போது,
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார் எம்.பி., வீ. ஆனந்த சங்கரி, ரி. சித்தார்த்தன், எஸ். சதானந்தம், ரி. ஸ்ரீதரன், பி. குமார், கே. சிவாஜிலிங்கம், சீ. சந்திரஹாசன், எஸ். பேரின்பநாயகம், கே. சுரேந்திரன், என். குமரகுருபரன், ஏ. ராஜமாணிக்கம், கே. தயாலினி, ஜீ. ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Wednesday, November 24, 2010

பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை விஜயம் ஜனாதிபதி உட்பட பலருடன் சந்திப்பு.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உத்தியோகபுர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் நாட்டின் உயர்மட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளர்.
இலங்கை பாகிஸ்தான் பாராளுமன்ற சங்கத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுநடத்தவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அத்துடன் இலங்கையில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டிலும் பாகிஸ்தான் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிருமிநாசினியைச் சுவாசித்த மேலும் 60 மாணவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிப்பு.

நுவரெலியா ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களில் கிருமிநாசினியை சுவாசித்த மேலும் 60 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 19 பேர் இதே போன்று வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பினர். இந்த நிலையில் இன்று பாடசாலைக்குச் சென்ற மாணவர்களின் பலர் வகுப்பறை மண்டபத்திற்குச் சென்ற போது அந்த மாணவர்களுக்கு மயக்கமும் குமட்டலும் உதடுகளில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் 60 பேர் உடனடியாக 10.30 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச்; சென்று அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தப்பாடசாலையின் அருகிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் நேற்று முற்பகல் 11 மணியளவில் பயிர்களுக்குக் கிருமிநாசினி விசிறியுள்ளார்கள். இந்தக்கிருமி நாசினி காற்றுடன் கலந்து பாடசாலை சூழலில் பரவியதால் மூன்றாம் தவணைப்பரீட்சை எழுதிக்கொண்டிருந்த தரம் 10 மற்றும் தரம் 11 வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் சுவாசித்துள்ளனர்.
இதன் பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் நான்கு மாணவிகளும் 15 மாணவர்களும் நுவரெலியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு தற்போது சிகிச்சைப்பெற்றுவருவதாக ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று பாடசாலை அதிபர் பி.சண்முகநாதன் தெரிவித்தார்.
இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை இந்தச்சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பாடசாலை அதிபர் பி.சண்முகநாதன் மேலும் தெரிவித்தார். _

Tuesday, November 23, 2010

சட்டவிரோதமான முறையில் பாரிய மரங்கள் கடத்தல் பொலிஸாரால் முறியடிப்பு.

சட்டவிரோதமான முறையில் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாரிய வேப்பை மரக்குற்றிகளை கடத்திய நபரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து பெறுமதியான 15 வேப்பை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதி;காரி ஜி. ஜெயவர்த்தன தெரிவித்தார்.
லொறியொன்றின் மூலம் கடத்திவரப்பட்ட இம்மரக்குற்றிகள் ஆரையம்பதி பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்திவரப்பட்ட லொறி தப்பியோடியுள்ளதுடன் பொலிஸார் லொறியைத்தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

விடுதலை குறித்து நளினி மனு மன்றில் ஆஜராக தமிழக அரசுக்கு அறிவிப்பு.

இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நளினி, தனது விடுதலை கோரி தாக்கல் செய்திருக்கும் மீளாய்வு மனு தொடர்பாக மன்றில் ஆஜராக வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு சென்னை மேல்நீதிமன்றம் நேற்று அறிவித்தல் வழங்கி உள்ளது.
நளினி அவரது விடுதலையைக் கோரி முன்பு தாக்கல் செய்திருந்த மனுவை இதே நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி நிராகரித்தது.
அப்போது நீதிபதி தர்மராவ் தலைமையிலான நீதிபதிகள் குழு நளினியை ஏன் விடுவிக்கக் கூடாது என தமிழக அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட காரணங்களை ஏற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் சுமார் ஆறு மாதங்களுக்கு பின் நளினி மீளாய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இம்மீளாய்வு மனு தர்மராவ், ஹரிபரந்தாமன் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழு முன் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
நளினியை ஆதரித்து சட்டத்தரணி பி.புகழேந்தியின் நெறிப்படுத்தலில் சட்டத்தரணி எம். இராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கு தொடர்பாக அடுத்த தவணைக்கு மன்றில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் குழு எதிர்மனுதாரரான தமிழ்நாடு அரசுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
அத்துடன் இம்மனு தொடர்பாக எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன் தமிழக அரசு எழுத்துமூல பதிலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்நீதிமன்றம் கோரி உள்ளது.

Monday, November 22, 2010

இந்திய அமைச்சர் கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களும் அங்குரார்ப்பணம்.

இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.
எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை வட மாகாணத்திற்கு அவர் விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணம் மன்னார் மாவட்டங்களுக்கு செல்லும் எஸ்.எம். கிருஷ்ணா இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
வட மாகாணத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் ஐம்பதாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்த வட மாகாண ஆளுநர் இவற்றில் ஆயிரம் வீடுகளை புதிதாக நிர்மாணிக்கும் பரீட்சார்த்த நடவடிக்கையை யாழ்ப்பாணத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்றார்.
யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய கவுன்ஸிலர் பிரிவையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதேவேளை மதவாச்சி முதல் தலைமன்னார் வரையிலான ரயில்பாதை அமைக்கும் பணிகளும் இந்திய அரசின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.


தி.மு.ஜயரத்ன - பிரதமர்
நிமல் சிறிபால டி சில்வா - பெருந்தெருக்கள், நீர்ப்பாசன முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம்
சுசில் பிரேமஜயன்த - பெற்றோலியம்
ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை கிராமிய அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன - நீர் வழங்கல், வடிகாலமைப்பு
டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அபிவிருத்தி
ஏ.எல்.எம்.அதாவுல்லா - உள்ளுராட்சி, மாகாண சபைகள்
ரிசாட் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தகம்
சம்பிக ரணவக்க - மின்சக்தி, எரிசக்தி
விமல் வீரவன்ச - நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு வசதிகள்
ரவூப் ஹக்கீம் - நீதி
பசில் ராஜபக்ஷ - பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார - தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க - உயர்கல்வி
ஜி.எல்.பீரிஸ் - வெளியுறவு
டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன - பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்
(மேலதிக தகவல்கள் விரைவில்...)

Sunday, November 21, 2010

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் அபிவிருத்தியை நோக்கிய இலக்காகும் கருணா அம்மான்.


மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக நீங்கள் கடந்தகாலங்களில் இலங்கையிலுள்ள பல தூதரகங்களுடன் பேச்சு நடத்தினீர்கள். எமக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளவா?
ஜப்பான் தூதுவரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பயனாக பாரிய அபிவிருத்தி திட்டங்கள் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெருந்தொகையான நிதியை ஜப்பான் வழங்கியுள்ளது. அதேபோன்று ஐரோப்பிய தூதரகங்களுடனும் பேசியிருக்கிறேன். அவர்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
இலங்கை தொடர்பாக அவர்களுக்கு ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனை தெளிவுபடுத்தி நிலைமையை விளங்க வைத்திருக்கிறேன். இப்போது எல்லோருக்கும் நன்றாக விளங்குகிறது. 30 வருடமாக யுத்தம் நடந்த நாட்டில் எல்லாவற்றையும் ஒரே இரவில் பூர்த்தி செய்துவிடமுடியாது. அதற்கு சிறிது காலம் தேவை. அந்த காலம் இப்போது எமக்கு வந்திருக்கிறது. இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால் ஜனாதிபதியே நேரடியாகச் சென்று அந்தந்த மாவட்டங்களின் அபிவிருத்தியை கவனித்து வருவதுதான்.
அபிவிருத்தி கூட்டங்களை நடத்துகிறார். அபிவிருத்தி பணிகளின் நிலை என்ன? அதிகாரிகள் ஒழுங்காக செயற்படுகிறார்களா? என்பதை அவதானித்து வருகிறார். பிரதேச அபிவிருத்தியின் மீதும் அந்தப் பகுதி மக்களின் மீதும் ஜனாதிபதி கொண்டுள்ள அக்கறையையே இது காட்டுகிறது. இதுவரை எந்த ஜனாதிபதியும் இவ்வாறு செயற்பட்டதில்லை. பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளன. இலங்கைக்கு கிடைத்த நிதியில் 75 சதவீதமான நிதி வடக்கு, கிழக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் வீதி அபிவிருத்திக்காகவே பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டது. யுத்தகாலப் பகுதியில் ஏனைய பகுதிகள் பராமரிக்கப்பட்டு வந்தபோது வடக்கு, கிழக்கு கவனிப்பாரற்று கிடந்தது. இன்று அந்த நிலை மாறியிருக்கிறது.
அடுத்தாண்டு முன்னெடுக்கப்படவுள்ள ஏதாவது அபிவிருத்தி திட்டங்கள் உள்ளனவா?
ஆம், அடுத்தாண்டு மாசி மாதமளவில் நேர்ப் நெக்டப் என்ற திட்டங்களின் ஊடாக பாரிய அபிவிருத்தி திட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆகிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இவை முன்னெடுக்கப்படவுள்ளன.
என்னென்ன திட்டங்கள் எனக் கூற முடியுமா?
அனைத்தும் கட்டுமானத் திட்டங்கள், பாடசாலைக் கட்டங்கள், அபிவிருத்தி கட்டங்கள் உட்பட கூடுதலாக கட்டட நிர்மாணத்துக்காகவே செலவிடப்படவுள்ளது. இவ்வாறான பாரிய திட்டங்கள் வடக்கு நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளன. அதற்கிடையே சில தீய சக்திகள் எதுவும் நடக்கவில்லை என பொய்ப் பிரசாரம் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கவேண்டும்.
மக்களை மீளக்குடியமர்த்துவதும், அவர்களுக்கு உலர் உணவு வசதிகளை வழங்குவதும் மட்டுமல்லாது அவர்கள் தாமாகவே எழுந்து நிற்பதற்கு ஏதுவாக வாழ்வதார உதவிகள் வழங்கப்படுகின்றனவா?
எமது அமைச்சினூடாக மட்டுமல்லாமல் ஏனயை அமச்சுக்கள் ஊடாகவும் இவை பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிக கொட்டில்கள் அமைப்பது போல ஆறு மாத காலத்துக்கு உலர் உணவுகள் வழங்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து விவசாயத்துக்காக உபகரணங்கள், விதை நெல், உரம் மீன்பிடிக்கான உபகரணங்கள், கால்நடை வளர்ப்புக்கான உதவி என்பன வழங்கப்படுகின்றன. அத்துடன் விவசாயிகளுக்காக குளங்களை புனரமைத்துக் கொடுத்தல் போன்ற பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வடக்கிலோ, கிழக்கிலோ தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் அநீதிகள் இடம்பெறும் போதும் நீங்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கத்தவராக இருப்பதால் பேச முடியாதவராக இருக்கிர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உண்மைதானா?
முற்றிலும் தவறான கருத்து, நான் அரசாங்கத்துக்குள் இருப்பதால் தான் தமிழ் மக்களுக்கு கூடுதலான நன்மைகள் கிடைத்திருக்கிறது. எதிராக இருந்தால் ஒரு நன்மையும் கிடைத்திருக்காது. நான் இன்று அரசாங்கத்தைச் சேர்ந்த தமிழ் அமைச்சராக இருக்கிறேன். அரசாங்கத்துக்குள் ஏனைய கட்சிகள் இருந்தாலும் எனக்கு தமிழ் மக்கள் மத்தியில் வேலைகளை செய்வதற்கு கூடுதல் அதிகாரம் இருக்கிறது. அதுமட்டுமல்ல ஸ்ரீல. சு. க. வின் உப தலைவராக இருக்கிறேன். ஸ்ரீல. சு. க தலைவர் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் ஸ்ரீல. சு. க கூட்டங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசி இருக்கிறேன். ஆகவே நான் அரசுக்குள் இருப்பதால் சிறந்த பலன்களை மக்கள் அனுவித்துக்கொண்டு வருகிறார்கள்.
வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு எல்லா அமைச்சர்களையும் அழைத்துச் செல்கிறோம். அதனூடாக வளங்களை கொண்டு செல்கிறோம். இதனால் பாரிய அபிவிருத்தி, பணிகள் மக்களுக்காக முன்னெடுக்கப்படுகிறது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தங்களது கதிரைகளை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக இனவாதத்தை துவேசத்தை பேசிப் பேசியே மக்களின் காலத்தை கழித்துக்கொண்டு போகிறார்களே தவிர வேறு எதுவித அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்க முடியவில்லை.
மக்களின் கண்ணீரை துடைக்கப்போவது இல்லை. இப்போது மக்கள் யுத்தம் வேண்டாம் என்ற விடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். நாம் அவர்களை சந்தித்த போதெல்லாம் அவர்கள் பாடசாலையை கட்டித் தாருங்கள். கடற்றொழில் செய்வதற்கான உதவிகள் செய்யுங்கள். கமத்தொழில் செய்வதற்காக உதவி செய்யுங்கள் என அபிவிருத்தி பற்றித்தான் கேட்கிறார்களே தவிர வேறு சிந்தனை மக்களுக்கு கிடையாது. இனத்துவேசம் பேசிப் பேசியே மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்குகின்ற அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டுகொள்ள வேண்டும். அப்படியில்லாமல் இவர்களின் பேச்சைக் கேட்டு இவர்களது பின்னால் சென்றால் இன்னுமொரு பாரிய அழிவை நோக்கி செல்வதாகவே அமையும். தூண்டுதல்களை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகளை இனங்கண்டு புறம் தள்ளுவதோடு மட்டுமல்லாமல், தங்களுக்கு நன்மைகளைத் தேடித்தரும் அரசியல்வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் செய்ய வேண்டும் அவர்கள் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த மக்கள் மீண்டும் இருண்ட யுகத்துக்கு செல்லக்கூடாது என்ற நோக்குடன் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அனைவரும் இணைந்து செயற்பட்டால் சுபிட்சமான எதிர்காலத்தை நோக்கி தமிழ் மக்களால் பயணிக்க முடியும். அவரது இரண்டாவது பதவிக்காலம் என்பது பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பயணம். அதில் நாம் அனைவரும் உறுதியுடன் இணைந்துகொள்வோம்.
அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகள் குறித்து நீங்கள் திருப்தியடைகிர்களா?
வீதி அபிவிருத்தி என்பதை இலங்கை சரித்திரத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பார்க்கிறோம். எங்கு பார்த்தாலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கார்ப்பட் வீதிகளை பார்க்கிறோம். எத்தனையோ பாலங்களை பார்க்கிறோம். திருகோணமலையிலிருந்து நாங்கள் மட்டக்களப்புக்கு போவோமா? இது நடக்கிற காரியமா? என்றெல்லாம் எண்ணினோம். ஆனால் இன்று மிக அழகான பாரிய பாலங்கள் கட்டப்பட்டு திருமலை- மட்டு இணைக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழம் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலை ஏற்படுத்தப்போகிறது?
எந்த விதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தப் போவதில்லை. நாடு கடந்த தமிbழத்தால் பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள் தான். உலகத்திலுள்ள எந்த நாடும் இதனை அங்கீகரிக்கப்போவதும் இல்லை.
தமிழ் மக்கள் இதனால் ஏன் பாதிக்கப்படப்போகிறார்கள் என்றால், 15, 000 பேர் தடுத்துவைக்கப்பட்டனர். இவர்கள் தொடர்பாக நாம் ஜனாதிபதியுடன் பேசினோம். இவர்களை சிறைக்கு கொண்டு செல்லாமல் தனியாக தடுத்து வைத்து புனர்வாழ்வளிப்போம். சிறைக்கு கொண்டு சென்றால் ஒவ்வொருக்கும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டி வரும். இதற்கு 10-15 வருடங்கள் கூட போகலாம். எனவே புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைத்து புனர்வாழ்வளித்து படிப்படியாக இவர்களை சமூகத்துடன் இணைத்து விடுவோம் என்ற யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்தோம். அதன்படி அவர்களை சமூகத்தில் இணைத்துக்கொண்டு வருகிறோம். நாடு கடந்த தமிbழம் அமைக்கப்படு வது ஒருபுறமாகவும், இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனிநாடு பற்றிப் பேசுவதும் இளைஞர் யுவதிகளின் விடுதலைக்கு தடையாக அமைந்துவிடும். அரசுக்கு ஒரு சந்தேகம் எழுந்துவிடும். இவர்களை விடுதலை செய்தால் மீண்டும் இணைந்து செயற்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும் அரசுக்கு ஏற்பட்டுவிடும். இவைதான் தமிழ் மக்களுக்குள்ள பாதிப்புகள், அரசாங்கத்துக்கு இதனால் பாதிப்புகள் ஏற்படப்போவதில்லை.
பெரும்பாலும் வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. என்றாலும் ஜனாதிபதி இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் கண்ணும் கருத்துமாக செயற்படுகிறார். பல கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தவித புறக்கணிப்பும் இல்லை. இதனை தமிழ் மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். புலம் பெயர்ந்துள்ள மக்களும் தேவையில்லாத பிரச்சினைகளுக்குள் செல்லாம் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். புலம் பெயர்ந்த மக்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் வன்னி மக்களுக்கு ஒவ்வொரு வீட்டை இலகுவாக கட்டிக்கொடுக்க முடியும். வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இவை பெரிய சுமையாக இருக்காது
இவ்வாறான நல்ல காரியங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள் முன்வராமல் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த முதலமைச்சர் சந்திரகாந்தன் கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்டி பேசியபோது நீங்கள் தான் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கூறியிருந்தார். இதுபற்றி கூறமுடியுமா?
உண்மையாக ஆணைக்குழு முன் முதலமைச்சர் அப்படிக் கூறவில்லை. அவர் கூறிய கருத்துவேறு. கடந்தகாலங்களில் பல பிழைகள் நடந்துள்ளன. அப்படியானால் எல்லோரும் மன்னிப்பு கேட்க வேண்டிவரும். கருணா அம்மான் தான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற வார்த்தை பிள்ளையானிடமிரு ந்து வரவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவு நாடாவையும் நான் கேட்டேன். சில ஊடகங்கள் தவறான பிரசாரங்கள் மேற்கொண்டன. கடந்தகால நிகழ்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இந்த நாட்டை ஒரு சமாதான நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம். இதில் ஜனாதிபதியின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே கிடைத்த சமாதானத்தை தக்க வைப்பதற்காக சகலரும் உழைக்க வேண்டும்.
அதைவிடுத்து பழைய பிரச்சினைகளையும், பழைய புரையோடிப்போன விடங்களையும் ஆளுக்கு ஆள் கிண்டிக் கிளறிக் கொண்டிருப்போமானால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. போரினால் நிறையவே இழந்துவிட்டோம். வீட்டுக்கு வீடு இழப்பு ஏற்பட்டிருக் கிறது. எனது உடன் பிறந்த அண்ணனையே இழந்திருக்கிறேன். இவற்றில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் என்னவென் றால் இவை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு கிடைத்த சமாதான த்தை தக்க வைப்பதற்குரிய விதத்தில் அனைவரது செயற்பாடும் இருக்கவேண்டும் என்பது தான் எனது அன்பான வேண்டுகோளாகும்.

Saturday, November 20, 2010

கிழக்கில் விவசாய நடவடிக்கைக்கு உதவும் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

கிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள விவசாயகளுக்கு உதவும் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்களின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக விதை நெல்லையும் உர வகைகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கோமரன்கடவல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 300 விவசாய குடும்பங்களுக்கு விதை நெல்லும் உரங்களும் வழங்கப்பட்டன.
உலக உணவுத் திட்டம் இதற்கு உதவி வழங்குகிறது.
ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் வேளாண்மை செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கே இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

Friday, November 19, 2010

ஈழத்து மாத்மா!!! தோழர் நாபாவை ஈழமண்ணின் மடியில் ஈன்றெடுத்த நாள் இன்று 19.11.1951


நாபாவே நாபாவே உன்
நாமம் உச்சரிக்க உச்சரிக்க
நாவில் நன்னீர் சுரக்குது தோழா
நன்மனிதன் நீங்கள் என்றும்
நடுநிலை நாயகன் என்றும்
நாங்கள் எடுத்துரைப்போம் தோழா!!

நல்லொதொரு தாயின் வயிற்றிலே
நலமுடனே பிறந்து வந்த எங்கள் தோழா
நட்டிலுள்ள மக்களின் கண்ணீர் துடைக்க
நகர்ந்து வந்த எங்கள் தோழா!!

நட்பு நாடிதேடி வந்த எங்களை
நாட்டதுடன் கட்டி அணைத்தாய் தோழா
நடத்துணராக நீங்களிருந்து---விடுதலைஎனும்
நடைப்பயணம் அழைத்து சென்றாய் தோழா!!

நாட்டாண்மை நாமறியோம்--என்றும்
நட்புறவோன்றே நாமறிவோம் தோழா
நாங்கள் உமக்காக காத்திருப்போம்--உடனே
நம்பிக்கையுடனே புறப்பட்டு வா தோழா!!

நாபா என்று உரைத்தாலே
நரம்பில் ஏதோ ஓர் உணர்வு பொங்குது தோழா
நாணயத்திற்கு அர்த்தம் தேடிப்போனோம்
நாபா என்று பொருள் ஒளி தந்தது தோழா!!

நலமுடனே மறுபடியும்
நம்மிடத்தே முகம் காட்டு தோழா
நடந்த சென்ற பாத சுவடுகளை--பின்பற்றி
நல்விடுதலை பயணம் நோக்கி விரைந்து செல்வோம் தோழா!!

நல்லெண்ணம் தனை நாம் என்றென்றும்
நலம் பேணிகாத்திடுவோம் தோழா
நமை என்றும் உங்கள் ஆத்மா
நல்வழிசென்றிடவே நமை வழிநடாத்தும் தோழா

நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம்
பாவரசன் தோழர் வவி

Thursday, November 18, 2010

பொலநறுவையில் புனர்வாழ்வு பெற்ற 100 பேர் விடுதலை..

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 100 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.
பொலநறுவை- சேனபுர முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களே இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலையில் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு பிரதியமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தினகரனுக்குத் தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு மேலும் 100 கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் நீதி, சட்ட மறுசீரமைப்புக்குச் சிபாரிசு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பிறந்த நாளையொட்டி யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.

Wednesday, November 17, 2010

நஞ்சருந்திய நான்கு மாணவிகள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாணத்தில் சம்பவம்.

யாழ்.வலிகாமம் கல்வி வலய பாடசாலையொன்றைச் சேர்ந்த நான்கு மாணவிகள் நச்சுத்தன்மை கொண்ட பதார்த்தத்தை உட்கொண்டதால் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையைச் சேர்ந்த க.பொ.த சாதாரண மாணவிகளை நேற்று முன்தினம் சம்பவம் ஒன்று தொடர்பாக அதிபர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து நேற்று பாடசாலைக்கு வரும்போது தம்முடன் எடுத்து வந்த மென் பானத்துடன் பாடசாலையில் இருந்த சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட திரவத்தைக் கலந்து உட்கொண்டுள்ளனர். இதனால் மயக்கமடைந்தனர்.
இதனைக் கண்ட ஏனைய மாணவர்கள் அதிபர், ஆசிரியர் உதவியுடன் சங்கானை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இச் சம்பவம் குறித்து யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, November 16, 2010

இந்தியாவின் கிழக்கு டில்லியில் குடியிருப்புக் கட்டிடம் சரிந்ததில் 64 பேர் பலி.

இந்தியாவின் கிழக்கு டில்லி லக்ஷ்மி நகரில் அமைந்துள்ள குடியிருப்புக்கட்டிடம் ஒன்று நேற்றிரவு சரிந்து வீழ்ந்ததில் 64 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 80 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டிட இடிபாட்டிற்குள் 30 பேர் வரை சிக்குண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் குடியிருப்பு கட்டிடத்தில் சுமார் 400 முதல் 500 பேர் வரை வசித்து வந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
பருவ மழைவீழ்ச்சி காரணமாக கட்டிடத்தின் அடித்தளம் உறுதியற்று காணப்பட்டதால் இக்கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Monday, November 15, 2010

முகத்தில் துணியை போட்டு விழுத்தி கதறக் கதற கம்பி ஏற்றினர்...

மூன்று மாதங்களாகச் சம்பளம் எதும் வழங்காமல் வேலை வாங்கிய வீட்டு உரிமையாளர் ஒருநாள் திடீரெனத் தாக்கி கையில் சிறு கம்பிகளை ஏற்றியதாக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் மீனாட்சி லட்சுமி தெரிவித்தார்.
மூன்று மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்தக் கவலையில் நான் தனியாக அழுது கொண்டிருந்த போது அங்குவந்த வீட்டு உரிமையாளர் முகத்தில் துணியொன்றைப் போட்டு கீழே வீழ்த்தினார். அதன் பின்னர் அங்கு வந்த அவரின் மனைவி கையில் வைத்திருந்த சிறு கம்பிகளை ஏற்றினார்.
கதறி அழ அழ கம்பி ஏற்பட்டது” எனத் துக்கத்துடன் கூறினார் லட்சுமி. கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி இச் சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர்; அந்த வீட்டிலிருந்து வெளியேறி 3 மாதங்கள் குவைத் வேலை வாய்ப்பு நிலையத்தில் தங்கியிருந்ததாகக் கூறினார்.
அங்கிருந்து வீட்டைத் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை யென்றும் தெரிவித்தார். பின்னர் நவம்பர் 11ம் திகதி இலங்கை திரும்பி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் லட்சுமி கூறினார். இவருடைய இடது கையிலிருந்து 8 சிறிய கம்பிகளும் காலிலிருந்து ஒரு கம்பியும் வெளியேற்றப்பட்டுள்ளன.

யுத்தத்தை தவிர்க்க பிரபாகரனிடம் விண்ணப்பித்தோம் ஆனால் ஏமாற்றமே: தயா மாஸ்டர்.

ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்குமாக விண்ணப்பம் ஒன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தின் ஒரு பிரதியை பாலகுமாரன் என்னிடம் அப்போது காட்டியிருந்தார். ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என்று புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு சாட்சியமளித்த தயா மாஸ்டர் மேலும் கூறியதாவது
நான் ஒரு காலத்தில் புலிகளின் ஊடகத்துறையில் இணைப்பாளராகச் செயற்பட்டேன். புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் கீழே இந்த ஊடகப் பிரிவு வருகின்றது. புலிகள் அமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் அந்த அமைப்பை விட்டு நான் வெளியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். காரணம் பேச்சுவார்த்தைகளை முறிப்பதன் மூலமும் புறக்கணிப்பதன் மூலமும் மக்களின் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது என நான் உணர்ந்திருந்தேன். அதனால்தான் அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்தேன்.
போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது எண்ணிலடங்காத மக்கள் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கு மத்தியிலும் சிக்கிய நிலையில் பலர் உயிரிழந்தனர். எனது குடும்பமும் நானும் பல தடவைகள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று விட்டு வந்தோம். 2009 ஜனவரியில் போர் எங்கு நடைபெறும் என்ற வரையறை இல்லாமலிருந்தது. அதன் பரிமாணம் விரிவடைந்தது. மக்கள் அங்கலாய்த்தவர்களாகக் காணப்பட்டனர். உயிரிழப்புக்கள் இடம்பெற்றன.
ஒவ்வொருவரும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சித்தமையே உண்மை நிலைமையாகும். அந்தக் காலகட்டங்கள் வாழ்வில் மறக்கமுடியாதவை. தப்புவதற்கு முயற்சித்த பல்லாயிரக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். அந்தச் சந்தர்ப்பங்களை நினைத்து வருந்துகிறேன். எப்படியோ போன உயிர்களைத் திருப்பிப்பெற முடியாது. ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தோம்.ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என தெரிவித்தார்.

Friday, November 12, 2010

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு செங்கலடியில் வனபூங்கா.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு மட்டக்களப்பு செங்கலடியில் வன பூங்கா ஒன்று அமைக்கப்பட வுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொடுவாமடு பிரதேசத்தில் குறிப்பிடப்பட்ட வன பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு நாடளாவியரீதியில் மரம் நடுகை இடம்பெறவுள்ள வேளையில் இந்த வன பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 20 மில்லியன் அமைச்சார் பௌசி தெரிவிப்பு.

நீடித்து வரும் கடும் மழை மற்றும் காற்றுடனான கால நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சார் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.
நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கான மக்களுக்கென 0094 11 2670002 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிவாரண நிதியில் 10 மில்லியன் கொழம்பு மாவட்டத்துக்கும் 5மில்லியன் கம்பஹா மாவட்டத்துக்கும் 5 மில்லியன் களுத்துறை மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சார் குறிப்பிட்டார்

சிம் அட்டைகளை டிசம்பர் 31க்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் பாதுகாப்பு அமைச்சு.

சகல கையடக்க தொலைபேசி பாவனையாளர்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பயன்படுத்தும் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான சுற்று நிருபம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் சகல கையடக்கத் தொலைபேசி இணைப்புச் சேவை வழங்குனர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் அனுஷா பெல்பிட தெரிவித்தார்.
டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சிம் அட்டைகளை பதிவு செய்து கொள்ளாத வாடிக்கையாளர்களினது இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய சட்டத்தின் பிரகாரம் ஒரு தனிநபர் 5 சிம் அட்டைகளுக்கு மேல் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, November 11, 2010

கருணா அம்மானின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பில் பல்வேறு ஆன்மீக, அற நிகழ்வுகள்.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவருமான கருணா அம்மானின் 44ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் அமைச்சின் அதிகாரிகள், மட்டக்களப்பு கட்டட ஒப்பந்த காரர்கள் சங்கத்தின் பிரதி நிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பூஜையைத் தொடர்ந்து மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தினால் நடத்தப்பட்டுவரும் அறநெறிப்பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கருணா அம்மானின் பிறந்தநாளை முன்னிட்டு இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையில் இயங்கிவரும் பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன.
அதனையடுத்து மட்டக்களப்பு புனித வளனார் முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்களுக்கு அன்பளிப்புப் பொதிகள் வழங்கப்பட்டன.
அத்துடன் சித்தாண்டியிலுள்ள யோகர் சுவாமிகள் மகளிர் இல்லத்திலுள்ள சிறுமிகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது. அத்துடன் சந்திவெளியிலுள்ள மாணிக்கவாசகர் சிறுவர் இல்லத்தீலுள்ள சிறுவர்களுக்கும் ஆடைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இறுதியாக கிரான் பிரதேசத்திலுள்ள வயோதிபர்களுக்கு ஆடைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர்களான பொன்.ரவீந்திரன், திருமதி உருத்திரமலர் ஞானபாஸ்கரன், மட்டக்களப்பு கட்டட ஒப்பந்தகாரர் சங்கத்தின் தலைவர் எஸ்.வசந்தராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி நாளை மறு நாள் விடுதலை அரசு தகவல்.

மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி நாளை மறுநாள் 13ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு இராணுவ அரசு தெரிவித்துள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்துக்காகப் போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களுக்கு, பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும், அங்கு தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சி அமைக்க வேண்டும் என உலக நாடுகள் அந்நாட்டு இராணுவ அரசை வற்புறுத்தி வந்தன.
இந்நிலையில், அங்கு கடந்த 7ஆம் திகதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில், இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும் ஆங் சான் சூகி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. பொதுத்தேர்தலில் இராணுவ அரசுக்கு ஆதரவான ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆங் சான் சூகி நாளை மறுநாள் 13ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மியான்மரில் ஜனநாயகத்துக்காகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் போராடி வருகின்றார்
நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஆங் சான் சூகி விடுவிக்கப்பட்ட பின், நாட்டின் அரசியல் நிலை மாறுமா என்பது பற்றிக் கூற முடியாது என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்தேர்தலில் இராணுவ ஆட்சியாளர்கள், பாராளுமன்றின் இரு சபைகளிலும் 77 சதவீதத்திற்கு மேல் உள்ள இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன

Wednesday, November 10, 2010

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட 12,030 பேர் கைது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 27 நாட்களாக நடத்தப்பட்ட பாரிய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 12,030 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
கடந்த மாதம் 13ம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 27 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 12,500 சம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின்போது 10, 306 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஹெரோயின், கஞ்சா, பாபுல், போதை தரும் லேகியங்கள் மற்றும் அபின்போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட்களையே பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆயிரக் கணக்கான பொலிஸார் அடங்கிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் விஷேட பொலிஸ் தேடுதல் பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘போதை ஒழிப்பு, திட்டத்தின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஹெரோயினுடன் தொடர்புடைய 3275 சம்பவங்கள் தொடர்பாகவும், கஞ்சாவுடன் தொடர்புடைய 7596 சம்பவங்கள் தொடர்பாகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்கிஸ்ஸையிலுள்ள படோவிட்ட, கிரேண்ட் பாஸிலுள்ள கிம்புலாஎல, பொரல்லையிலுள்ள மகஸின் வீதி, பண்டாரநாயக்க வீதி, ஒபேசேகரபுர மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலேயே விஷேட பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர் என்றார். போதைப் பொருள் பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் வரை இந்த பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுப்பர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tuesday, November 9, 2010

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு உலக வங்கி 575 கோடி கடனுதவி.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உள்ளூர் சேவை அபிவிருத்தித் திட்ட த்துக்கு உலக வங்கி 5.75 பில்லியன் (575 கோடி) ரூபா கடனுதவி வழங் கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூ ராட்சி சபைகளின் சேவைகள் அபி விருத்தி செய்யப்படவிருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறி வித்துள்ளது. இதன் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உட்கட்டுமானங் கள், வீதிகள் என்பன புனரமை க்கப்படவிருப்பதுடன், பொதுக் கட் டடங்கள், பாலங்கள் என்பனவும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள் ளன. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களி லுள்ள 65 பிரதேச சபைகள், வடக் கிலுள்ள 9 நகர சபைகள், கிழக்கி லுள்ள 3 நகர சபைகள் மற்றும் இரு மாகாணங்களிலுமுள்ள மாநகர சபைகளின் சேவைகள் இந்தத் திட்ட த்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமை ச்சின் கீழ் முன்னெடுக்கப்படவிரு க்கும் இந்த மேம்பாட்டுத் திட்டம் 2013ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைவிட சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைப்புக்களை அபிவி ருத்தி செய்யவும் உலக வங்கி 6.47 மில்லியன் ரூபா கடனாக வழங்கப் படவுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைப்புகளுக்கு குறுகிய, நீண்ட காலக் கடன்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருப்பதுடன் உலக பொருளாதார வீழ்ச்சியால் தொழில் முனைப்புகள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளுக்கும் கடனுதவி வழ ங்கப்படவுள்ளது.
இதன் மூலம் வேலைவாய்ப்பு பிரச்சினையைக் குறைத்து சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைப் புகள் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியுமென எதிர்பார்க்கப் படுகிறது. நிதி நிறுவனங்களுக்கு கடன் உதவிகளை வழங்கி முதலீ டுகளை ஊக்குவிப்பதற்கும் நடவடி க்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை, இலங்கையின் உல் லாசப் பயணத்துறையின் அபிவிரு த்திக்கும் உலக வங்கி உதவிகளை வழங்கவுள்ளது. இதன்படி 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக உல்லாசப் பயண த்துறை அபிவிருத்திக்கு வழங்கப் படவுள்ளது. இதனைக் கொண்டு கிழக்கு மாகாணத்தை உல்லாசப் பயண மையமாக அபிவிருத்தி செய் யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Monday, November 8, 2010

வெலிக்கடை சிறையில் கைதிகள் பொலிஸ் மீது தாக்குதல் ஐம்பது பேர் காயம்.

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றுக் காலை திடீர் சோதனை மேற்கொள்ள சென்ற விசேட பொலிஸ் குழு மீது கைதிகள் நடத்திய தாக்குதலில் 45 பொலிஸாரும், 5 சிறைக் காவலர்களும் காயமடைந்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிவில் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஐம்பது பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவ தாவது, வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் பாவனை இடம் பெறுவதாகவும், கைதிகள் சிலர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைக்கப் பெற்ற தகவல் களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட பொலிஸ் குழுவினர் திடீர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப் புடன் 66 பொலிஸார் அடங்கிய இந்த விசேட குழுவினர் தேடுதல் நடத்திக்கொண்டு இருக்கும் போது குறித்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் சிலர் பொலிஸார் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். அதனை அடுத்து ஏனைய கைதிகளும் கற்கள், போத்தல்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மேலதிக பொலிஸாரும், சிறைக் காவலர்களும், முப்படையினரும் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்துள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அங்கு விரைந்த விசேட படைப் பிரிவினர் காயமடைந்தவர்களை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர். இவர்களில் சிலர் அவசர சிகிச்சை பிரிவுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்களின் தலை மற்றும் உடம்பிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவென விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் (சி. ஐ. டி.) குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் குழு தமது விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாலிஸார் மற்றும் சிறைக் காவலர் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள், போத்தல்கள் மற்றும் பொருட்கள் சிறைக் கூடங்களுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பாகவும் சி. ஐ. டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த பொலிஸ், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து சிறைச் சாலைக்குள் மீண்டும் ஒரு விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த மாதம் 18ம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவை சுற்றிவளைத்து நடத்திய இது போன்ற திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது 53 கையடக்கத் தொலைபேசிகள், பற்றரிகள், சார்ஜர்கள் மற்றும் 44 கஞ்சா சுருட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Sunday, November 7, 2010

மரண அறிவித்தல்!!!!!

ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி அமைப்பின்

தியாகி தோழர்சுதாகரன் (சுதா) அவர்களின் வீரத்தாய்

மட்டக்களப்பு பெரியகல்லாறு 3ஐ சேர்ந்த பாலசிங்கம் கண்மணி அவர்கள் 06.11.2010 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வீரக்குட்டி ராசம்மா தம்பதிகளின் அன்புமகளும்,பாலசிங்கம் அவர்களின் அன்புமனைவியும்,சண்முகராஜா, தேவராஜா, கனகராஜா, மனோன்மணி, ராசமணி, பூரணசகுந்தரி, புஷ்பவதி, காலஞ்சென்ற பாக்கியராஜா, தவமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,விக்னேஷ்வரன், ராஜன், கிருபாகரன், தயாபரன், வாசுகி, மைதிலி, கீதா, காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 07.11.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
மருமகள் பாஸ்கரன் 0041419332910
சகோதரன் கனகராசா 00494131303186
பாசமகள் கீதா 00494171601959
மகன் வாசன் 0066814220407

இலங்கையின் வட,கிழக்கு கடற்பரப்பின் ஊடாக ‘ஜல்’ சூறாவளி இன்று கரையை கடக்கிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ‘ஜல்’ சூறாவளியாக உருமாறி இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் வடக்கே தமிழக கரை நோக்கி செல்லும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
நேற்று காலை நிலவரப்படி யாழ்ப்பாணத் திலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ‘ஜல்’ சூறாவளி மணிக்கு 15 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதுடன் சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரியான கயனா ஹெந்த விதாரண தெரிவித்தார்.
‘ஜல்’ புயலின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியான மழை பெய்வதுடன் கடல் பரப்பிலும் கொந்தளிப்பு ஏற்படும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழை பெய்வதுடன் அது தொடர்ச்சியான மழையாக இருக்க மாட்டாது.
காலநிலை மந்தமாகவே காணப்படும். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைதீவு, அம்பாறை மாவட்ட கரையோர மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், இப்பகுதிகளில் இடைவிடாத கடும் மழை பெய்வதுடன் இடி மின்னலின் தாக்கமும் அதிகமாக காணப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுக்கிறது.
‘ஜல்’ புயல் இலங்கையை அண்மிப் பதற்கு முன்னரேயே நேற்று வடக்கு, கிழக்கு கடற் பகுதி கொந்தளிப்பாகவே காணப் பட்டதுடன் மழை பெய்யவும் ஆரம்பித்தது.
‘ஜல்’ புயல் காற்று இலங்கைக்கு வடக்கே நகரும் போது இன்று மாலை அல்லது இரவு வடக்கு, கிழக்கில் கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
தமிழகத்தை நோக்கி புயல்காற்று நகர்ந்து செல்வதால் தமிழக வாநிலை அவதான நிலையம் தமிழக மக்களையும் உஷார் நிலையில் வைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை காலநிலை அவ தான நிலையம் தெரிவிக்கையில்,
கடும் புயலாக உருவெடுத்துள்ள ‘ஜல்’ நேற்றுக்காலை நிலவரப்படி வங்கக் கடலில் சென்னையிலிருந்து 650 கி. மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு புதுச்சேரி, நெல்லூருக்கு இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வாநிலை ஆய்வு நிலையம் கூறுகிறது.
இன்று அதிகாலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து 120 முதல் 140 கி. மீ. வரை புயல் காற்று வீசும்.
புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர வடக்கு, தெற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவில் மிக பலத்த கன மழை பெய்யும்.
24 மணி நேரத்துக்குப் பின் தமிழகத்தின் சில இடங்களிலும் ராயல்சீமா உள்ளிட்ட சில ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் 25 செ. மீ. வரை மிக மிக பலத்த மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
கடல் மிக மிக கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் அலைகள் புகவும் வாய்ப்புண்டு. இப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் திருகோணமலை கடல் பிரதேசம் கொந்தளிப்பாகவுள்ளதால் மீனவர்கள், கடற் பிரயாணிகள், கடலை அண்டிய பகுதியில் வாழும் மக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றது.
மீனவர்கள் கிண்ணியா, மூதூர், திருகோணமலை பிரதேசங்களில் தங்களது மீன்பிடி வலைகளையும் வள்ளங்களையும் கரையோரத்தில் ஏற்றி வைத்துள்ளதை கரையோரத்தில் அவதானிக்க முடிகிறது.
கிழக்கில் அம்பாறை மற்றும் மட்டக் களப்பு மாவட்ட கரையோர பகுதிகளில் கடலின் சீற்றம் நேற்று முதல் அதிகமாக காணப்படுகின்றன.
மேலும் சூறாவளியின் காரணமாக கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கிழக்குப் பள்ளிவாசல்களில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆழ் கடலுக்குச் சென்ற படகுகளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வாழைச்சேனை துறைமுகத்தில் உள்ள கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கால நிலை கடந்த இரு தினங்களாக மப்பும் மந்தாரமுமாக காணப்படுவதோடு இடையிடையே மழை பெய்தும் வருகின்றது. இதனால் கிழக்கு மாகாணத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கவில்லை. இதனால் நேற்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பொதுச் சந்தைகளில் மீனுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது.

Friday, November 5, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்


எமது வாசகர்கள் அணைவருக்கும் இனிய
தீபத்திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.

Tuesday, November 2, 2010

வடக்கு, கிழக்கில் 1177 அபிவிருத்தி திட்டங்கள்; ரூ. 1028 மில். ஒதுக்கீடு.

கமநெகும திட்டத்தின் கீழ் இவ்வருடம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 1528 கிராம சேவகர் பிரிவுகளில் 1177 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்பட்டன. இதற்காக 1028 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க கூறினார்.
கம நெகும’ திட்டம் தொடர்பான அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் அமைச்சில் நடைபெற்றது.
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், 2010 ஆம் ஆண்டில் கமநெகும திட்டத்திற்கு 15,523 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு உட்பட நாடு பூராவும் உள்ள 10,483 கிராம சேவகர் பிரிவுகளில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
24,641 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு ள்ளதோடு 12,291 திட்டங்கள் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளன. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட 232 திட்டங்களில் 84 வீதமான திட்டங்கள் நிறைவடைந்துள் ளன.
யாழ். மாவட்டத்தில் 94 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதோடு இதற்காக 83.37 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் 19.75 மில்லியன் ரூபா செலவில் 77 திட்டங்களும், முலலைத்தீவு மாவட்டத்தில் 23.23 மில்லியன் ரூபா செலவில் 19 திட்டங்களும், மன்னார் மாவட்டத்தில் 98.13 மில்லியன் ரூபா செலவில் 42 திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் 808 கிராம சேவகர் பிரிவுகளில் 945 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு 821 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 835.63 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 87 வீதமான திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதோடு எஞ்சிய திட்டங்கள் இந்த வருட முடிவுக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.
இதில் கொங்கிரீட் வீதிகள் அமைக்கவே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதோடு கிராமிய மின்சார வசதி, நீர்ப்பாசனம், குடிநீர் வசதி, பொதுவசதி என்பவற்றுக்காகவும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

Monday, November 1, 2010

இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் சீன உதவி ஜனாதிபதி மஹிந்தவிடம் சீனப் பிரதமர் உறுதி.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்கை வெற்றிகெள்ள சீனா சகல வித ஒத்துழைப்பினையும் வழங்குமென சீனப் பிரதமர் வென்ஜியாபாவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையி லான முக்கிய பேச்சுவார்த்தையொன்று சீனாவின் சங்காய் நகரில் நடைபெற்றுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீதிபுனரமைப்பு உள்ளிட்ட எதிர்காலத்திட்டங் களுக்கு சீனா பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இதன்போது அந்நாட்டுத் தலைவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் துறைமுகம், விமான நிலையம் மற்றும் மின்சாரத்துறை செயற் திட்டங்களுக்கு சீனா உதவிகளை வழங்கி வருகிறது. அதே போன்று எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
சீனாவிற்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சீனப் பிரதமர் வென்ஜியாபாவோவிற்கும் மிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் சங்காயில் நடை பெற்றுள்ளது.
இதன் போது இருநாடுகளுக்குமிடையி லான நல்லுறவு, சீன நிதியுதவி மூலம் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத் தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழ்நிலையானது அபிவிருத்தி இலக்கு நோக்கிய பயணத்திற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளமை தொடர்பிலும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தமது பூரண ஆதரவை வழங்குவதாக சீனப் பிரதமர் உறுதியளித்துள் ளார்.
சுமுகமாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த் தையின் போது இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் அதனை மென்மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாகவும் இருநாட்டுத் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அதேவேளை, சீன நிதியுதவியுடன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டமான துறைமுக நடவடிக்கைகள் குறித்தும் விசேட கலந்துரையாடல் இடம் பெற் றுள்ளது.
சீனாவில் நடைபெறும் எக்ஸ்போ- 2010வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இருநாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் இரவு சிறப்பதிதியாகக் அந் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் மேற்படி விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.