Monday, May 17, 2010

இலங்கையைச் சுற்றி காற்றமுக்கம்.

இலங்கையைச் சுற்றி காற்றமுக்கநிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பையும் அதணை அண்டிய பகுதிகளிலும் இன்று காலை முதல் கடும் காற்று,இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது

Tuesday, May 4, 2010

பாராளுமன்றம் இன்று கூடுகிறது அமர்வுகள் தொடர்ந்து 4 நாட்களுக்கு.

ஏழாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று இடம்பெறுகின்றது. இன்று கூடும் பாராளுமன்றத்தை நான்கு நாட்களுக்கு கூட்டுவதற்கு நேற்று நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பி. டி. திஸாநாயக்க தெரிவித்தார்.
புதிய பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் முதலாவது கூட்டம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இதன் போது இன்றும் நாளையும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 6 ஆம் திகதி ஒழுங்கு விதிகளும் 7 ஆம் திகதி அனுதாபப் பிரேரணையும் இடம் பெறும் எனவும் அவர் கூறினார்.

Sunday, May 2, 2010

அமைச்சுகளுக்குத் தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு.

அமைச்சுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அடுத்த மூன்று மாத காலத்திற்குத் தேவையான நிதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கு வாக்கெடுப்பையே கடந்த நவம்பர் மாதம் நடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அக்கணக்கு வாக்குகெடுப்பின் செலவினங்களுக்கான கால எல்லை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.
வரவுசெலவுத் திட்டமொன்று நிறைவேற்றப் படும் வரை அமைச்சுகளுக்குத் தேவையான நிதியை திறைசேரியிலிருந்து ஒதுக்குவதற்கு அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசெம்பர் வரையான ஆறு மாத காலத்திற்காக குறுகிய கால வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் வழமைபோல் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் கூறியிருந்தமை குறிப் பிடத்தக்கது.

Saturday, May 1, 2010

ஆறுமுகன் தொண்டமானுக்கு புதிய அமைச்சுப் பொறுப்பு

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு கால் நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாரத்திற்குள் ஆறுமுகம் தொண்டமான் கால் நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.