Thursday, December 30, 2010

கொழும்பு நகரில் பாதுகாப்புக் கெமராக்களின் செயற்பாடுகள் ஆரம்பம்.

சி.சி.டி.வி கெமராக்களின் ஊடாக கொழும்பு நகரை பல கோணங்களில் முழுமையாக கண்காணிக்கும் பணிகளை நேற்று(டிச29) பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களால் ஆரம்பித்து வைத்தார்.
சி.சி.ரி.வி கெமராக்களின் கட்டுப்பாட்டு அறை பொலிஸ் நலன்புரி சங்க கட்டிடத் தொகுதியின் ஆறாவது மாடியில் அமைந்துள்ளது.
கொழும்பு நகரில் மொத்தமாக 105 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள அதேவேளை அவற்றின் ஊடான கண்காணிப்பு நடவடிக்கைகளை 28 திரைகளின் ஊடாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து பார்வையிட முடியும். மேலும் பல நாட்களுக்கு இதன் காட்சிப் படங்களை சேகரிக்கும் தன்மையையும் இக் கெமராக்கள் கொண்டுள்ளன.
பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் தலைநகரில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள இப் பாதுகாப்பு நடவடிக்கை பொது மக்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.மேலும் இத்திட்டம் 227 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், வாகன நெரிசல்களை அவதானித்தல், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக குற்றவாளிகளை கைது செய்கின்ற போது குற்றவாளிகளை பின்தொடர்தல், வாகனங்களை அடையாளம் காணுதல், விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் செல்லல், கொலை, கொள்ளை, வாகன நெரிசல் போன்றவற்றை இந்த கெமராக்கள் மூலமாக துல்லியமாக அவதானிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா டெலிகொம், இலங்கை மின்சார சபை, மொரட்டுவைப் பல்கலைகழகம், மெட்ரோபொலிடன் நிறுவனம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவை பொலிஸ் திணைக்களத்திற்கு இத் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு வகையில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 29, 2010

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பரிசளிப்பு விழா மட்டக்களப்பில்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் 2010 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பரிசளிப்பு விழா நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஜே.கபூர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசாந்தன், இரா.துரைரத்தினம், இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணசபைப் பணிப்பாளர் கே.தவராஜா பலர் கலந்துகொண்டனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் 2010 ஆம் அண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும் வெற்றியீட்டிய இளைஞர் யுவதிகளுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கப்பட்டன.

Tuesday, December 28, 2010

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 60.8 மி.மீ மழை பதிவு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 60.8 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 60.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.இதனால் இங்கு வாழ்கின்ற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

Monday, December 27, 2010

தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் தேவைகளை முன்வைக்க வேண்டும் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக தமது தேவைகளை ஒரு குழுவாக ஆராய்ந்து ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என விஞ்ஞான அலுவல்கள் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.
அமரத்துவம் அடைந்த இலங்கையின் புகழ்பூத்த கலைஞர்களை நினைவு கூரும் நோக்கில் நேற்று முன்தினம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆராயும் உபகுழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரும் அடங்குகின்றனர்.
இவ் உறுப்பினர்கள் ஒன்றிணை ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தேவைகள் போன்ற வற்றை ஆராய்ந்து ஜனாதிபதி அவர் களிடம் கையளிக்க வேண்டும்.
ஜனாதிபதி அவர்கள் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடி யும்.
மாகாண மட்டத்திலும் கிராமிய மட்டத்திலும் மக்கள் சபை உரு வாக்கப்பட்டு அவற்றுக்குரிய நிர் வாகம், அதிகாரம், நிதி வசதிகள்
போன்றவை வழங்கப்படும். இதற் குரிய திட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படு த்தப்படும் என்றார்.
இந்நிகழ்வை, கலைஞான கேசரி எஸ்.கே. தங்க வடிவேல் ஒருங்கி ணைத்திருந்தார்.
வழக்கறிஞர் கே. பத்மநாதன் தலைமை தாங்கியிருந்ததுடன், பிர தம விருந்தினராக கிழக்கு மாகாண மக்கள் வங்கியின் முன்னாள் உதவிப் பொது முகாமையாளர் ரகு துரை சிங்கமும், கெளரவ விருந்தினராக கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதனும் சிறப்பு விருந்தினராக வானொலி நாடகத் தந்தை அமரர் சானாவின் புதல்வி திருமதி சுமதி பாலஸ்ரீதரனம் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் செல்வி துலக்ஷிகாவின் பக்திப் பாடல்களும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் பட்டிமன்றமும் நடைபெற்றன.

சுனாமி ஞாபகார்த்த தின நிகழ்வுகள் கல்முனையில்….


சுனாமி அனர்த்தத்தின்போது பேரழிவைச் சந்தித்த கல்முனையில். நிமிர்ந்து நிற்கும் பாண்டிருப்பு நினைவுத் தூபிக்கு மக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். அதேநேரம், கல்முனை முதலாம் குறிச்சி நினைவுத் தூபிக்கு பெண்கள் கதறி அழுது மலரஞ்சலி செலுத்துகின்றனர்.

Sunday, December 26, 2010

நாடு முழுவதும் விசேட பஸ் சேவை.

நத்தார் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் விசேட பஸ் சேவைகள் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவா; எல். ஏ. விமலரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளா; சந்திப்பில் தகவல் வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தகவல் தருகையில்
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக கிரிஸ்தவ மக்கள் அதிகமாக வாழக்கூடிய பிரதேசங்களுக்கு மாத்திரம் 1800 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வீதி விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 2000 பேர் மரணமடைகின்றனர். இவ்வாறான விபத்துக்களைத் தடுக்கவூம் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

Thursday, December 23, 2010

நத்தார் கொண்டாட்டம் மட்டக்களப்பு மாநகரசபையில்.

மட்டக்களப்பு மாநகர சபை ஒழுங்குசெய்த நத்தார் ஒளிவிழாவும், கலைநிகழ்வுகளும், விசேட ஆராதனையும் மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் மாநகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு, திருமலை மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோஸப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மெதடிஸ்த திருச்சபை, சுவிஸேஷ சபைகளின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டிருந்தனர்.
மாகரசபை உறுப்பினர்கள்,அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Wednesday, December 22, 2010

வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்லும்வரை மனிதாபிமான நடவடிக்கை பயங்கரவாதம் ஏற்படுத்திய துயர் நீக்கப்படும் ஜனாதிபதி.

வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்லும் வரை மனிதாபிமான நடவடிக் கைகள் தொடரும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளும் மனிதாபிமான நடவடிக்கைகளே என குறிப்பிட்ட ஜனாதிபதி; அப்பிரதேச மக்கள் மனதிலிருந்து பயங்கரவாதத்தின் துயர நினைவுகள் நீங்கி பிரிவினைவாத எண்ணம் இல்லாதொழியும் வரை மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.
நாம் யுத்தம் செய்யவில்லை, அவ்வாறு யுத்தம் செய்திருந்தால் பயங்கரவாதத் தலைவர் ஒழிக்கப்பட்ட போதே அது நிறைவு பெற்றிருக்கும். நாம் மனிதாபிமான நடவடிக்கைகளையே மேற்கொண்டோம். இந்த மனிதாபிமான நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் அது தொடரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தியதலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரியில் கெடட் பிரிவு உத்தியோகத்தர்களாக பயிற்சி பெற்ற 253 படை வீரர்கள் தமது பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் வெளியேறினர்.
இவர்கள் தமக்கான பதவி நிலையை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று தியதலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் பாதுகாப்பமைச்சரும் முப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே. ஜயசூரிய உட்பட உயர்மட்ட படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கெடட் பிரிவின் 68, 69, 71, 68 பீ. எஸ்.சி. 18 தொண்டர் படை மற்றும் கெடட் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களும் தமக்கான பதவி நிலையை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி; தோல்வியுற்ற பயங்கரவாதிகள் இன்றும் பல சர்வதேச நாடுகளில் முகாமிட்டுள்ளனர். இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு, நிராயுதபாணியான மக்களை எமது படையினர் கொலை செய்தனர் என்று கூறப்படும் குற்றச் சாட்டே நவீன ஆயுதமாகவுள்ளது. அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம்.
படையினர் மட்டும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இந்த நாட்டு மக்களும் பயங்கரவாதத்துக்கு எதிராக அணிதிரண்டனர். கடந்த 30 வருட காலம் அவர்கள் பயங்கரவாதத்தின் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து சளைக்காது பூரண பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.
அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கையில் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது. மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியாமையே நாம் அவர்களுக்குச் செய்யும் உயர் கெளரவமாகும்.
பயிற்சிகளை முடித்துக் கொண்டு இன்று வெளியேறும் இந்த இளைஞர்கள் நாட்டில் பயங்கரவாதம் உக்கிரமடைந்திருந்த போது பயிற்சியில் இணைந்தவர்கள். அதேபோன்று நாடு பற்றிய தீர்க்கமான சிந்தனையுடன் அவர்களது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை படைக்கு அனுப்பி தியாகங்களைப் புரிந்துள்ளனர்.
அவர்களுக்கு நாட்டு மக்களின் சார்பில் எனது கெளரவம் உரித்தாகட்டும்.
தியதலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரி வரலாற்றில் இடம்பிடித்த ஒன்றாகும். நாட்டைப் பாதுகாப்பதற்காக இக் கல்லூரி வழங்கியுள்ள பங்களிப்பு மிக உயர்வானதும் பாராட்டுக்குரியதுமாகும். இதுவரை இங்கு பயிற்சி பெற்றோர் மூன்று இராணுவத் தளபதிகளும் பாதுகாப்புச் செயலாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
தமது இறுதி சொட்டு இரத்தத்தையும் தாய் நாட்டுக்காக ஈந்த படைவீரர்களினால் தான் இன்று நம் நாடு உலகின் பாராட்டுக்களை பெறும் நாடாகியுள்ளது. அவர்களின் அளப்பெரிய அர்ப்பணிப்பை புதிய படை வீரர்கள் மதிக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டை நேசித்தனர். நீங்களும் இந்த நாட்டை நேசிக்க வேண்டும்.
நாட்டை நேசிக்காத ஒருவர் எத்தகைய திறமைகளைக் கொண்டிருப் பினும் பயனில்லை.
பிரிவினை வாதத்தைத் தோற்கடிக்க புறப்பட்டுள்ள நீங்கள் 60களில் ஆரம்பமான பிரிவினை வாதத்தையும் 70 களில் ஆரம்பமான பயங்கர வாதத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதைபற்றிய தெளிவு உங்களுக்கு மிக அவசியம். நாட்டுக்காக மனதால் மட்டுமன்றி அறிவுத் திறனையும் உச்சளவில் நீங்கள் உபயோகிக்க வேண்டும்.
திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியம். பல்வேறு விடயங்களைப் போன்று தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழியறிவும் முக்கியமானதாகும். படை வீரர்களுக்கு ஒழுக்கமே தலை சிறந்ததாகும். ஜனநாயகத்தை மதித்து செயற்படும் ஆசியாவின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட நாடு இலங்கை யாகும். பாதுகாப்புப் படையினரிடம் காணப்பட்ட ஒழுக்கமே எமது ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க உதவியது.
நாட்டின் சம்பிரதாயங்கள், கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும்.
இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு நீங்கள் தயாராக வேண்டும்.
அத்துடன் பெற்றோரை மதித்து அவர்களின் எதிர்பார்ப்பையும் ஈடேற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு.
எனது முதலாவது தெரிவும் இரண்டாவது தெரிவும் மூன்றாவது தெரிவும் எனது தாய் நாடே. அதே போன்று நீங்களும் தாய்நாட்டின் மீது கெளரவமும் அன்பும் செலுத்துவது அவசியம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Tuesday, December 21, 2010

படுவான்கரைப் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளமையினால் படுவான்கரை மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை முனைக்காடு பிரதேசத்தில் யானை தாக்குதல் நடத்தியதில், மீனவர் ஒருவருடைய தோணி ஒன்று முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
முனைக்காடு பிரதேசத்தினூடாகச் செல்லும் காஞ்சிரங்குடா ஆற்றில் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
வழமைபோல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த முனைக்காட்டைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் முதலை என நினைத்து தனது தோணியில் சவளால் அடித்த வேளை யானை அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்கிய யானை ஆற்றைக்கடந்து ஊருக்குள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பின் எல்லைப் பிரதேசத்திலுள்ள கிராமங்களில் யானைகள் அண்மைக்காலமாக நடத்திவரும் தாக்குதல்கள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் பல வீடுகள் சேதமடைந்துள்ளமையும் குறிப்படத்தக்கது.

Monday, December 20, 2010

சீரான பாதையில் இலங்கை பொருளாதாரத்தில் சாதனை மிகு வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபக்ஷ.

கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை யின் பொருளாதாரம் தொடர்பாக உறுதி யான நோக்கு அல்லது நிலையான செயற்பாடு இல்லாதிருந்த போதிலும் தற்போது இலங்கையின் பொருளாதாரத்தை சீரான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு தொடர்பான பொருளாதார செயற்பாடுகள் தொடர் பாக கருத்துத் தெரி விக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக் களத் தினால் 2010 ஆம் ஆண்டில் மூன் றாவது காலாண்டு தொடர்பான புள்ளி விபர அறிக்கை வெளியிடப்பட்டது.
அதற்கேற்ப மூன்றாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 8 சதவீதத்தினால் வளர்ச்சி யடைந்துள்ளது. இது இலங்கை ஒரு காலாண்டுப் பகுதியில் பெற்ற இரண்டாவது அதிகூடிய வளர்ச்சி வீதமாகும்.
இது தொடர்பாக மேலும் கருத்து கூறிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் குறிப்பிட்டதாவது,
கடந்த வருடம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.5 சத வீதத்துக்கு கட்டுப்படுத்தப்பட்டி ருந்தது. எனினும் இந்த வருடம் முதல் காலாண்டுப் பகுதி யில் 7.6 சதவீதமும் இரண்டாவது காலா ண்டில் 8.5 சதவீதமும் மூன்றாவது காலாண் டில் 8 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அனைத்து காலா ண்டு பகுதிகளிலும் வளர்ச்சி மட்டம் நாம் வருடத்தின் ஆரம் பத்தில் மதிப்பிட்ட இலக்குக்கு மேலாக இருந்தது. வருட ஆரம்பத்தில் நாம் 6.5 சதவீத வளர்ச்சியை இந்த வருடம் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்தோம். எனி னும் இவ்வருடம் 8 சதவீதத்துக்கு கிட்டிய வளர்ச்சியை பெற முடியும் என தெரிகிறது.

இந்த வளர்ச்சி பொருளாதாரத்தின் ஒரு பிரிவுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. யுத்தத்துக்கு பின்னர் எமது பொருளாதார அபிவிருத்தி நாட்டின் அனைத்து பிரிவு களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விவசாய பிரிவு 6.2 சதவீதத்தாலும் கைத்தொழில் பிரிவு 8.8 சதவீதத்தாலும் சேவைகள் பிரிவு 8 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.
நாட்டின் வயற் காணிகள் முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பிரதேசங்களிலும் புதிய கட்ட டங்கள் நிர்மாணிக்கப்படுவதை காண முடிகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி மட்டம் உயர்ந்துள்ளது.
முதலீடுகள் பாரிய வகையில் அதிகரித்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ் வருடத்தில் சரித்திரத்தில் இல்லாதவாறு அதிகரித்து வருகிறது. மஹிந்த சிந்தனையின் படி இலங்கையை ஆசியாவின் புதுமையாக மாற்றும் நோக்கத்தை எட்டும் அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் கடந்த காலத்தில் ஆரம்பித்த பல அபிவிருத்தித் திட்டங்கள் இப்போது நிறைவேற்றப்படும் நிலையில் உள்ளன. துறைமுகங்கள், விமான நிலையம், நீர்ப் பாசனம், மின்சாரம், பெருந்தெருக்கள் தொடர்பான பல திட்டங்கள் அடுத்த வரு டத்தில் முழுமைபெறும். அதேபோல் தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீடுகளும் அதி கரித்து வருகின்றன. இவ்வாறான நிலை யில் 2011 இல் மிகவும் உயர்ந்த வளர்ச்சி மட்டத்தை எட்டமுடியும். அவ்வாறான நிலையை தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்க்கப் படுகிறது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Sunday, December 19, 2010

மட்டக்களப்புக்கு உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் விஜயம்.

மட்டக்களப்புக்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் செய்த உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி நகோஸி ஒகொன்ஜோ பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் தமது நிதியுதவியில் செயற்பட்டவரும் தமது நிதழி உதவியிலான மீள் எழுச்சித்திட்டக் கண்காட்சியை ஆரம்பித்துவைத்து திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.
இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதியை நேற்றுச் சந்தித்து உரையாடிய அவர், இன்று மட்டக்களப்பில் தமது செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டு வரும் திராமடுக் கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொணடார்.
இதன் போது நடைபெற்ற கலந்துரையாடலில், திராய்மடு மக்களிடம் அவர்களின் குறைகள், தேவைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது, உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Friday, December 17, 2010

பல்கலைக்கழக பேராசிரிர்களுக்கு விஷேட கௌரவப் பட்டம் ஜனாதிபதியினால் கையளிப்பு.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் விஷேட கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற நடைபெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவர்களுக்கான கௌரவப் பட்டங்களை வழங்கினார்.
இலங்கை பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கௌரவப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் கிடைக்கக் கூடிய அதிசிறந்த ஆய்வுகளுக்கான இந்த விஷேட கௌரவப் பட்டத்தை இம்முறை ஆறு புத்திஜீவிகள் பெற்றுக்கொண்டனர்.

Thursday, December 16, 2010

நாடு முழுவதும் பாதுகாப்பு கெமரா கொழும்பில் டிசம்பர் 21முதல் அமுலுக்கு.

நாடு முழுவதும் பாதுகாப்பு கெமராக்களை பொறுத்தும் திட்டத்தின் கொழும்பு மாநகருக்கான நடவடிக்கை டிசம்பர் 21முதல் அமுலுக்கு கொண்டுவரப்படுகின்றது.
அதன்படி கொழும்பு உட்பட நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
பாதாள உலகக் குற்றவாளிகள் திருட்டுக் கும்பல் கப்பம் பெறுவோர் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோரை மடக்கிப் பிடிப்பதற்கு ஏற்ற வகையில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றது.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இந்த முறைமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கிணங்க இலங்கையிலும் கையாளப்படவுள்ளது.
தற்போது கொழும்பு நகரிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள் எதிர்வரும் 21ம் திகதி பி.ப. 1.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக இயங்குவதற்கு ஏற்ற வகையில் ஆரம்பித்து வைக்கப்படும்.
இந்தப் பாதுகாப்பு கெமரா பொருத்தும் திட்டம் இதற்கு பல வருடங்களுக்கு முன்னர் முன் மொழியப்பட்ட போதிலும் அதற்காக செலவாகும் தொகை அதிகமாகக் காணப்பட்டமையால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனினும் பல்வேறு குற்றச் செயல்களைச் செய்துவிட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிப்பதற்காகவும் நாட்டிலே குற்றச் செயல்கள் இடம்பெறுவதை முற்றாகத் தடுப்பதற்காகவூம் பாதுகாப்பு கெமரா பொருத்தப்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வலியூறுத்துகின்றார்.
இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற எச்.எஸ்.பீ.சி. வங்கியில் 7 கோடி ரூபா கொள்ளை உட்பட நாட்டிலே நிகழ்ந்த பாரிய கொள்ளைகள் தொடர்பான சு+த்திரதாரிகளை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கான காரணம் பாதுகாப்புத் துறையினரிடம் சிக்காது பல உபாயங்களை திருட்டுத்தனமாக பாவித்து செயற்படுவதாகும். எனினும்இ பாதுகாப்பு கெமரா பொருத்தப்பட்டதன் பின்னர் நாள் முழுவதிலும் அனைத்து விடயங்களும் வீடியோவில் பதிவாகும்.
கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தத் திட்டமானது அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதிற்கும் விஸ்தரிக்கப்படும். இந்த பாதுகாப்பு கெமரா பொருத்தப்பட்டதன் பின்னர் இதனை கண்காணிப்பதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை உள்ளடக்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 15, 2010

வரிச் சலுகை அடிப்படையில் அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி.

அரச சேவையில் அரச தொழில் முயற்சிகளில் தொழில்புரியும் நிறைவேற்று தரம், நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் தொழில்சார் பதவி நிலைகளை வகிக்கும் உத்தியோகத்தர்களுக்கு சலுகை நிபந்தனையடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும், புதிய உதிரிப்பாகங்களை பயன்படுத்தி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
25,000 டாலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 50 முதல் 70 வீத வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் நிதி அமைச்சு சகல அமைச்சுக்களுக்கும், அமைச்சின் செயலாளர்களுக்கும் மாகாணசபை பிரதம செயலாளருக்கும் சுற்றிக்கை மூலம் அறிவித்துள்ளது.
1000 சீ.சீ. புதிய வாகன இறக்குமதிக்கு 50 வீத வரியும், 1600 சீ. சீ. வாகனத்துக்கு 55 வீத வரியும். 2000 சீ. சீ. வாகனத்துக்கு 60 வீத வரியும், 2600 சீ. சீ. வாகனத்துக்கு 70 வீத வரியும் அறவிடப்படும்.அரச சேவையிலுள்ள பதவி நிலை உத்தியோகத்தர்கள் அரச சேவையில் தொடர்ந்து ஆறு வருடங்கள் சேவையில் ஈடுபட்டுவருபவர்களாக இருத்தல் வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் கல்விசார் பதவி நிலை உத்தியோகத்தர்களும், அரச தொழில் முயற்சி சேவையில் ஈடுபட்டுள்ள பதவி நிலை உத்தியோகத்தர்களும் 12 வருடங்கள் தொடர்ந்து பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். அரச வங்கி உத்தியோகத்தர்கள் இதில் சேர்க்கப்பட வில்லை.

Tuesday, December 14, 2010

யாழ், கிளிநொச்சியில் 207 கோடி செலவில் பாரிய குடிநீர்திட்டம் மூன்றரை இலட்சம் மக்களுக்கு நன்மை.

207 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கான பாரிய குடிநீர் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்றரை இலட்சம் மக்கள் நன்மையடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பல்கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த பாரிய குடிநீர் விநியோகத் திட்டத்தின் முதற்கட்டம் 2015ம் ஆண்டளவில் நிறைவடையவுள்ளது.
இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் இதற்கான பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளன.
யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவக்கச்சேரி, கைதடி, நாவற்குழி, நல்லூர், கோப்பாய், கரவெட்டி, சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர், அச்சுவேலி, ஆவரங்கால், பருத்தித்துறை, பளை, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு, மருதங்கேணி தீவுப்பகுதிகள் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.
இரணமடு நீர்த்தேக்கத்திலிருந்து தண் ணீர் கொண்டு செல்லப்பட்டு பரந்தன் பகுதியில் வைத்து பம்ப் பண்ணப்பட்டு பரந்தன் மற்றும் பளை பகுதியிலுள்ள தேக்கங்களில் வைத்து சுத்திகரிக்கப்பட்ட பின்னர் யாழ் குடா நாட்டிற்கும், கிளி நொச்சிக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நீர்விநி யோகத் திட்டம் 20,000 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜய்க்கா போன்றன இதற் கான நிதியுதவிகளை வழங்கவுள்ளன. இதன் மூலம் 3 இலட்சம் மக்கள் நன்மையடைய வுள்ளனர்.
பருத்தித்துறை நீர்விநியோகத்திட்டம் ஐ.எப்.ஆர்.சி மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வுள்ளன. இதற்கென 515 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் 20 ஆயிரம் மக்கள் நன்மையடையவுள்ளனர்.
வல்வெட்டித்துறை நீர்விநியோகத் திட்டம் உலக வங்கியின் 225 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட வுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் மக் கள் நன்மையடையவுள்ளனர் என்றார்.
இதேவேளை, மருதங்கேணியிலுள்ள 10 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் விநியோகிக் கும் பொருட்டு 25 மில்லியன் ரூபாவும், நெடுந்தீவிலுள்ள 4 ஆயிரம் குடும்பத்திற் கென 12.75 மில்லியன் ரூபாவும் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்குத் தேவையான சகல ஆலோசனைகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் வழங்கி வருவதாக குறிப்பிட்ட அரசாங்க அதிபர், இத்திட்டத்திற்கான சாத்தியக் கூற்று ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வுதியத் திட்டம்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் களுக்கு ஓய்வுதியத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி அதற்கான ஆவணங்களை நிதியமைச்சுக்குக் கையளிக்கும் நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சமுர்த்தி உத்தியோக த்தர்கள் ஓய்வு பெற்றதும் அவர்களை சமுர்த்தி உதவி பெறுவோர் அணியில் இணைய இடமளிக்கமாட்டோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 11 வது வருடாந்த மாநாடு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்;
திட்டமிட்ட செயற்பாடுகளின் மூலம் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் எதிர்காலத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுமையாக அழிக்கப்பட்டி ருந்தன. அப்பிரதேசங்களை நாம் மீள கட்டியெழுப்பி வருகிறோம். 30 வருடகாலம் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தலை நிமிர்வதற்கு நாம் வழிவகை செய்ய வேண்டும். ஏனைய பிரதேச மக்கள் போன்று சுதந்திரமாக வாழக்கூடிய உரிமையையும் சூழலையும் அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும். அதனை நாம் நிறை வேற்றுவோம்.
2012 ஆம் ஆண்டுக்குள் நம் நாட்டில் சகல கிராமங்களுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன் வீதிகள், பாட சாலைகள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட அனைத்தையும் மீள கட்டியெழுப்புவோம். பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் பல தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை எதிர்கால சந்ததிக்கான முதலீடுகளாகும்.
போதைப்பொருள் மூலம் இருவர், மூவர் கோடீஸ்வரராகின்றனர். எனினும் இலட்சக்கணக்கான அப்பாவி இளைஞர்கள் அதற்குப் பலியாகின்றனர். அவ்வாறு இளைஞர்கள் பலியாவதைத் தடுப்பதா. அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்குவதா என்பதே எம்முன் எழும் கேள்வியாகும். நாட்டை இந் நிலையிலிருந்து மாற்ற வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் நாடு பயங்கரவாத யுத்தத்தை எதிர்கொண்டது. சமூகங்கள் அச்சத்தில் வாழ்ந்த யுகம் அது. நாம் அந்த சூழலை இல்லாதொழித்து மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தோம். மக்களின் சுதந்திரத்திற்காக எமது சுதந்திரத்தை இழந்தோம். எனினும் இன்று நாம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி னோம் என்ற திருப்தியை அடைய முடிகிறது.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும். மக்களுக்கு மிக நெருக்கமாக சேவை செய்யக்கூடியவர்கள் நீங்களே. இன்று சிலர் தமக்கான பொறுப்பினை மறந்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு முன்வராத தொழிற்சங்கங்கள் இன்றுள்ளன. சில தொழிற்சங்கத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை வழங்கக்கூடாது என்கின்றனர். அதற்கான கடிதங்களை அனுப்புகின்றனர். அத்தகையோருக்கு அங்கு பெருமளவு பணம் கிடைக்கின்றது.
அவர்கள் நாட்டையும் இனத்தையும் காட்டிக்கொடுப்பவர்கள். நாம் எங்கு சென்றாலும் நாட்டிற்கு கெளரவமளிப்பவர்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்றைய இந்நிகழ்வில் மேற்படி தொழிற்சங்க ஊழியர்கள் சிலருக்கு கடன் உதவிகளும் சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டன.

Monday, December 13, 2010

தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் என்ற தகவலில் உண்மையில்லை ஆளும் தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்படவேண்டும் என அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள்,

விநாயகமூர்த்தி முரளீதரன் - பிரதியமைச்சர் (மீள்குடியேற்றம்)

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் தேசிய கீதமானது ஒரு மொழியிலேயே பாடப்படுகிறது. ஆனால் இலங்கை அரசியல் அமைப்பின் படி இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடும் முறை உள்ளது.
இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானமானது நம்பகத் தன்மையற்றதாகும்.

பி.திகாம்பரம் - நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்படும் என்ற தகவல் உண்மையற்றது. அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படுமாயின் எமது எதிர்ப்பை நாம் வெளியிடுவோம்.

தொழில் பெற்றுத் தருவதாக பண மோசடி மாகாண சபை உறுப்பினர்கள் 3 பேர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சுகாதார சுத்திகரிப்பாளர் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட மாகாண சபை உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு நாளை செவ்வாய்க்கிழமை கூடவிருக்கின்றது. இக்கூட்டத்தின் போது இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கான குழு நியமிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இக்குழுவின் விசாரணையின் அடிப்படையில் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதும் அவர்களை மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க சுகாதாரத் துறைக்கென சுகா தார சுத்திகரிப்பாளர்களாக 850 பேர் நேற்று சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இவர் களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் கொழும்பு – 7 லுள்ள ஜோன் டி சில்வா கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிடுகையில், சுகாதார சுத்திகரிப்பாளர் தொழில் பெற் றுத் தருவதாக இரு மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றரை இலட்சம் ரூபா படி இருவரிடமும், மற்றொருவரிடம் 75 ஆயிரம் ரூபாவை மற்றொரு மாகாண சபை உறுப்பினரும் பெற்றுள்ளனர். இவர்கள் பணம் பெற்றதற்கும், அப்பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டதற்குமுரிய ஆவணங்கள் தம்மிடமுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ல. சு. கட்சியின் மத்திய குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை அரசாங்க சுகாதாரத் துறையில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி வேறு எவராவது பணம் பெற்றிருந்தால் அவர்கள் தொடர்பான தகவல்களையும் ஆவணங்களையும் தமக்கு வழங்குமாறும் அவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Sunday, December 12, 2010

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு வரவேற்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையின் எதிர்காலத்திற்குச் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
தமிழ்த் தரப்பினர் மீது அரசாங்கம் நம்பிக்கை வைக்கவும், அரசாங்கத்தின் மீது தமிழ்த் தரப்பினர் நம்பிக்கை கொள்ளவும் கூட்டமைப்பின் மனமாற்றம் வழிவகுத்துள்ளதாகத் தமிழ்த் சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியால் மட்டுமே தீர்வொன்றை வழங்க முடியும் என்ற ஏனைய தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மனமாற்றம் வலுப்படுத்தி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம், தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு தலைமையில் அரசாங்கத் திற்குச் சமர்ப்பிக்கும் தீர்வு ஆலோசனை களுக்குச் சிங்களத் தலைவர்களின் ஆத ரவைப் பெற்றுத் தருவதாகவும் அவர்கள் கூறினர்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிரதியமைச்சர்கள் பiர் சேகுதாவூத், முத்து சிவலிங்கம், ஐ.தே.க. எம்.பி. திருமதி விஜயகலா மகேஸ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நல்ல ஓர் அறி குறியாகும். அவர்கள் முரண்பாட்டு அரசியலிலிருந்து விடுபட்டுள்ளார்கள். இதனூடாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வு ஏற்படும்.
முதலில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசியல் தீர்வினையும் கட்டம் கட்டமாக முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் தாய்மொழியில் கருமமாற்றவும் வழிசமைக்கப்படவேண்டும். அதன் பின்னர் தீர்வுக்கான முடிவை எடுக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு சாதகமாக செயற்படுவதன் ஊடாக அரசாங்கத்தின் மீது தமிழ்த் தலைவர்களுக் கும், இவர்கள் மீது அரசுக்கும் பரஸ் பரம் நம்பிக்கை ஏற்படும். அதன் பின்னர் அதிகாரங்களைப் பகிர்வதைப்பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு,
ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பொதுவான தீர்வு ஆலோசனையை முன்வைக்க முடியும். அப்போது சிங்களத் தலைவர்களின் ஒத்து ழைப்பை நாம் பெற்றுக்கொடுப்போம். தீர்வு ஆலோசனையை முன்வைத்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து முடிவு காணலாம்.
பிரதியமைச்சர் பiர் சேகுதாவூத்
‘தமிழ்த் தேசிய அரசியல் தருணத்திற்கு ஏற்ப முடிவுகளை மேற்கொண்டு பயணித் திருக்கிறது. இலங்கை தமிழரசுக் கட்சி காலோசிதமான முடிவுகளை இதற்கு முன்பும் மேற்கொண்டிருக்கிறது. அரசாங் கத்தின் வலுவும் போருக்குப் பின்னரான நிலையும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த மாற்றம் இலங்கைக்கு சாதகமான ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. புலிகள் இல்லாத நிலையிலும் கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஜனநாயக செயற்பாட்டை வலுவாக்க முடியும்.
அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பும் இரண்டு விடயங்களில் இணை ந்த குழுவாக செயற்பட இணங்கியுள்ளன. அரசியல் தீர்வினை ஆராய்வதற்கான ஒரு குழுவும், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் செயற்பாட்டுக்கான ஒரு குழுவும் செயற்படவுள்ளமையானத் ஆரோக்கியமான அரசியல் மாற்றமாகும்.
பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்
மக்களுக்கான அபிவிருத்தியை அரசாங் கத்துடன் இணைந்து செயற்படுத்த வேண் டும். அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு மகிழ்ச் சியளிக்கிறது. அரசுக்கும் கூட்டமைப்புக்கும் சாதகமான புரிந்துணர்வு ஏற்பட வழிவகுக் கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை கள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
கூட்டமைப்பு இவ்வாறு செயற்பட வேண்டுமென்று பல தடவை கோரிக்கை விடுத்திருக்கிறேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
விஜயகலா மகேஸ்வரன் ஐ.தே.க. எம்.பி
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிப் படுத்தியுள்ள நல்லெண்ணத்தை அரசாங்கம் உரிய முறையில் மதித்துச் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் இனியும் உரி மைக்காகப் போராட முடியாது. அரசாங்கம் தமிழ் மக்களுடன் இனிமேலும் முரண் படாமல் உரிமைகளை வழங்கவேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மக்களின் நலன் கருதிய செயற்பாட்டைத் தொடர வேண்டும்.
கிழக்கு முதல்வர் சி. சந்திரகாந்தன்
தமிழ் மக்களுக்கான சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசுக்கே முடியும் என்பதை தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுதியாக நம்புகிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இன்று அரசுடன் இணைந்து செயற்பட முன்வந் திருப்பது இந்த நம்பிக்கையை மேலும் வலுவூட்டுவதாகவே நாம் கருதுகிறோம்.
இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களித்திருப்பது தாங்கள் இந்த மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு நிலை மையை உருவாக்கித் தரவேண்டும் என்ற காரணத்திற்காகவே என்பதை நாம் மறந்து விடமுடியாது.
எனவே, அந்தமக்களுக்கான தீர்வை எதிரணி அரசியல் செய்துகொண்டும் எந்நேரமும் அரசுடன் முரண்பட்டுக் கொண் டும் பெற்றுக்கொடுத்துவிட முடியாது. அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் பலம் வாய்ந்ததாக அமைந் துள்ளது. தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதிலும் அரசாங்கம் உறுதியுடன் செயற்படும் இந்த நிலையில் தமிழ்க் கட்சிகளும் அரசுக்கு பூரண ஆதரவை வழங்குகிறது என்பது மிகவும் பாராட்டத்தக்க விடயம்.
கடந்த காலங்களில் விடுதலைப் புலி கள் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான ஆதரவின் காரணமாக அவர்கள் செய்த சில நியாயமற்ற அநீதிகளையும், நியா யப்படுத்த வேண்டியவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. எனி னும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்தது முதல் துணிச்சலாக புலிகளின் நியாயமற்ற செயல்களை கண்டித்தது.

வாகன விபத்தில் மாணவன் பலி.

புசல்லாவ சரஸ்வதி மகாவித்தியாலய மணவன் ஒருவன் வாகன விபத்தில் ஸ்தலத்தில் பலியான சம்பவம் ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது.
புசல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பில் கல்வி பயிலும் மணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா-கம்பளை பிரதான வீதியில் புசல்லாவ சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து கொத்மலை நோக்கிப் பயணித்த லொரியொன்றுடன் மோதுண்ட போதே மாணவன் பலியாகியுள்ளான்.
சடலம் தற்போது புசல்லாவ வஹ-கபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Friday, December 10, 2010

ஒரு இலட்சத்து 42 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி கணித, விஞ்ஞானத்தில் யாழ்.மாணவர்கள் முதலிடம்.

இம்முறை வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 381 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இருந்தபோதும், வெட்டுப் புள்ளி அடிப்படையில் சுமார் 22 ஆயிரம் மாணவர்களுக்கே தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் வாய்ப்புள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இப் பரீட்சைக்கு தமிழ் மொழிமூலத்தில் தோற்றிய மாணவர்களுள் கணிதப் பிரிவில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுருநாதனும் உயரிரியல் விஞ்ஞான மாணவர்களுள் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலனும், கலைப்பிரிவில் நீர்கொழும்பு நியுஸ்டெட் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த அமீருல் ஹம்சா பாத்திமா சஸ்னாவும் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. இப்பரீட்சையில் வர்த்தகப்பிரிவில் தோற்றிய மாணவர்களுள் தமிழ் பேசும் மாணவர்கள் எவரும் முதல் 10 இடங்களுக்குள் வருமளவுக்கு சித்தியடையவில்லை என்பதும், இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 2 இலட்சத்து 30ஆயிரத்து 237 மாணவர்களுள் 23ஆயிரத்திற்கு மேற்பட்டோர் 3 பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
2010ஆம் ஆண்டுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ. . உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களுள் உயிரியல் பிரிவில் தோற்ற 21,459 பேரும் கணிதப் பிரிவில் தோற்றியவர்களுள் 12,606 பேரும் வர்த்தகப் பிரிவு மாணவர்களுள் 35,571 பேரும் கலைப் பிரிவில் 72,745 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுள் பாடசாலைகளினூடாக தோற்றிய 120,256 மாணவர்களும் 22,125 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் தகுதியை 1 இலட்சத்து 42 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ள போதிலும் பல்லைக்கழக வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையிலேயே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதன் அடிப்படையில் நோக்கினால் சுமார் 22 ஆயிரம் பேரே பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பினை பெறும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக 4,384 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுளனர். அதாவது விஞ்ஞானப்பிரிவில் 367 பேரும் ,கணிதப்பிரிவில் 404 பேரும் வர்த்தகப் பிரிவில் 1,576 பேரும் கலைப்பிரிவில் 2,037 பேரும் 3 ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் 23,420 மாணவர்கள் 3 பாடங்களில் எஸ் சித்தியையேனும் பெறத் தவறியுள்ளனர்.

Thursday, December 9, 2010

மாணவர்களுக்கு 2011 ஆம் ஆண்டிற்கான இலவச பாடநூல் வழங்கும் தேசிய வைபவம்.

அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 41 இலட்சம் மாணவர்களுக்கு 2011 ஆம் ஆண்டிற்கான இலவச பாடநூல் வழங்கும் தேசிய வைபவம் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் திருகோணமலை உவர்மலை விவேகா னந்த மகா வித்தியாலயத்தில் நேற்று (08) இடம்பெற்றது. அதன் போது கல்வி அமைச்சர் பார்வை இழந்த கல்வி கற்பதில் திறமைமிக்க மாணவர் ஒருவருக்கு பாடநூல்களை வழங்கினார். இம்முறை உயர் தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்திலே முதலாம் இடம்பெற்ற மூன்று மாணவர்களும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Wednesday, December 8, 2010

வெளிநாட்டு அழுத்தங்களை பொருட்படுத்தாது நாட்டு நலனை கருதி முடிவுகளை எடுத்தவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஜனாதிபதி.

வெளிநாட்டவர்களின் அழுத்தங்களைப் பொருட்படுத்தாது நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை முன்நிறுத்தியே முன்னாள் பிரதமர் மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா முடிவுகளை எடுத்தார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
உலகின் முதலாவது பெண் பிரதமராக மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றதன் ஐம்பதாவது ஆண்டு நினைவு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பு – 7லுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பிரதமராக நியமனம் பெற்றமை இலங்கைக்கு மாத்திரமல்லாமல் முழு உலகுக்குமே பெரும் கெளரவமாகும்.
இதன் மூலம் முழு பெண் சமுதாயத்திற்கும் கெளரவமும் அந்தஸ்தும் கிடைக்கப்பெற்றது. எமது மறைந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவை முன்மாதிரியாகக் கொண்டுதான் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மாகிரட் தட்சர் போன்றோர் பிரதமர்களாக உருவாகினர்.
முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் அரச தலைமைப் பதவியான பிரதமர் பதவியைப் பொறுப்பெடுத்தார். 1956ம் ஆண்டில் முன்னாள் பிரதமரான மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா விட்டுச் சென்ற இடத்திலிருந்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்தார்.
அவர் ஒரு முன்மாதிரிமிக்க அரசியல் தலைவராக மாத்திரமல்லாமல் அன்பு நிறைந்த சிறந்த தாயாகவும் விளங்கினார். இவர் வெளிநாட்டு அழுத்தங்களைப் பொருட்படுத்தாது நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை முன்நிறுத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்தார். குறிப்பாக பாடசாலைகள், பெற்றோலிய நிறுவனம், காப்புறுதி நிறுவனம் என்பவற்றை அரச உடைமையாக்கினார்.
காணி உச்ச வரம்பு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவ்வாறான நடவடிக்கைகளை கண்டு, கோதுமை மாவுக்கு வழங்கிவரும் மானியத்தை நிறுத்தப்போவதாக வெளிநாட்டினர் அச்சுறுத்தினர். இருப்பினும் அந்த அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது தமது தீர்மானங்களை துணிகரமாக முன்னெடுத்தார்.
காணி உச்ச வரம்பு சட்டத்தின் மூலம் தமக்கு நஷ்டம் ஏற்படுவதையும் பாராது நாட்டு மக்களின் நலன் கருதி அச்சட்டத்தை செயலுருப்படுத்தினார்.
இவற்றின் விளைவாக சில சக்திகள் அவருக்கு எதிராக செயற்பட்டன. இருப்பினும் நாட்டின் ஏழை மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே தமது அனைத்து முடிவுகளையும் அவர் எடுத்தார்.
அவரது அரசியல் ஞானம், வெளிநாட்டுக் கொள்கை என்பவற்றை மதிக்கின்றோம். அவரது இந்த கொள்கையின் பயன்களை இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.
நாம் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அன்று சிறுகுழந்தைகளாக இருந்து முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை வரவேற்றவர்கள் இன்று அந்தந்த நாடுகளின் தலைவர்களாக விளங்குகின்றனர்.
அவர்கள் மறைந்த முன்னாள் பிரதமரை நினைவு கூருகின்றனர்.
மறைந்த முன்னாள் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசியல் நோக்கங்களை பின்பற்றி அவர் தலைமை வகித்த ஸ்ரீல.சு. கட்சியைக் கட்யெழுப்பவென நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
நான் தேர்தலில் போட்டியிட 1970ல் வேட்பு மனு குழுவுக்கு முன்பாக நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்த சமயம் அங்கிருந்த அன்றைய சிரேஷ்ட அமைச்சர்கள் என்னை விடவும் எனது சகோதரனை அபேட்சகராக நியமிக்கவே விரும்பினர்.
இருப்பினும் மறைந்த முன்னாள் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா என்னையே அபேட்சகராக நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த நிகழ்வு இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது.
இதேபோல் என்னை ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பு பாராளுமன்ற உறுப்பினராக நியமித்த சமயம் நான் மாவட்ட செயலாளரிடம் பதவியைப் பொறுப்பெடுக்க சென்ற சமயம், மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தொலைபேசி ஊடாக மாவட்ட செயலாளருடன் தொடர்புகொண்டு ‘மஹிந்தவை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். இவ்வாறு தான் ஏனையவர்களுடனும் அவர் அன்பாகவும், ஒரு சிறந்த தாயாகவும் நடந்துகொண்டார்.
அவர் பிரதமராக பதவியேற்ற ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியாகும் இந்த சந்தர்ப்பத்தில் அவரது வழிகாட்டல்களை பின்பற்றி தாய்நாட்டின் அபிவிருத்திக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க எமது அரசாங்கமும், கட்சியும் ஒருபோதும் பின்னிற்காது என்றார்.
இந்நிகழ்வின்போது முன்னாள் பிரதமர் மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தொடர்பான நூலொன்றும் வெளியிடப்பட்டது.
இந்நூலின் முதல் பிரதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கி வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, சுனேத்திரா பண்டாரநாயக்கா, பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, ரவூப் ஹக்கீம், மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த், பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார் கள்.

Tuesday, December 7, 2010

கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஜனவரியில் விவாதிக்க அரசாங்கம் தீர்மானம்.

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் வகையில் தேசத்துரோக கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எம்.பிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விரை வில் இந்த பிரேரணை சபா நாயகரிடம் கையளிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் விவாதிக்க எடுக்கப்பட உள்ளதாக ஐ.ம.சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் நேற்று தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டிடத்தின் குழு அறை ஒன்றில் நடைபெற்றது. யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையை விசாரணைக்குட் படுத்த வேண்டும் என கருஜயசூரிய எம்.பி. கூறியுள்ள கருத்து தொடர் பாக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த இந்த ஊடக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமை ச்சர் விமல் வீரவன்ச, கரு ஜயசூரிய வுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வந்து கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஜனாதிபதியையும் படை வீரர்களையும் சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண் டனை வழங்கவே ஐ.தே.க. இவ் வாறு குற்றச்சாட்டு தெரிவித்துள் ளது.
தேசிய உடையணிந்து தேசத்து ரோக செயலில் ஈடுபட்டு வரும் கரு ஜயசூரியவின் முக மூடியை நாட்டு க்கு வெளிப் படுத்துவோம் என்றார்.
மேற்படி பிரேரணை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு விவாதத்திற்கு காலம் ஒதுக்க ப்படும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார்.

Sunday, December 5, 2010

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிம்மதியைத் தொலைத்துவிடாதீர்கள் புலம்பெயர் தமிழருக்கு பிரபா, திகா வேண்டுகோள்..

பிரித்தானியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபா கணேஷன் மற்றும் பீ. திகாம்பரம் ஆகியோர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தனர்.
புலம்பெயர் தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக இருந்தால், வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முன்வரவேண்டுமென்று நேற்று (04) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பிரித்தானியாவின் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்றிருந்த ஜனாதிபதிக்கு எதிராக புலம் பெயர்ந்தவர்களில் ஒரு சிலராலும் சில சிங்கள அமைப்புகளாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் தெரிவித்தார்.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில்:
இன்றைய யுத்தத்திற்கு பின்பான காலகட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகளால் பாதிப்படைவது இலங்கை நாட்டில் வசிக்கும் அனைத்து தமிழ்மக்களேயாகும். இதனை உணர்ந்து இப்படியான செயல்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நிறுத்துவது ஆரோக்கியமானதாகும்.
யுத்தத்திற்கு முன் தமிழர்களை சிங்கள மக்கள் சந்தேக கண்ணோட்டத்தில்தான் நோக்கினார்கள். அனைத்து தமிழர்களையும் புலிகளாகவே நோக்கினார்கள். இதனால் வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தென்னிலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் மிகவும் இன்னலுக்குள்ளானார்கள். இதனை இலங்கை மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைவரும் அனுபவித்துள்ளோம்.
இன்று யுத்தம் நிறைவுற்று விடுதலைப் புலிகள் முற்றாக வீழ்ச்சியடைந்து போயுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் யுத்தத்திற்கு பின்னரான கடந்த ஒரு வருட காலத்தில் தமிழ் மக்களை சகோதர மனப்பான்மையுடன் சிங்கள மக்கள் பார்க்க தொடங்கியுள்ளார்கள். இரு இனங்களுக்கிடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகின்றது. இலங்கையர் நாங்கள் என்ற நிலைப்பாட்டில் அபிவிருத்தி நோக்கி நாம் அனைவரும் கைகோர்த்து செல்ல தேவையேற்பட்டுள்ள இந்த தருணத்தில் புலம் பெயர்ந்த ஒரு சிலரது செயல்பாட்டினால் மீண்டும் சிங் கள மக்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதி ரான நிலைப்பாட்டை இது ஏற்படுத்துகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் உடன் பிறப்புகளுக்கு நாம் விடுக்கும் அன்பான வேண்டுகோள், தயவு செய்து எமது இன்றைய அரசியல் கள நிலவரங்களை அறிந்து செயல்படுங்கள். உண்மையிலே எமது இலங்கை மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பாட சாலைகளை கட்டியெழுப்ப வேண்டும். அங்கு வீடுகள் இன்றி வசிப்பவர்களுக்கு வீடுகளை கட்டித்தர முன்வரவேண்டும். அதுமட்டுமன்றி அப்பகுதிகளில் தமது முதலீடுகளை செய்து பொருளாதார அபிவிருத்திகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் எமது பிரச் சினை எமது ஜனாதிபதி மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டு சக்திகள் எமக்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. எவ்விதமான தீர்வோ, அபிவிருத்தியோ எமது ஜனாதிபதி அவர்களுடன் பேசியே தீர்க்க வேண்டும் என்பது இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இதனை புலம் பெயர்ந்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
திகாம்பரம் எம்.பி.
நாடாளுமன்ற உறுப்பினர் பீ. திகாம்பரம் கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய நிலையில் எத்தனையோ இழப்புக்களையும் சோகங்களையும் தாண்டி யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறி விக்கப்பட்டுள்ளது. ஆனாலும், யுத்தம் தொடர்பான தரப்பினர் இன்னும் சந்தேகக் கண்களோடுதான் ஒருவரை ஒருவர் பார்த்து வருகின்ற நிலைமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் அவசர கால சட்டம் ஓரேடியாக நீக்கப்படாது படிப்படியாக சரத்துக்கள் நீக்கப்பட்டு வருகின்றன. நாமும் அதனை வலியுறுத்தி எமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றோம்.
வடக்கு, கிழக்கு நோக்கி இலங்கை அரச இயந்திரம் செயற்பட ஆரம்பித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற மீள்கட்டுமாண வேலைத்திட்டங்கள் விமர்சனங்களுக்கு மத்தியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறைந்த பட்சம் முகாம், கூடாரங்களில் இருந்து வெளியேறி தமது சொந்த காணிகளில் சொந்த மண்ணில் தமது வாழ்வை ஆரம்பிக்கும் நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது.
வடக்கு, கிழக்கு மக்களை பொறுத்த அளவில் அவர்கள் அரச தரப்பினருக்கு ஆதரவாகவுள்ள அரசியல் கட்சிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அரசியல் கட்சிக்கும் வாக்களித்துள்ளார்கள். இலங்கையின் ஏனைய சிறுபான்மை கட்சிகளான மலையக கட்சிகளாகிய நாங்களும் முஸ்லிம் கட்சிகளுமே இன்று அரசாங்கத்துடன் நல்லிணக்கப் போக்குடன் செயற்படுவதற்கு முடிவெடுத்து செயற்பட்டு வருகிறோம்.
வெகு தொலைவில் இருந்து கொண்டு ஒரு நாள் எதிர்ப்பை தெரிவித்து பகைமையை வெளிப்படுத்துவதனால் இங்கு சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் வன்னி மக்களுக்கு கிடைக்கப் போகும் நன்மை என்ன? ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கு மக்கள் அனைவரினதும் எண்ணங்களைத்தான் லண்டன் எதிர்ப்பு வெளிப்படுத்தியதா? இந்த எதிர்ப்புகளினால் அடையப்பட எத்தணிக்கும் இலக்குகள் எவை?
ஏற்கனவே அரசுடனும் ஜனாதிபதியுடனும் இணைந்து செயற்பட வடக்கு, கிழக்கு அரசியல் அமைப்புகள் முன்வந்திருக்கும் நிலையில் அரசாங்கத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியை விடவும் மக்கள் விடுதலை முன்னணியினரை விடவும் கடுமையான எதிரணியாக விளங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அரசுடனான எதிர்கால புரிந்துணர்வு செயற்பாட்டுக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கும் இன்றை அரசியல் சூழ்நிலையில் இந்த லண்டன் எதிர்ப்பு போராட்டமானது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
ஆனால் தமது சுயலாபங்களை அடையும் நிகழ்ச்சித் திட்டத்தில் செயற்படும் எந்த சர்வதேசமும் பாதிப்புற்ற மக்களுக்காக முன்வரவில்லை என்கின்ற கசப்பான பாடத்தை நாம் கற்றுக்கொண்டுள்ளோம் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.

Saturday, December 4, 2010

பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க சபையிலிருந்து வெளியேற்றம்

பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க நேற்று சபாநாயகரினால் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நேற்றுமுன்தினம் சபைக்குள் நடைபெற்ற அமளிதுமளி தொடர்பாக ஐ.தே.க. எம்.பி ஜயலத் ஜயவர்தனா தன்னிலை விளக்கமொன்றை சமர்ப்பித்து பேச ஆரம்பித்தார்.
அதனை குழப்பும் விதத்தில் லலித் திஸாநாயக்க சபையில் எழுந்து நின்று ஜயலத் ஜயவர்தனாவை நோக்கி கூச்சலிட்டார். அவருடன் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பியும் எழுந்து நின்று ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார்.
இந்தச் சபையில் எந்தக் கட்சியாக இருப்பினும் உறுப்பினர் ஒருவருக்கு பேசும் உரிமை இருக்கிறது. அதனை குழப்ப எவரும் முயற்சிக்க வேண்டாம் என
கூறிய சபாநாயகர் லலித் திஸாநாயக்கவை அமரச் சொன்னார். எனினும் ஆசனத்தில் அவர் அமரவில்லை. இந்த நிலையில் சபாநாயகர் லலித் திஸாநாயக்காவை சபையிலிருந்து வெளியேறச் சொன்னார். நீங்கள் வெளியேற வில்லையானால் ஒருவாரத்துக்கு உங்களை சபைக்குள் வர அனுமதிக்க மாட்டேன் என்றார்.
இதன் போது லலித் திஸாநாயக்க சபையிலிருந்து வெளியேறினார். எனினும், ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. எழுந்து நின்று கொண்டேயிருந்தார். நீங்களும் ஆசனத்தில் அமருங்கள் என சபாநாயகர் அழுத்திக் கூறினார். இதனைத் தொடர்ந்து அஸ்வர் எம்.பி. ஆசனத்தில் அமர்ந்தார். எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.
இதன் பின்னரே ஜயலத் ஜயவர்தனா தனது விளக்க உரையை நிகழ்த்தினார். ஜயலத் ஜயவர்தனாவின் உரை முடிவடைந்தவுடன் லலித் திஸாநாயக்க சபைக்குள் வந்தமர்ந்தார்.

Friday, December 3, 2010

பிரிட்டனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை ஒழிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடலாகாது.

பிரித்தானிய பாராளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவை நேற்று சந்தித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை ஒழிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழு உலகும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றிற்கு வருதல் வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழங்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் செயற்பாடுகள் என்பன நாட்டுக்கு நாடு வேறுபடலாகாது.
உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் பயங்கரவாதத்தின் மூலம் துன்பப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கப்படும்போது ஒரே விதமான கொள்கையைக் கடைப்பிடிப்பது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரிதும் துணைபுரியும்.
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக தமது பணிகளை மேற்கொள்வதற்கான அரசு உருவாக்கியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பின்போது பிரித்தானியாவின் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவின் தலைவர் ரிச்சர் மற்றும் அவருடைய குழுவினர் பங்கேற்றுள்ளனர்

Thursday, December 2, 2010

இயல்பு வாழ்வை குழப்ப வெளிநாடுகளில் மீண்டும் சதி செனல் - 4 வீடியோவுக்கு அரசு கண்டனம் மறுப்பு.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கு எதிரான பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்தவும், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும் உதவுவதற்குப் பதிலாக இந்தச் சக்திகள் மீண்டும் பிரிவினைவாத சித்தாந்தத்திற்குப் புத்துயிரளித்து வருவதாக அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ காட்சியைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள இலங்கைத் தூதரகம் அதில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் கிடையாதென சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான ஓர் ஒளிப்பதிவை கடந்த வருடம் செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.
அதன் தொழில்நுட்ப நிலையைப் பரிசீலித்தால் முன்னைய வீடியோவிற்கும் தற்போதைய ஒளிபரப்பிற்கும் எந்த மாற்றமும் கிடையாதெனத் தெரிய வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. இவை இரண்டுமே போலியானவை. திரித்துக் கூறப்பட்டுள்ளவை என்றும் பொதுவாகவே இவ்வாறான முறையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும், இலங்கை அரசு ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகையை நீடிப்பதற்காக விண்ணப்பித்தி ருந்த காலகட்டத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள் எனக் குறிப்பிட்டு சில தரப்பினர் புகைப்படங்களைப் பிரசுரித்தி ருந்தனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் கடந்த ஒக்டோபர் மாதம் பிரிட்டன் சென்றிருந்த போது அந்நாட்டின் முன்னணி பத்திரிகையொன்றுக்கு போர்க் குற்றங்கள் புரிந்த காட்சிகள் எனக் கூறப்படும் புகைப்படங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஆனால், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாத நிலையிலிருப்பதாக அந்தப் புகைப்படங்களை வழங்கியவர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டனுக்குச் சென்றிருக்கின்றவேளை புதிதாக ஒளிபரப்பு இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான சக்திகள் இதன் பின்னணியில் உள்ளன என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ள பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம், புலிகளின் தோல்வியானது முழு நாட்டிலும் ஜனநாயக சுதந்திரத்தை வியாபிக்கச் செய்துள்ளது.
மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த கால சம்பவங்களில் கற்றுக்கொண்ட பாடங்களை அடையாளங் கண்டு, மீண்டும் முரண்பாடு ஏற்படாதிருப்பதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் எட்டுப்பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்ட இந்தக் குழு, இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது’ என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் துரிதமாக நிவாரணம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இவ்வாறான போலியானதும் தவறானதுமான பிரசாரத்தை மேற்கொள்வது அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் செயலாகுமென்றும் அரசாங்கம் கண்டித்துள்ளது.

Wednesday, December 1, 2010

இன்று முதல் உணவுப் பொருட்கள் கூ.மொ.வி. கடைகளில் விலை குறைப்பு

அரிசி, ரின்மீன், பயறு, கடலை, நெத்தலி, பாஸ்மதி உள்ளடக்கம் .


பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயர்வதை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் அரசாங்க களஞ்சியங்களில் உள்ள அரிசி, குறைந்த விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து தெரிவித்தார்.
இது தவிர இன்று முதல் லக்சதொசவில் டின் மீன், பயறு, கடலை, நெத்தலி, பாஸ்மதி அரிசி, ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த பெரும் போகத்தின் போது கொள்வனவு செய்யப்பட்டு ஹிங்குரக்கொட அரிசி ஆலையில் அரிசியாக மாற்றப்பட்ட 300 மெற்றிக் தொன் அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் வைபவம் நேற்று கொழும்பு 10 இல் உள்ள சதொச களஞ்சியத்தில் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய எமது களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ள அரிசியை விலையேற்றத்திற்கு ஏற்ப சந்தையில் இட நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி முதற் கட்டமாக 300 மெற்றிக் தொன் அரிசி நாடு பூராகவும் உள்ள லக் சதொசகளுக்கு விநியோகிக்கப்பட்டு இன்று முதல் குறைந்த விலைக்கு விற்கப்படும். மொத்த விற்பனையாளர்களுக்கும் குறைந்த விலையில் வழங்கப்படும்.
சந்தையில் சம்பா 70 ரூபாவுக்கும் நாட்டரிசி 60 ரூபாவுக்கும், வெள்ளைப் பச்சை அரிசி 54 ரூபாவுக்கும், சிகப்பு பச்சை அரிசி 60 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது. ஆனால் இன்று முதல் லக்சதொச ஊடாக சம்பா அரிசி 63.50 ரூபாவுக்கும், நாட்டரிசி 58.50 ரூபாவுக்கும், வெள்ளை பச்சை அரிசி 45.50 ரூபாவுக்கும் சிகப்பு பச்சை அரிசி 53.50 ரூபாவுக்கும் விற்கப்படும். பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க இடமளிக்க மாட்டோம்.
இதேவேளை சந்தை விலைகளைவிட சதொசவில் குறைந்த விலைக்கு அத்தியாவசி யப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
ன்று முதல் அவற்றின் விலைகள் மேலும் குறைக்கப்படும். சதொசவில் 185 ரூபாவாக உள்ள டின் மீன் 5 ரூபாவினாலும் 85 ரூபாவாக உள்ள பாஸ்மதி அரிசி 5 ரூபா வினாலும் பயறு 5 ரூபாவினாலும் கடலை 7 ரூபாவினாலும் நெத்தலி மீன் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டு ள்ளன.
அரசாங்கம் அதிக வரி விதித்துள்ளதாலேயே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக ஐ. தே. க. தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். மொத்த வியாபாரிகள் செயற்கையாக விலைகளை உயர்த்துவதே விலை உயர்வுக்குக் காரணம். தேவையின்றி அரிசி விலைகளை உயர்த்தினால் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும்.
உலக சந்தையிலும் உள்நாட்டு சந்தையிலும் பொருட்களின் விலைகள் குறித்து 24 மணி நேரமும் கவனித்து வருகிறோம் என்றார்.