Sunday, December 27, 2009

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாபெரும் கலைகலாச்சார நிகழ்வு 2009.

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழத்தின் 2009ம் ஆண்டுக்கான மாபெரும் கலைகலாச்சார நிகழ்வு கடந்த 22ம் திகதி நடைபெற்றது. வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழ மாணவர் ஓன்றியத்தினால் ஏற்பாடு செய்ப்பட்ட இவ் நிகழ்வு காலை 9 மணிக்கு பல்கலைகழக ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பான வரவேற்புடன் ஆரம்பமானது. இவ் கலாச்சார நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி ஆகியோரும் கௌரவ அதிதிகளாக ஒலுவில் பல்கலைக்கழக துனைவேந்தர் ஸ்மாயில், கிழக்கு பல்கலைக்கழக பதில் துனைவேந்தர் பிறேம்குமார் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் மற்றும் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாளர் துரையப்பா ஆனந்தராஜா (ரஞ்சன்) ஊடக செயலாளர் யூலியன் ஞானப்பிரகாசம் (நியுட்டன்) மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் பல்கலைக்கழக நிர்வாகிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்ட நிகழ்வில் மும்மொழியை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவ் நிகழ்வில் உரைநிகழ்த்திய கௌரவ அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பண்டைய காலத்தில் நிலவிய தகவல் தொழிநுட்பத்தை வைத்து ஐவு எனும் தொழிநுட்பம் அறிமுகமானது தற்போது யேழெ புதிய தொழிநுட்பம் அறிமுகமாகியுள்ளது இந்த நனோ ரெக்னோலிஜி என்று கூறப்படுகின்ற புதிய முறையிலான தொழிநுட்பத்தோடு இன்று கல்வி முறையை வளப்படுத்தி கொண்டு இருக்கின்றோம் கடந்த காலத்தில் விட்ட தவறுகளையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கின்றோம் என குறிப்பிட்டார். அதேவேளை தென்கிழக்கு பல்கலைகழக துனைவேந்தர் கூறுகையில் முன்னையொரு காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையிலான உறவு பிட்டும் தேங்காய்ப்பூ போன்று காணப்பட்டது கடந்த காலங்களில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களினால் நிலைகுலைந்திருந்த அந்த மக்களிடையிலான உறவு மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வந்திருக்கின்றது இதற்க்கு காரணம் எமது அமைச்சர் கருணா அம்மான் தான் என கூறிமுடித்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர் கருணா அம்மான் அவர்கள் போன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

தகவல், புகைப்படம் ஊடகச் செயலாளர் யூலியன்.




No comments:

Post a Comment