Monday, January 31, 2011

அத். உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு குறைவு பெ. வெங்காயம் 55/-, உ.கிழங்கு - 50/-

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவோ அல்லது தட்டுப்பாடு ஏற்படவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கிழங்கு, செத்தல் மிளகாய், சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு குறைந்துள்ளன. இவற்றின் விலை அதிகரித் தால் சதொச மூலம் இறக்கு மதி செய்து பாவனையாளர் களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்மையில் முட்டை, கிழங்கு, வெங்காயம், கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்ததையடுத்து அவற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனையடுத்து அவற்றின் விலைகள் குறைந்தன என்று அமைச்சர் கூறினார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன் 135 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் நேற்று (30) கிலோ 55 ரூபாவாகவும், 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு 45 முதல் 50 ரூபாவுக்கும் 195 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பருப்பு 135 ரூபாவுக்கும் 290 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு 200 ரூபாவுக்கும் தற்போது விலை குறைந்துள்ளதாக மொத்த வர்த்தக சங்கம் கூறுகிறது.

Friday, January 28, 2011

சுவிற்சர்லாந்தில் மரணமடைந்தவரின் உறவினர்களை கண்டுபிடிக்க உதவுங்கள்.

சுவிற்சர்லாந்தில் அண்மையில் மரணமடைந்த சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவரின் உறவினர்களை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை நாடுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சுவிற்சர்லாந்தை வதிவிடமாகக் கொண்ட இலங்கையரான சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவர் சுவிற்சர்லாந்து சூரிச்சிலுள்ள அவரது வசிப்பிடத்தில் 08.12.2010 அன்று இறந்த நிலையில் காணப்பட்டார் என சூரிச் பொலிஸ் ஜெனீவாவிலுள்ள எமது தூதராலயத்துக்கு அறிவித்துள்ளது.
இறந்தவர் பிறந்த திகதி: 20.07.1968 என்றும் கடவுச்சீட்டு இலக்கம்: ஆ 2176054 எனவும் மனைவியின் பெயர்: சத்தியசோதி குறிஞ்சிக்குமரன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை முகவரி: கைதடி மேற்கு, கைதடி, யாழ்ப்பாணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் பற்றிய விபரங்களை அறிய வெளிநாட்டு அமைச்சின் கொன்ஸியூலர் விவகாரப் பிரிவு பெருமுயற்சி எடுத்துவருகின்றது. இன்றுவரைக்கும் இறந்தவரது உறவினர்கள் எவரும் அவரது பூதவுடலைக் கோரி வரவில்லை என்பதுடன் எம்முடன் தொடர்புகொள்ளவும் இல்லை.

இறந்த குறிஞ்சிக்குமரனின் பூதவுடலை அடையாளம் காண்பதற்காக, அவரது உறவினர்களை கண்டுபிடிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு மக்களின் உதவியை நாடுகின்றது. இறந்தவரின் உறவினர் பற்றிய விபரங்களை தெரிந்தவர்கள் எங்களுடன் தொலைபேசியூடாக உடனடியாகத் தொடர்புகொண்டு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கொன்ஸியூலர் விவகாரப் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, இல.14, சேர் பாரோன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01. என்ற முகவரி ஊடாக அல்லது 0112437635 மற்றும் 0114718972 ஆகிய தொலை பேசி இலக்கங்கள் ஊடாகவோ அறிவிக்குமாறு கோருகின்றோம். மேலும் 0112473899 தொலைநகல் இலக்கம் ஊடாகவும் அறிவிக்கலாம்.

Thursday, January 27, 2011

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவு 914 சுயேச்சைகள் நேற்றுவரை கட்டுப்பணம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடி வடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. நேற்று ஐ. ம. சு. முன்னணி, ஐ. தே. க., முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பன சில மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்தன.
பிரதான கட்சிகள் இன்று ஏனைய மாவட்டங் களுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளன. ஐ. ம. சு. முன்னணி நேற்று கம்பஹா மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது. அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது. ஐ. தே. க. அம்பாந்தோட்டை மற்றும் வவுனியா மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்தது.
இதேவேளை சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலஎல்லை இன்றுடன் முடிவடை கிறது. இதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 914 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலேயே அதிகூடுதலான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
இம் மாவட்டத்தில் 115 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதுடன் இதற்கு அடுத்ததாக களுத்துறை மாவட்டத்தில் 72 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் 70 சுயேச்சைக் குழுக்களும், கம்பஹா மாவட்டத்தில் 63 சுயேச்சைக் குழுக்களும், குருநாகலில் 56 சுயேச்சைக் குழுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 49 சுயேச்சைக் குழுக்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 சுயேச்சைக் குழுக்களும், இரத்தினபுரியில் 54 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளன.
வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 19 சுயேச்சைக் குழுக்களும், மன்னார் மாவட்டத்தில் 12 குழுக்களும் வவுனியாவில் 7 குழுக்களும் முல்லைத்தீவில் 2 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு சுயேச்சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.
கொழும்பு - 26, கம்பஹா - 63, களுத்துறை - 72, கண்டி - 34, மாத்தளை - 29, நுவரெலியா - 21, காலி - 42, மாத்தறை - 27, ஹம்பாந்தோட்டை - 30, யாழ்ப்பாணம் - 19, கிளிநொச்சி - -, மன்னார் - 12, வவுனியா - 7, முல்லைத்தீவு - 2, மட்டக்களப்பு - 42, அம்பாறை - 115, திருகோணமலை - 49, குருநாகல் - 56, புத்தளம் - 70, அநு ராதபுரதம் - 33, பொலன்னறுவை - 20, பதுளை - 34, மொனராகலை - 24, இரத்தினபுரி - 54, கேகாலை - 33.

பத்துத் தினங்களுக்குப் பின் மட்டு, அம்பாறையில் மீண்டும் மழை மக்கள் அச்சம்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பத்து தினங்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும், நேற்றிரவு முதல் பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் மழை பெய்ய ஆரம்பித்ததனால், காலை வேளையில், பெருந்தோகை யான மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை. கல்முனை கல்வி வலயத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் வரவில் வீழ்ச்சி காணப்பட்டது. என்றார்.

இடி மின்னலுடன் மழை


அம்பாறை மாவட்டத்தில் நேற்று பெய்த கனத்த மழையுடன் பலத்த காற்றும் இடி முழக்கமும் தொடர்ந்ததனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலையினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு ஓரளவுக்கு கடந்த ஒரு சில தினங்களாக வழமைக்கு திரும்பிய மக்களின் இயல்பு நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது.
தாழ் நிலங்களில் வெள்ளம்
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அனேகமான உள்வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மழை காரணமாக அலுவலகங்களுக்குச் செல்லும் அரச, தனியார் உத்தியோகத்தர்களும், பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இம்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைந்துள்ளனர்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச வேளாண்மைகளை அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயாரான போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இம்மழை தொடர்ந்து பெய்வதால் வெள்ளம் ஏற்படுவதோடு விவசாயச் செய்கைகள் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படுமென விவசாயிகள் அச்சமடைந்து ள்ளனர்.

மட்டு மாவட்டம்



மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இற்றைவரை கடும் காற்றுடனான பெருமழை பெய்து வருவதால். மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற அச்சமும், பீதியும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
தொடராக மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் தமது உடைமைகளையும், வீடுகளையும் விட்டு 175க்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தங்கியிருந்து பல்வேறு அவலங்களையும், அசெளகரியங்களையும சந்தித்து கடந்த வாரமே தமது இல்லங்களுக்கு சென்று துப்புரவு செய்து மீள் குடியேறிய நிலையில், மீண்டும் மழை பெய்வதானது ஒருவிதமான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
கடும் காற்று பலமாக வீசும் என வழிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளதால், அச்சமான நிலைமையே காணப்படுகின்றது. மட்டு மாவட்டத்தில் பரவலாக காற்றுடனான மழை பெய்வதால் தண்ணீர் வற்றிய இடங்களில் எல்லாம் நீர் தேங்கி நிற்கின்றது. இந்நிலைமை காரணமாக மக்கள் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு



அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (26) பெய்த இரண்டரை மணித்தியால பெருமழை காரணமாகப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன். அரச மற்றும் பொது நிறுவனங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டன.
நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பல பாடசாலைகளில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டது. கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரிக்குச் செல்லும் பிரதான வீதி மற்றும் அதற்கு அண்மித்த பிரதான வீதிகளின் வடிகான்கள் நிரம்பியமையினால் அக்கரைப்பற்று- கல்முனை வீதியில் திடீர் நீர்ப்பரவல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள கடைத் தொகுதிகளை அண்மித்த பகுதிகளிலும் இந்நிலை காணப்பட்டது.
மாவடிப்பள்ளி, சம்மாந்துறைப் பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தமையினால், அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட சில பாடசாலைகளில் மாணவர்கள் ஒருசிலரே பாடசாலைக்குச் சமுகமளித்திருந்தனர். ஆசிரியர்களின் வரவிலும் மந்தகதி காணப்பட்டது.
காலை 6 மணி முதல் 8.45 வரை இப்பெருமழை நீடித்தமையினால் பிரதேச செயலகங்கள், பொது நிறுவனங்கள், வங்கிகள் முதலியவற்றின்
அன்றாட நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வாரங்களாகப் பெய்த அடைமழையினால் நில நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதனால் இவ்வாறானதொரு பெருமழை நீடிக்கும் பட்சத்தில் மீண்டுமொரு பெருவெள்ளம் ஏற்படலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.

Wednesday, January 26, 2011

பால்மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு விலையேற்றத்தை தவிர்க்க நடவடிக்கை நிரூஷி விமலவீர.

பால் மா விலையேற்றத்தைத் தவிர்ப் பதற்காக பால்மாவுக்கான இறக்குமதி வரியை 22.00 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிலோவுக்கு 50 ரூபாவாக இருக்கின்ற இறக்குமதி வரி ரூபா 28.00 வரை குறைக்கப்பட விருக்கின்றது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று 26 ஆம் திகதி அல்லது நாளை 27 ஆம் திகதி திறைசேரி வெளியிடும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம். ரூமி மர்ஷக் நேற்றுத் தெரிவித்தார்.
இதேவேளை பால் மா விலையை அதிகரிக்க இடமளிப்பதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
உலக சந்தையில் பால் விலை அதிகரித்துள்ளதால் பால் மா இறக்குமதி நிறுவனங்கள் முகம் கொடுத்துள்ள நிலைமையை முன்வைத்து பால் மா விலையின் இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tuesday, January 25, 2011

ரஷ்ய விமான நிலையத்தில் பாரிய குண்டு வெடிப்பு! 35 பேர் பலி 100 க்கும் அதிக பயணிகள் காயம்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் டெமோட்டோவோ விமான நிலையத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 35பேர் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று ரஷ்யாவின் தலைமை விசாரணை அதிகாரி கூறி யுள்ளார்.
இக்குண்டுத்தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உட்பட உலகநாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்
தாக்குதலை நடத்தியவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என்று ரஷ்ய ஜனாதிபதி டிமெற்றி மெத்தேவ் தெரிவித்துள்ளார்

அநுராதபுரம் சிறையில் மோதல் 3 பேர் பலி: 8 அதிகாரிகள் உட்பட 21பேர் காயம்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோத லில் கைதிகள் 3 பேர் உயிரிழ ந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிறைச் சாலை அதிகாரிகள் 8 பேரும் அடங் குவதாக அநுராதபுர வைத்தியசாலை பணி ப்பாளர் டொக்டர் டபிள்யூ. எம். ரி. பி. விஜேகோன் தெரி வித்தார்.
இரு தரப்பினருக்கும் இடை யில் ஏற்பட்ட மோதல் முற்றியதால் சிறைச்சாலை அதிகாரிகள் துப் பாக்கிப் பிரயோகம் செய்ததில் கைதிகள் காயமடைந்தனர்.
கைதி கள் கற்களால் நடத்திய தாக்குத லால் சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த மோதலில் பிரதம ஜெயிலர் காமினி சில்வாவும் காயமடைந்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 50 க்கும் மேற்பட்ட சிறைச்சாலைக் கைதிகள் கூரை மீது ஏறி மறியல் செய்ததுடன் அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது கற்க ளால் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்பு இந்த நிலைமை மோசமடைய கலகக்காரர்க ளாக மாறி சிறைச் சாலைக்குள் தீ வைத்து ஆர்ப் பாட்டம் செய்தனர்.
பின்பு நிலை மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிறைச்சாலை அதி காரிகள் முயற்சியெடுத்தனர். அதனை
கட்டுப்படுத்தமுடியாமல் போகவே சிறைச்சாலை அதிகாரிகள் துப் பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரி விக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிப் பிரயோக த்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதே வேளை கைதிகள் சிறைச்சாலை யிலிருந்து தப்பி யோட முயற்சி செய்துள்ளனர். இதனைத் தடுப்பதற் காக சிறைச்சாலையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் நிலை மையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாரிய முயற்சியில் ஈடுபட்டனர். பொலிஸாரும் இராணு வத்தினரும் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிறைச்சாலையின் சிறைக் கூடங்கள் பலவற்றையும் சமைய லறை யையும் கைதிகள் டயர் போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டுள்ள காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங் குவ தற்கு வைத்திய குழுவொன்றை ஈடுபடுத்த வைத்தியசாலைப் பணிப் பாளர் டபிள்யூ. ரி. பி. விஜேகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Monday, January 24, 2011

வடக்கு மற்றும் கிழக்கில் தொடரப்படும் வெள்ள நிவாரப் பணிகளுக்கு ஐ.நா பாராட்டு

கடந்த ஜனவாரி 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஜக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகமும், அவசர நிவாரண பிரதி ஒருங்கிணைப்பாளருமான கெதரின் பிரேக் வடக்கில் மற்றும் கிழக்கில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மேற்கொள்ளும் பணிகளையிட்டு பாராட்டு தெரிவித்ததோடு, இந் நடவடிக்கைகளில் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
வடக்கின் உட்கட்டமைப்பு நடவடிக்கைககளுக்கென அரசு பாரிய அளவு தொகையை முதலிட்டுள்ள அதேவேளை, உதவி நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களின் பௌதீக, சமூக மற்றும் உளவியல் தேவைகளுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, January 23, 2011

மோதல்கள் நடந்த இடங்களில் சிறப்பான புனர்வாழ்வு நடவடிக்கை - ஐ. நா. பிரதி செயலாளர் திருப்தி மகேஸ்வரன் பிரசாத.

முன்னர் மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதிகளை மீளக் கட்டியமைக்கும் நடவடிக்கைகள் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரணப் பிரதி இணைப்பதிகாரியுமான கத்தரின் ப்ராங்க் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அம்மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், மோதல்களால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தமது வாழ்க்கையை ஆரம்பித்து ஒரு நிலைக்குக் கொண்டுவருவது சிரமமானதாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீள்குடியமர்ந்த மக்களுக்கான தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் இல்லை. அவர்கள் பாடசாலைகளுக்குச் செல்கிறார்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், இயங்குகின்றன. அடிப்படை சமூக சேவைகள் வழங்கப்படுகின்றன. வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துகொடுக்கப்ப ட்டுள்ளன.
இம்மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கே நாம் இருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் இம்மக்களின் உட்கட்டுமானத் தேவைகளை நிறைவேற்ற முதலீடுகளைச் செய்துள்ளது. இந்த முதலீடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுடன் இணைந்தவையாக இருந்தால் மேலும் சிறப்பாக அமையும் என்றும் கத்தரின் குறிப்பிட்டார்.
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரணப் பிரதி இணைப்பதிகாரியு மான கத்தரின் ப்ரங்க், நேற்று முன்தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கும், வடக்கின் முல்லைத்தீவு மாவட்டம் தேறாவில், வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மீள் குடியமர்ந்திருக்கும் மக்களையும் பார்வை யிட்டிருந்தார். மோதல்களால் இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகள் மற்றும் மீள்குடியமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி தேவையெனக் கோரிக்கை விடுத்திருந்த அவர், எதிர்வரும் 6 மாதங்களுக்கு அவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய உடனடி நிதியிலிருந்து 6 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரணப் பிரதி இணை ப்பதிகாரியுமான கத்தரின் ப்ராங்க் அறிவித்திருந்தார்.

Friday, January 21, 2011

தேர்தல் பிரசாரத்துக்காக அரச உடமைகளை பாவிக்க வேண்டாம் தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களுக்காக அரச உடமைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் நாயகம் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள் மாகாண சபை செயலாளர்கள் ஆளுநர்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அரச திணைக்கள கூட்டுத்தாபன வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தல் பாடசாலைகள் போன்ற அரச காணிகளில் பிரசார பதாகைகளை நிறுவுதல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்காக அரசுக்கு சொந்தமான விடுதிகள் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு இடமளித்தல் போன்றவற்றை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

மதவாச்சி முதல் தலைமன்னார் வரையிலான புகையிரத பாதை…….

மதவாச்சி முதல் தலைமன்னார் வரையிலான புகையிரத பாதையின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதல் பகுதி மடுரோட் ரயில் நிலையம் வரை முன்னெடுக்கப்படும். மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதை அமைப்பதற்காக காடுகளை அழித்து டோசர் செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மழைகாலம் என்பதால் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மடுரோட் ரயில் நிலையத்தையே படத்தில் காண்கிaர்கள்

Wednesday, January 19, 2011

சுத்தமான குடிநீரை வழங்குவது அரசின் பொறுப்பு ஜனாதிபதி அறிவிப்பு.

குடிநீர் வீண்விரயமாக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். நாட்டுமக்களுக்குசுத்தமானகுடிநீரைவழங்குவதுஅரசின்பொறுப்பு. அந்தவகையில்குடிநீர்வழங்கலுக்காகஅரசாங்கம்பெருந்தொகைநிதியை செலவிடுவதாகவும்ஜனாதிபதிமஹிந்தராஜபக்ஷகுறிப்பிட்டார்.
லபுகம நீர்த்தேக்கத்தினதும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினதும் 125வது வருட நிறைவின் நிமித்தம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவத்தின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின்போது நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது. லபுகம நீர்த்தேக்கத்தை யும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் மேம்படுத்தும் வேலைத் திட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. இதற்கு ஹங்கேரிய அரசாங்கம் நிதி உதவி அளித்திருக்கின்றது.
1882ம் ஆண்டில் வக் ஓயாவை மறைத்து அணை அமைத்து லபுகம நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. என்றாலும் 1886ம் ஆண்டு முதல் குடிநீர் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன. இது 1912ம் ஆண்டில் முழுமையான நீர்சுத்திகரிப்பு நிலையமாக மேம்படுத்தப்பட்டது.
லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையம் 1978ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
லபுகம நீர்த் தேக்கமும் நீர் சுத்திகரிப்பு நிலையமும் 1985ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அலரி மாளிகையில் இந்த நினைவு முத்திரை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்ற பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஹங்கேரிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிகழ்வின்போது ஹங்கேரிய அரசின் செயலாளர் கலாநிதி பாலோஸ்பு டொஸ் ஹங்கேரிய ஜனாதிபதியின் நல்வாழ்த்துக்களை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தெரிவித்தார்.
இதேநேரம் கிட்டிய எதிர்காலத்தில் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என்று தாம் நம்புவதாகவும் ஹங்கேரிய அரசின் செயலாளர் இச்சமயம் கூறினார். இதேவேளை இரு நாடு களுக்கிடையிலும் பல்துறைகளிலும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இச்சமயம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு- கிழக்கில் முதலிடுவதற்கான வாய்ப்பு மற்றும் அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்பன தொடர்பாக விரிவாக விளக்கினார்.
உல்லாசப் பயணத்துறை தொடர்பாகவும் இரு நாடுகளுக்கிடையிலும் கலாசார ஒத்துழைப்பு மேம்பாடு குறித்தும் இப்பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன- ஜீவன் குமாரதுங்க- பிரதியமைச்சர்கள் கீத்தாஞ்சன குணவர்தன- நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்

Monday, January 17, 2011

இந்தியாவிலிருந்து மேலும் இரு கப்பல்களில் நிவாரணப் பொருள்கள் உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா.

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக் கவென இந்தியாவில் இருந்து மேலும் இரண்டு கப்பல்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

முதலாவது தொகுதி நிவாரணப் பொருள்கள் அண்மையில் விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதுடன் இரண்டாவது தொகுதி நிவாரணம் இரண்டு கப்பல்கள் மூலம் அனுப்பிவை க்கப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா நேற்று முன்தினம் மட்டக்களப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

விமானத்தில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருள்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்போது இந்திய உயர்ஸ்தானிகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக் கான புதிய பாடத்திட்ட நூல்களையும் பாடசாலை சீருடைகளையும் உடனே மீண்டும் விநியோகிக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஆராய்ந்து தீர்ப்பொன்றைத் தருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார். கிழக்கில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நிலைமைகளை ஆராய்ந்தனர். அப்போது இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்று அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.

பிரதான வீதிகள் தவிர்ந்த உள் வீதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வீதிகளைப் புனரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியதாக அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.

அதேநேரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு உரிய நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காப்புறுதி செய்யப்படாத அனைத்து விவசாய நிலங்களுக்கும் நட்டஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.

Sunday, January 16, 2011

சங்குப்பிட்டி பாலம் இன்று மக்களின் பாவனைக்காக.

288 மீற்றர் நீளம கொண்ட சங்குப்பிட்டி பாலம் மக்களின் பாவனைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டவுள்ளது. இப் பாலத்தை நிர்மாணிப்பதற்காக 1037 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்தப்பாலம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் சுமார் 110 கிலோமீற்றர் தூரம் குறைவதுடன் பயண நேரமும் 3 மணித்தியாலத்தால் குறைவடைகின்றது. இரு வழிப் பாதைகளைக் கொண்ட இந்தப்பாலம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப் பட்ட பின்னர் இரு பகுதிகளிலிருந்தும் பஸ்களில் பெருந்தொகையான மக்கள் பயணம் செய்ய ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

Saturday, January 15, 2011

எமது இணயத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

Friday, January 14, 2011

கிழக்கு மாகாணத்தில் அடைமழை ஓய்வு.

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வந்த அடைமழை ஓய்ந்துள்ளதுடன் நேற்று பல நாட்களுக்குப் பின்னர் சூரிய ஒளி தென்பட்டது. நேற்று காலை முதல் மாலை வரை காலநிலை சீரடைந்து காணப்பட்டது. இதனால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இயல்புநிலை ஓரளவுக்கு வழமைக்கு திரும்பியிருந்தது.
இருப்பினும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இந்த மக்களுக்கு சமைத்த மற்றும் உலர் உணவுகள் நேற்றும் வழங்கப்பட்டன. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவினர்கள், மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருந்தோரில் பெரும்பாலானவர்கள் நேற்று தமது வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காலநிலை நேற்று சீரடைந்ததை அடுத்து மட்டக்களப்பு மன்னம்பிட்டி பிரதான வீதிப் போக்குவரத்து உட்பட பெரும்பாலான வீதிப் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன. மாவட்டத்தில் தடைப்பட்டிருந்த விமான மற்றும் ஹெலிகொப்டர் சேவையும் வழமைக்கு திரும்பியதோடு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களுக்கு சீரான முறையில் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

Thursday, January 13, 2011


அன்பார்ந்த்த உறவுகளே!

எமது மண்ணில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகி இருக்கும் உறவுகளுக்கு உதவவேண்டிய உன்னதமான கடமை புலம் பெயர்ந்த எம் எல்லோருக்கும் இருக்கின்றது. வீடுவாசல்களை விட்டு வெளியேறி, உடுத்த உடையோடு, உண்ண உணவின்றி அல்லற்படும் எம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள் என்று உதயம் உங்களை அழைக்கின்றது.
ஆலயங்கள், தேவாலயங்கள், பாடசாலைகள் பொதுக்கட்டிடங்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் போன்றவர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. அவர்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவதற்கான வாய்ப்புக்கள் இப்போதைக்கு இல்லை.பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் எமது பிள்ளைகள் வெறும் கையோடுதான் செல்ல
வேண்டியிருக்கும். இந்த இக்கட்டான நிலையில் எம்மவர்க்கு உதவ முன்வாருங்கள் என்று எப்போதும் போன்று இப்போதும் உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
உதயம் உறவுகள் உங்களை நாடிவருகின்றார்கள். உங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் ஆதரவிற்கு உதயத்தின் நன்றிகள்.
அன்புடன் உதயம் நிர்வாகம்

வங்கிக்கணக்கு:
Uthayam, Post Finance 60-660726-1
6005 Luzern

IBAN CH 83 0900 0000 6066 0726 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 வீத மக்கள் பாதிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் 85 சதவீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க உதவி அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.
14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 185 நலன்புரி முகாம் இயங்குகின்றன. 28376 குடும்பங்களைச் சேர்ந்த 105, 747 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் 28 முகாம்கள் உள்ளன.
20189 குடும்பங்களைச் சேர்ந்த 59193 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
வாகரை பிரதேசத்தில் 4272 குடும்பங்களைச் சேர்ந்த 14687 பேர் இடம்பெயர்ந்து 9 முகாம்களில் தங்கியுள்ளனர்.
பனிச்சங்கேணி பாலம் பாதிக்கப்பட்டுள்ளதனால் கதிரவெளி, புளிச்சாக்கேணி, பாற்சேனை, அம்பந்தனாவெளி, ஊரியன்கட்டு, கட்டுமுறிவு, தோணிதாட்ட மடு, மருதன்கேணிக் குளம், ஓமடியாமடு, வாகரை வடக்கு மற்றும் மத்தி ஆகிய பிரதேசங்களுக்கான தரைவழிப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்கு 4055 குடும்பங்களைச் சேர்ந்த 14520 பேர் நிர்க்கதியாகியுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ராகுல நாயகி தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை நிலவுவதனால் ஹெலிகொப்டர் மூலமான உணவு விநியோகம் தாமதமடைகிறது.
உழவு இயந்திரங்கள் மூலம் மக்கள் வெளியேற்றம்
ஏறாவூர் பிரதேசத்தில் மிக மோச மாகப் பாதிக்கப்பட்ட மக்களை ஏறாவூரில் உள்ள பொது அமைப்பு க்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் முன்வந்து உழவு இயந்திரங்க ளின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாடசாலைகளிலிருக்கும் மக்களுக்குத் தேவையான உணவு வகைகளை ஏறாவூரில் உள்ள பொது அமைப்புக்கள் வழங்கி வருகின்றன.
வெற்றிலைத் தோட்டங்கள் நாசம்
களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், களுவாஞ்சிகுடி, எருவில் ஆகிய கிராமங்களில் வெற்றிலைச் செய்கையில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கான குடும்பங்கள் தமது தொழிலை இழந்துள்ளன.
சந்தையில் வெற்றிலைக்கான தட்டுப்பாடு நிலவுவதுடன், வெற்றிலையின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அரிசி ஆலைகள் வெள்ளத்தில்
கல்குடா தொகுதியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை, மாஞ்சோலை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, காவத்தமுனை, தியாவட்டவான், மைலங்கரச்சை, கிண்ணையடி கறுவாக்கேணி, சுங்கான்கேணி, கிரான், புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீதிகள் மற்றும் குடிமனைகளனைத்தும் வெள்ளக் காடாக மாறியுள்ளன.
ஓட்டமாவடிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அமீர்அலி விளையாட்டரங்கு - மைதானம் என்பனவும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இராணுவத்தினர் பொலிஸார் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை நல்கினர்.
தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து
மக்கள் மத்தியில் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள் ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நீரின் மூலமாகவே தொற்று நோய்கள் பரவக்கூடிய சூழ்நிலை அதிகம் காணப்படுவதால் மக்கள் கொதித்தாறிய நீர் மற்றும் போத் தலில் அடைக்கப்பட்ட குடிநீர் என்பவற்றைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நலன்புரி நிலையங்களில் மிக நெருக்கமாக தங்கவைக்கப் பட்டுள்ளதால் நோய்கள் பரவும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
1957ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட பெருவெள்ளம்
1957ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென வயோதிபர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான அனைத்துப் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிராமத்துக்கு கிராமம் போக்குவரத்துக்குள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார, மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் 4 வைத்திய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்குழுக்களில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர் கள் அடங்குகின்றனர்.
வான்கதவுகள் திறக்கப்பட்டதால் கிராமங்கள் வெள்ளத்தில்
திருகோணமலை மாவட்டத்தில் அடைமழையினாலும் மற்றும் கந்தளாய் குளம், ஏனைய சிறு குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வருவதாலும் கிண்ணியா பிரதேசத்தில் பல வீதிகள், மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தாழ்ந்த பகுதிகளிலுள்ள மக்களை வள்ளங்கள் மூலம் பல பொது அமைப்புக்கள் மேட்டு நிலங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருகின்றன.
கிண்ணியா பிரதேச செலயகப் பிரிவில் சமாவச்சதீவு, பூருவரசந்தீவு, ஈச்சந்தீவு, கிரான், மஜீத் நகர், வட்டமடு, மணியரசங்குளம், குட்டித்தீவு, முனைச்சேனை, காக்காமுனை, நெடுந்தீவு, பட்டியனூர், மகமார், நடுஊற்று, ஆயிலியடி போன்ற பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சமாவச்சதீவு, பூவரசந்தீவு, சூரங்கல், ஆயிலியடி, தம்பலகமம், வான்எல, சல்லிக்களப்பு போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல்வயல்கள் அழிவு
திருகோணமலை மாவட்டத்தில் பன்னிரெண்டாயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் அழிந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ. உகநாதன் தெரிவித்தார்.
குடலைப் பருவமான இறுதிக்கட்டத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்கள் அழிந்துள்ளன.
சேனைப்பயிர்கள், மேட்டு நிலப்பயிர்கள், உப உணவுப்பயிர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவு
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் இருப்பிடங்களை விட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மூன்று தினங்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குமாறு திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் டி. ஆர். சில்வா பணிப்புரை வழங்கியுள்ளார்.
மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்கியுள்ள மக்களை பார்வையிடும் பொருட்டும், தேவையான அத்தியாவசிய விடயங்கள் குறித்தும் மூதூர் பிரதேச செயலகத்தில் நடத்திய முக்கிய கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு பிரதேச செயலாளர் என் செல்வநாயகம், உதவி பிரதேச செயலாளர் எம். எச். முஹம்மட்கனி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அபுல் பைதா ராசீக் பரீட் மற்றும் அதிகாரிகள் பங்குகொண்டனர்.
முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் நடவடிக்கையில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராமமுன்னேற்ற சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான டெண்ட் படங்குகள் இருந்தவைகளை வழங்கியுள்ளதாகவும் மேலதிக தேவையானவைகளை அரச, அரசசார்பற்ற நிறுவனங்களிடம் வேண்டியுள்ளதாகவும் பிரதேச செயலாளர் செல்வநாயகம் தெரிவித்தார்.

மட்டு. அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம் நிர்க்கதி.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடராகப் பெய்துவரும் அடை மழை காரணமாக அனர்த்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை தொடர்வதால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களினதும் இடம்பெயர்பவர்களினதும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட ங்கள் நீரினால் சூழப்பட்டிருப்பதால் அவசர நிவாரணப் பொருட்களை தரை வழியாக எடுத்துச் செல்லுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சீரற்ற காலநிலையால் தொடராக மழை பெய்து வருவதன் காரணமாக நாட்டில் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 78 (228078) குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 63 ஆயிரத்து 773 பேர் பாதிக்க ப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.
வெள்ள நிலையி னால் பாதிக்கப்பட் டிருப்பவர்களில் 33 ஆயிரத்து 330 குடும்ப ங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 598 பேர் 359 முகாம்களில் தங்க வைக் கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர் பாக அவர் மேலும் கூறுகை யில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 882 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட் சத்து 82 ஆயிரத்து 323 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 15 ஆயிரத்து 368 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 524 பேர் 146 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் 88 ஆயிரத்து 376 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 38 ஆயிரத்து 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7813 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 744 பேர் 49 முகாம்களில் தங்கியுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 2415 குடும்பங்களைச் சேர்ந்த 11011 பேர் 59 முகாம்களில் தங்கியுள்ளனர். திருமலை மாவட்டத்தில் 7559 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7323 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 478 பேர் 73 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதேநேரம் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ள நீரினால் பெரும்பாலான பிரதேசங்களுக்குரிய தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகள் மூன்று நான்கு அடிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ள நீரினால் சூழப்பட்டிருக்கும் பிரதேசங்களிலிருந்து விமானப் படையினரும், கடற்படையினரும் ஹெலிகள் மற்றும் படகுகளின் உதவியுடன் மீட்புப் பணியிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான அரச கட்டடங்கள், வீடுகள், தனியார் நிறுவனங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதேவேளை, ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பலவற்றினுள்ளும் வெள்ள நீர் புகுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுக்கடங்காத வெள்ள நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக குடிநீர் வழங்கல் பிரிவினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.

Tuesday, January 11, 2011

கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை மற்றும் மழைவெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள.மக்களுக்கு இன மத பேதங்கள் இன்றி உதவிசெய்வோம் வாருங்கள் கிழக்குமகளின் அன்பார்ந்த வேண்டு கோள்……

Tuesday, January 4, 2011

விழித்தெழுவோம் விடுதலை பெறுவோம்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் ஆபிரிக்க ஐரோப்பிய பயணங்களை மேற்கொண்டு இருந்தபோது புலிகளின் பினாமி ஊடகங்களும் யாழ் மேலாதிக்க சக்திகளும் அவருக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன. கிழக்கின் அபிவிருத்திக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக யாழ் மேலாதிக்கம் தடையாகவே இருந்து வந்துள்ளது என்பது கிழக்கின் முதுபெரும் அரசியல் அறிஞர்களின் அனுபவம் இந்த கசப்பான அனுபவத்தின் எல்லை கடந்த பொறுமையின் வெளிப்பாடுதான் அஷ்ரப்பின் வெளியேற்றம் ஆகும்.
கிழக்கின் முதல்வர் கௌரவ சந்திரகாந்தனையும் பிரதி அமைச்சர் முரளிதரனையும் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்று கூறுவதற்கு இந்த யாழ் மேலாதிக்க வாதிகளுக்கு என்ன அருகதை இருக்கின்றது. அல்பிரட் துரையப்பாவில் தொடங்கி ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களை எல்லைக்கிராமங்களிலும் பள்ளிவாசல்களிலும் கொன்று குவித்த பிரபாகரனையும் அவரது கூட்டத்தையும் எந்த நீதி மன்றத்தில் ஏற்றப்போகின்றார்கள் இவர்கள்!. யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது இடிவிழும் என்று பாராளுமன்றத்தில் அஷ்ரப் இட்ட சபதம் முள்ளிவாய்க்காலில் முடிந்து இருக்கின்றது. இறைவனின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் இந்த கூட்டம் இந்து மதத்திற்கே அவமானம்.
ராஜிவ் காந்தி அமிர்தலிங்கம் கதிர்காமர் அஷ்ரப் இப்படி எத்தனையோ ஆற்றல் மிகு தலைவர்களை அழித்து தானும் மண்டை பிளந்து அழிந்துபோன தண்டனையாவது உங்களுக்கு சிந்தனையை தூண்டவில்லை என்றால் அது உங்களின் வெறியைத்தான் காட்டுகின்றது.
வாகரையில் 89 கிழக்கிலங்கைப் பெண் போராளிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை யாழ் மேலாதிக்க சக்திகள் மறந்து போனமை கவலையளிக்கிறது.
சகோதரப்படுகொலைகளுக்கு சர்வதேச ரீதியில் பெயர்போன புலிகள் வெளிநாடு வந்தபோது நீதிமன்றில் நிறுத்தக்கோராது. இப்போது மட்டும் கிழக்கு தலைமையை குற்றம் சாட்டுவது உங்களின் குள்ளத்தனங்களுக்கு கிழக்கு மக்கள் அடிபணியப் போவதில்லை வேண்டுமானால் ஸ்ரீலங்கா இராணுவத்தில் சிக்கும் வரையும் நிராஸ்இ தவராஜாஇ துரைரெட்ணம்இ வேதநாயகம் போன்ற கூலிக்கு மாரடிக்கும் குள்ள நரிகள் உங்களுக்கு வக்காளத்து வாங்கலாம். கிழக்கு மக்களோ தும்புத் தடிகளையும் செருப்பு மாலைகளையும் தயாராக வைத்திருக்கின்றார்கள்.
கருணாவும் பிள்ளையானும் இல்லாமல் போனதுதான் புலிகளின் அழிவுக்கு காரணம் என்பதை இப்போதாவது பரிந்து கொள்ளுங்கள் கிழக்கில் நீங்கள் துரத்தி துரத்திச் சுட்ட போராளிகளும் கொழும்பில் நயவஞ்சகமாக நஞ்சு போட்டுக் கொன்ற போராளிகளும் இருந்திருந்தால் கருணா பி;ள்ளையான் தலைமையில் முள்ளி வாய்க்காலில் உங்கள் கொலைகாரத் தலைமைக் கூட்டத்தை காப்பாற்றி இருப்பார்கள். கிழக்கில் அடைக்கலம் கொடுத்து இருப்பார்கள் பாவம் அரசியல் அறம் தவறியதால் அழிந்து போனவர்கள் நீங்கள். எங்களின் அனுதாபங்கள்.
எங்களுக்கென்றொரு தலைமையை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். எதிர்காலத்தில் அதனைப் பலப்படுத்தி எங்கள் மண்ணை அபிவிருத்தி செய்யப்போகின்றோம். ஏங்கள் பாதையில் எங்களை விடுங்கள். தமிழ் தமிழ் என்று ஏமாற்றி எங்களுக்காக முடிவுகளை நீங்கள் எடுத்த காலம் மலையேறி விட்டது. மேலாதிக்கமும் குள்ளத்தனமும்இ அரசியல் நேர்மையின்மையும் அதிகார வெறியும் இருக்கும் வரை உங்களுக்கு விடிவே இல்லை வேண்டுமானால் முள்ளவாய்க்கால்தான் மிச்சம்.


கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் மகன் ஒருவர் எமது
மின் அஞ்சலுற்கு அனுப்பி வைக்கபட்டது