பிறக்கும் புதுவருடம் உலகமக்கள் எல்லோரும்
சாந்தியும் சமாதானத்துடனும்
சமத்துவமாக வாழ இதய
பூர்வமான இனிய வாழ்த்துக்கள்
கிழக்குமகள்
கூமாங்குளத்தில் வீடொன்றில் மாதா உருவப்படத்தில் திடீரென இரண்டு கைகள் தோன்றியுள்ளன. மாதாவின் உருவத்தை ஏந்தியிருப்பது போன்ற வகையில் இந்தக் கைகள் இரண்டும் காணப்படுகின்றன. இரு தினங்களுக்கு முன்னர் இந்த அதிசயம் ஏற்பட்டுள்ளதாக அந்த வீட்டுக்காரராகிய அகிலன் கவிதா என்ற குடும்பப் பெண் தெரிவித்தார். கூமாங்குளத்தில் உள்ள சாயி சிறுவர் இல்லத்திற்கருகில் இந்தப் பெண் வசித்து வருகின்றார். இரண்டு குழந்தைகளின் தாயாராகிய அவர் நேர்த்திக் கடன் ஒன்றை நிறைவேற்றுவதற்காகக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மடுக்கோவிலுக்குச் சென்றபோது, மாதாவின் இரண்டு உருவப்படங்களை வாங்கி வந்ததாகவும், அவற்றில் ஒன்றிலேயே இவ்வாறு இரண்டு கைகள் தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாதா படத்தில் தோன்றியுள்ள இந்த அதிசயக் கைகளை தரிசிப்பதற்காக தினசரி பெருமளவிலான மக்கள் அவரது வீட்டிற்குச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. அதேவேளை இது போன்று மடு அன்னையின் திருவுருவப் படத்திலிருந்து அதிசயக் கரங்கள் இம்மாதம் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டிலும், கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு வீட்டிலும் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தையிலும் அன்னை மரியின் கைகள் தெரியும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. அன்னை மரியின் உருவப் படத்திலிருந்து கைகள் இரண்டு வெளிப்பட்டுள்ளதை இந்தப் படத்தில் காணக்கூடியதாக இருக்கும். வெள்ளவத்தை, பெர்னாண்டோ வீதியில் உள்ள கணேந்திரன் என்பவரின் வீட்டில் நிகழ்ந்த அதிசயத்தினை நாம் கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம். கிறிஸ்மஸ் தினமான கடந்த 25ஆம் திகதி மாலை 3 மணியளவில் குடும்பத்தினர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த சமயம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த அதிசயம் நிகழ்ந்ததாக வீட்டார் கூறுகின்றனர். 2006 ஆம் ஆண்டளவில் புனித மடு தேவாலயத்தில் இந்தப் பிரார்த்தனை புத்தகத்தை வாங்கியுள்ளனர். தொடர்ச்சியாக செய்துவந்த புனிதமான பிரார்த்தனையே இதற்குக் காரணம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். ஆணைக்கோட்டை வராளி கோவிலடியிலுள்ள வீடு ஒன்றில் இதேபோன்ற சம்பவம் அண்மையில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது
மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமையில் நாட்டில் அபிவிருத்தி துரிதகெதியில் முன்னெடுத்துச் செல்லப்படும் போது இதைவிட சிறந்த மாற்றம் தேவையென ரவூப் ஹக்கீமும் அவரது ஜனாதிபதி வேட்பாளரும் கூறுவது வேடிக்கையாக உள்ளது என பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் தெரிவித்தார்.
பெரும் சேவை செய்துள்ள ஆளுமை மிக்கத் தலைவர் ஒருவர் இருக்கும்பொது வேறு ஒரு தலைவர் நாட்டுக்குத் தேவையில்லை என தேசிய நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் வினாயமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இன்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஐ. தே. க. எம்.பியாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தவர் தான் அலி சாஹிர் மெளலானா. இந்தப் பெயரை கேட்டதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது இன்று அமைச்சராகவிருக்கும் கருணா அம்மான் தான். நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்னர் நாடு திரும்பியுள்ள அலி சாஹிர் மெளலானாவை கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு தினகரனுக்குக் கிடைத்தது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்பதற்கான நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு அவரது வருகைக்காக காத்திருந்தோம். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு தன் பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வரும் அவரை சந்தித்த போது, அவர் கொழும்புக்கு வந்து விட்டார் என்ற செய்தி கேட்டு, அவரைச் சந்திக்க நண்பர்கள், ஆதரவாளர்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்களை சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுமாறு கூறி தினகரன் வாசகர்களுக்காக கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் அலி சாஹிர்.
மூலை கிழக்கு பல்கலைக்கழத்தின் 2009ம் ஆண்டுக்கான மாபெரும் கலைகலாச்சார நிகழ்வு கடந்த 22ம் திகதி நடைபெற்றது. வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழ மாணவர் ஓன்றியத்தினால் ஏற்பாடு செய்ப்பட்ட இவ் நிகழ்வு காலை 9 மணிக்கு பல்கலைகழக ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பான வரவேற்புடன் ஆரம்பமானது. இவ் கலாச்சார நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி ஆகியோரும் கௌரவ அதிதிகளாக ஒலுவில் பல்கலைக்கழக துனைவேந்தர் ஸ்மாயில், கிழக்கு பல்கலைக்கழக பதில் துனைவேந்தர் பிறேம்குமார் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் மற்றும் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாளர் துரையப்பா ஆனந்தராஜா (ரஞ்சன்) ஊடக செயலாளர் யூலியன் ஞானப்பிரகாசம் (நியுட்டன்) மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் பல்கலைக்கழக நிர்வாகிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்ட நிகழ்வில் மும்மொழியை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவ் நிகழ்வில் உரைநிகழ்த்திய கௌரவ அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பண்டைய காலத்தில் நிலவிய தகவல் தொழிநுட்பத்தை வைத்து ஐவு எனும் தொழிநுட்பம் அறிமுகமானது தற்போது யேழெ புதிய தொழிநுட்பம் அறிமுகமாகியுள்ளது இந்த நனோ ரெக்னோலிஜி என்று கூறப்படுகின்ற புதிய முறையிலான தொழிநுட்பத்தோடு இன்று கல்வி முறையை வளப்படுத்தி கொண்டு இருக்கின்றோம் கடந்த காலத்தில் விட்ட தவறுகளையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கின்றோம் என குறிப்பிட்டார். அதேவேளை தென்கிழக்கு பல்கலைகழக துனைவேந்தர் கூறுகையில் முன்னையொரு காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையிலான உறவு பிட்டும் தேங்காய்ப்பூ போன்று காணப்பட்டது கடந்த காலங்களில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களினால் நிலைகுலைந்திருந்த அந்த மக்களிடையிலான உறவு மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வந்திருக்கின்றது இதற்க்கு காரணம் எமது அமைச்சர் கருணா அம்மான் தான் என கூறிமுடித்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர் கருணா அம்மான் அவர்கள் போன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.
விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி ஒருவரை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளன.நைஜீரியாவைச் சேர்ந்த அப்துல் முதல்லாத் (வயது 23) என்பவர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து டெட்ராய்ட் நகருக்கு வடக்கு மேற்கு ஏயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார். அப்போது விமானத்தில் ஒரு சாதனத்தை வெடிக்க வைக்க அவர் முயற்சித்துள்ளார்.சக பயணிகள் மற்றும் விமானத்திற்குள் இருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து அவரது முயற்சியைத் தடுத்து விட்டனர். அப்துல்லுக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.வெள்ளிக்கிழமை அந்த விமானம் டெட்ராய்ட்டில் தரையிறங்கவிருந்த சமயத்தில், தான் வைத்திருந்த அந்த சாதனத்தை வெடிக்க வைக்க அந்த நைஜீரியர் முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தீயால் புகை வாசம் வந்ததைத் தொடர்ந்து அருகில் இருந்த பயணிகள் அப்துல்லை மடக்கிப் பிடித்தனர். மேலும் தீயை அணைக்கவும் முயற்சித்தனர்.இந்த அமளியைப் பார்த்து பிற பயணிகளும் ஓடி வந்து அப்துல்லை தடுத்துப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த முயற்சியின்போது அப்துல்லுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவருக்கு அருகில் இருந்த மேலும் 2 பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விமானத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாக தரையிறங்கியது.கைது செய்யப்பட்ட அப்துல்லிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


கோட்டை வராளி கோவிலடி அருகிலுள்ள வீடு ஒன்றில், அன்னை மரியின் படத்திலிருந்து கைகள் தெரியும் அதிசயம் நடந்துள்ளது.ஆனைக்கோட்டை வராளி கோவிலடி வீடு ஒன்றில் அன்னை மரியின் படம் வைத்து வழிபட்டு வந்தனர். நேற்றிரவு இந்தப் படத்தில் இரண்டு கரங்கள் மாதாவைத் தாங்கியபடி நிற்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த அற்புதத்தைக் காண்பதற்காக பலர் அவ்வீட்டுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதற்கு முன்னரும் பருத்தித்துறையில் இரு இடங்களில் மாதாவின் படத்தில் அதிசயமாகக் கரங்கள் தெரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
வீதியினூடாக இன்று முதல் தனியார் மற்றும் சகல வாகனங்களும் கட்டுப்பாடுகள் இன்றிப் பயணிக்க முடியும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி தனக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், "யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ-9 பாதையில் இன்று 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றிப் பயணிக்க முடியும். காலை 6.00 மணி முதல் மாலை 4.00மணி வரை இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்குமிடையிலும் இந்த அடிப்படையில் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் சகல பஸ்களும் யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து தொடரணி இல்லாமல் ஏ-9 வீதியினூடாக பயணிக்க முடியும். தேவைக்கேற்ப இடையிடையே இராணுவச் சோதனை நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.யாழ்ப்பாணத்திலிருந்து பொருட்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டு செல்லுதல் போன்ற செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரும் வரை நடைமுறையில் உள்ளவாறே நாவற்குழி களஞ்சியத்திலிருந்து தொடரணி மூலம் பயணிக்கலாம்.பயணத்தை மேற்கொள்ளும் சகல வாகனங்களும், சாரதி, நடத்துனர்கள், பயணிகள் யாவரும் இச்செயற்பாட்டில் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்
ளப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் வெள்ளத்தினால் சூழப்பட்ட ஊற்றுமடு கிராமத்து மக்களை, இலங்கை செஞ்சிலுவைச் சங்க மீட்புக் குழுவினர் மீட்டு வந்து, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். படகுகள் மூலம் அழைத்து வரப்பட்ட 75 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது வெல்லாவெளி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு, பாராமரிக்கப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து ஆராயும் பொருட்டு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடை பெற்றது.இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இடம் பெயர்ந்துள்ள குடும்பங்களுக்குச் சமைத்த உணவு வழங்குவதற்கும், பாதிப்புக்கு உள்ளான ஏனைய குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்குமான பணிப்புரையை அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி இக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு விடுத்தார். வெள்ளத்தினால் சூழவுள்ள கிராமங்களிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மூலம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்ட அவர், அதற்கான செலவுகளை தனது அமைச்சு வழங்கும் என்றும் குறிப்பிட்டார். இக்கூட்டம் முடிந்த பின்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சகிதம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில இடங்களையும் அமைச்சர் சென்று பார்வையிட்டார். அதேவேளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.விமலராஜ் வெள்ளம் காரணமாக 58 ஆயிரத்து 897 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார். நேற்று மாலை வரை பிரதேச செயலாளர்களிடமிருந்து கிடைத்தத் தகவல்களின் படி 350 குடும்பங்களைச் சேர்ந்த 779 பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.வெள்ளம் தற்போது வடிந்து வருகின்றது. வீதிகளில் வெள்ள நீர் காணப்படுவதால் போக்குவரத்து சேவைகளும் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. இடி மின்னலுக்கு இலக்காகி 4 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி பட்டிப்பளை பிரதேசத்தில் மட்டும் 61 வீடுகள் சேதமடைந்துள்ளன. கடந்த ஒருவார கால மழை வெள்ளம் காரணமாக அந்தப் பிரதேசத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளான் என்றும் அவர் தெரிவித்தார்.
தசாப்தங்களாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் பல சுயநல அரசியல்வாதிகளின் தலையீடுகளால் தடைப்பட்டுவந்துள்ள இந்நிலையில், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தற்போது தனியான பிரதேச செயலகமாக செயற்படுவதற்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான வர்த்தமான பத்திரிகை அறிவித்தல் வெளியாகவுள்ளதாகவும் தெரியவருகிறது.இத்தரமுயர்த்தலுக்காக ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி மேற்கொண்ட முயற்சியின் பலனாக இதற்கான அனுமதியினை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.இம்மகிழ்ச்சியான செய்தி கேட்டு கல்முனை பிரதேச தமிழ்ப்பிரிவு மக்கள் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தும் பட்டாசுகள் கொழுத்தியும் தமது மகிழ்ச்சியைத் வெளிப்படுத்தும் அதவேளை, இதற்கான பாடுபட்ட ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளார் இனியபாரதிக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.இது தொடர்பாக கல்முனை பிரதேச புத்தியீவிகள் தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் இனியபாரதிக்குத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரியவருகிறது.
காலமாக திருக்கோவில் கல்வி வலயத்தை தனி வலயமாக அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியினை அடுத்து இன்று முதல் திருக்கோவில் கல்வி வலயம் தனிக் கல்வி வலயமாக செயற்படுவதற்கு ஜனாதிபதியினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4 மணியளவில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வொன்று திருக்கோவில் கல்வி வலயப் புத்திஜீவிகளால் நடத்தப்பட்டது.இந்நிகழ்வு ஆசிரியர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் கதாநாயகன் இனியபாரதி அவர்களை பேண்ட வாத்தியங்கள் முழங்க மலர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டார். இந்திகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி கைத்தொழில் அமைச்சின் மக்கள் தொடர்பாளர் திரு. நந்தகுமார் அவர்களும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திருக்கோவில் கல்வி வலயப் பாடசாலைகளின் அதிபர்கள், 300இற்கு மேற்பட்ட் ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நீண்ட காலமாக இக்கல்வி வலயத்தினை அமைப்பதற்கு பல்வேறு அரசியல்வாதிகள் பலவழிகளிலும் முட்டுக்கட்டைகளை போட்டுவந்துள்ள நிலையில் இன்று இக்கல்வி வலயம் அமையப்பெறுவது எமக்கு பெரிய வரப்பிரசாதமாகும் என புத்தஜீவிகள் கருத்துத் தெரிவித்தனர்.இதுவரையும் அக்கரைப்பற்று வலயத்தினுள் இயங்கிவந்துள்ள ஆலயடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் கோட்ட தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இவ்வலயத்தில் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.
வருடம் மே மாதம் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இறுதிச் சமர் நடைபெற்ற புதுமாத்தளன் பிரதேசத்துக்கு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயமொன்றை மேற்கொண்டார். இலங்கையில் 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாதத்தை, புலிகளுடன் கடுமையாகப் போரிட்டு முடிவுக்குக் கொண்டுவந்த படையினரின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.நாட்டை ஒன்றுபடுத்திய படை வீரார்களின் பெருமையை என்றும் பறைசாற்றும் வண்ணம் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது
தலைநகர் பக்தாத்தில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 101 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 182 காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.பக்தாத்தின் தென்பகுதி மாவட்டமான டோராவில் இன்று காலை 10 மணியளவில் முதலாவது குண்டு வெடித்தது.ஏனைய மூன்று கார் குண்டுகளும் பக்தாத்தின் மத்திய நகரப்பகுதியில் 10.30 மணியளவில் வெடித்தன.இவற்றுள் ஒன்று சமூக மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சின் முனபாகவும், ஏனையவை வர்த்தக நகரங்களான நாடா மற்றும் அல்-கஷ்லா சதுக்கம் போன்றவற்றில் வெடித்துள்ளன.ஐந்தாவது குண்டு பக்தாத்தின் மேற்கு மாவட்டமான மன்சூரிலுள்ள கார்க் சிவில் கோட்டிலும் வெடித்துள்ளன.
ளப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்ற போது மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டரை வருடங்களின் பின்னர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக
கடந்த வாரம் அறிவித்திருந்ததற்கு அமைய வவுனியா மனிக்பாம் முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு வெளியில் சென்று வருவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் அனுமதி வழங்கியுள்ளது.



மாகாணத்தின் அதி சிறந்த கல்விக்கூடமாக திகழும் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழத்திற்கு தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விஜயத்தினை மேற்கொண்டார் அங்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தினை முதலில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் பின்பு அப் பல்கலைக்கழகத்தின் துனைவேந்தர் பத்மநாதன் மற்றும் பீடாதிபதிகள், பதிவாளர், சபை உறுப்பினர்களை சந்தித்து பல்கலைக்கழத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பாகவும், அண்மையில் மாணவர்களால் நடத்தப்பட்ட பதிவாளர் மாற்றம் தொடர்பான பகிஸ்கரிப்பு மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது எமது பல்கலைக்கழகம் பின்செல்கின்ற நிலை தொடர்பாகவும், மாணவர்கள் மனங்களில் நாம் முதலில் இடம்பிடித்து அவர்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஒற்றுமைப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பில் இந்த உயர் அதிகாரிகள் இருக்கின்றீர்கள் என்றும், வெளிநாட்டில் தங்கள் உயிர்களை காப்பாற்ற சென்ற புத்திஜீவிகள் விசேடமாக கூறப்போனால் எமது பல்கலைகத்தில் இருந்து வெளிநாடு சென்ற இவர்கள் மீண்டும் இங்கு அனுமதி வழங்கி அவர்களை உள்வாங்க வேண்டும் என்றும், எதிர்வரும் 5ம் திகதி பதிவாளருக்கான காலவகாசம் நிறைவுறும் வேளையில் புதிய பதிவாளரை நியமணம் செய்ய வேண்டும் எனவும், ஏனைய பல அபிவிருத்தி தொடர்பாகவும், சிறப்பாகக் கூறப்போனால் எமது மருத்துவ பீடத்தினை நவீன முறையில் கட்டியெழுப்பக் கூடியவகையில் ஒரு நிறுவனத்திடம் உதவி கோரியுள்ளேன். அது விரைவில் கிடைக்கும் என்றும் எமது ஒற்றுமையில்தான் எம்மினத்தின் சிறந்த அபிவிருத்தியும், பலமும் தங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். அத்தோடு எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில். எமது இனத்தினை மதித்து எமக்கு இலங்கைத் திருநாட்டில் சிறந்த கௌரவத்தினை வழங்கியுள்ள அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை நாங்கள் மீண்டும் அதே ஜனாதிபதியின் கதிரையில் அவரை அமர்த்தி நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் அவரை நாம் பலமாக்கி பயன்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.


