Thursday, June 17, 2010

வடக்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கு 6800 மில்லியன் ஒதுக்கீடு வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

துரித அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக வட மாகாணத்தில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 6800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். உள்ளுராட்சி சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வடக்கிலுள்ள ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தலா 200 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு உள்ளுர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் இந்த நிதியை வழங்க வுள்ளது. இத்திட்டத்திற்கு உலக வங்கி கடன் உதவி வழங்கவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Wednesday, June 16, 2010

Friday, June 4, 2010

கிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளில் காணப்படும் குறைகளைக் கண்டறிய திடீர் பரிசோதனைக் குழு.

கிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளில் காணப்படும் குறைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்த்துவைக்கும் வகையில் திடீர் பரிசோதனைக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எம். சுபைர் இந்தக்குழுவை நியமித்துள்ளார். இதன் தலைவராக மாகாண வைத்திய அத்தியட்சகர் டொக்டர். குணாலன் பணியாற்றுவார். அமைச்சின் மேலதிகச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் இதில் பணிபுரிவர். நாளை முதல் மாகாண ஆஸ்பத்திரிகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்ளும் இந்தக் குழு அவற்றின் குறைபாடுகளை அமைச்சரின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டுவரும்.

Wednesday, June 2, 2010

தமிழ்க் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை அரசாங்கம் தகவல்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தனுடன் அண்மையில் உத்தியோகப்பற்றற்றயில் பேச்சுவார்த்தை ஒன்றில் நான் ஈடுபட்டேன். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் அண்மையில் பேச்சு நடத்தினார் என்று வெளிவந்த தகவல்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்மந்தனை அண்மையில் நான் சந்தித்து பேச்சு நடத்தினேன். இந்த சந்திப்பு உத்தியோகபற்றற்ற முறையில் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. இது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை என்று கூறலாம். காரணம் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முக்கியமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கின்றார். விரைவில் இது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறும். _