Monday, April 26, 2010

தலைகீழாகப் பாய்ந்தும் டுபாய் விமானம் விபத்திலிருந்து தப்பியது.

டுபாயில் இருந்து 361 பயணிகளுடன் கொச்சி வந்த விமானம், நடுவானில் காற்று வெற்றிடத்தில் சிக்கி திடீரென 1,500 அடி கீழே பாய்ந்ததால் 17 பயணிகள் காயம் அடைந்தனர் என்று விமான அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர்.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 777 ஜெட் போயிங் விமானம், துபாயில் இருந்து 361 பயணிகளுடன் நேற்றுக் காலை கொச்சிக்கு வந்தது.
இது குறித்து விமானத்தில் பயணித்த அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில்,
விமானத்தில் பைலட்கள் உட்பட 14 விமான ஊழியர்களும் இருந்தனர். பெங்களூர் வான்வெளியில் 35,000 அடி உயரத்தில் காலை 8.50 மணியளவில் பறந்து கொண்டிருந்தபோது, அந்தப் பாதையில் ஏற்பட்ட காற்று வெற்றிடத்தில் விமானம் சிக்கியது. இதனால், விமானத்தால் மேற்கொண்டு பறக்க முடியாமல் போனது.
திடீரென கீழ் நோக்கி 1,500 அடி வரை தலைகீழாக விமானம் பாய்ந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் 'சீட் பெல்ட்' அணியாமல் இருந்ததால், விமானத்தில் கீழே விழுந்து உருண்டனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கப் போவதாக நினைத்து பீதியில் பயணிகள் அலறினர்.
33,500 அடிக்கு கீழ் காற்று வெற்றிடம் இல்லாமல் இருந்தது. இதனால், விமானம் அந்த இடத்துக்கு வந்ததும் சீராக பறக்கத் தொடங்கியது. இதனால், மிகப் பெரிய விபத்திலிருந்து அது தப்பியது.
விமானத்துக்குள் உருண்டதால் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். எல்லா பயணிகளும் பீதியில் உறைந்து கிடந்தனர். விமானம் சகஜ நிலைக்கு வந்ததும் கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொண்டு, நடுவானில் நடந்த விபரீதம் பற்றி கூறினார்.
அவசரமாகத் தரையிறங்க வேண்டும் என்றும் கூறி அனுமதி கேட்டார். உடனே, மருத்துவக் குழுக்கள் அழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.
விமானம் பத்திரமாக தரை இறங்கியதும் காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நடுவானில் ஏற்படக் கூடிய காற்று வெற்றிடத்தை ரேடார்களாலும் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன என்றார்.

Friday, April 23, 2010

37 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்..

37புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் 37 புதிய அமைச்சர்களும் ,பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர்.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.


அமைச்சர்கள் விபரம்

1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த : எரிபொருள், கனியவள அமைச்சர்
3. ரட்ணசிறி விக்ரமநாயக்க : அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர்
4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
5. நிமல் சிறிபால டி சில்வா : பெருந்தெருக்கள், நீர்வள அமைச்சர்
6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், மகளிர் விவகார அமைச்சர்
7. ராஜித சேனாரத்ன : கடற்றொழில் அமைச்சர்
8. மைத்திரிபால சிறிசேன : சுகாதர அமைச்சர்
9. தினேஷ் குணவர்த்தன : நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர்
10. டக்ளஸ் தேவானந்தா : பாரம்பரிய, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்
11. டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன : பொது நிர்வாக அமைச்சர்
12. ரிஷாட் பதியுதீன் : கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு
13. பசில் ராஜபக்ஷ : பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
14. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ : கூட்டுறவு, நுகர்வோர் விவகார அமைச்சர்
15. மில்ரோய் பெர்னாண்டோ : மீள் குடியேற்ற அமைச்சர்
16. குமார் வெல்கம : போக்குவரத்து அமைச்சர்
17. ஜனக பண்டார : காணி விவகார, காணி அபிவிருத்தி அமைச்சர்
18. டியூ. குணசேகர சிறைச்சாலை, புனர்வாழ்வு அமைச்சர்
19. பந்துல குணவர்த்தன : கல்வி அமைச்சர்
20. சம்பிக்க ரணவக்க : மின்சக்தி எரிபொருள் அமைச்சர்
21. விமல் வீரவன்ச : வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22. மஹிந்த யாப்பா அபயவர்த்தன : விவசாய அமைச்சர்
23. டளஸ் அழகபெரும இளைஞர், வேலை வாய்ப்பு அமைச்சர்
24. சி.பி.ரத்நாயக்க : விளையாட்டு அமைச்சர்
25. சுமேதா டி ஜெயசேன : நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
26. அநுர பிரியதர்சன யாப்பா : சுற்றாடல்துறை, பாதுகாப்பு அமைச்சர்
27.அத்தாவுத செனவிரத்ன : நீதி அமைச்சர்
28.மஹிந்த சமரசிங்க : பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
29.ஜீவன் குமரதுங்க : தபால்துறை அமைச்சர்
30.பவித்ரா வன்னியாராச்சி : தேசிய மரபுரிமைகள், கலாசார அமைச்சர்
31.காமினி லொக்குகே : வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு அமைச்சர்
32.பியசேன கமகே : சுதேச வைத்தியத்துறை அமைச்சர்
33. எஸ்.பி.நாவின்ன : தேசிய மொழி, சமூக நல்லிணக்க அமைச்சர்
34.பீலிக்ஸ் பெரேரா : சமூக சேவைகள் அமைச்சர்
35.ஏ.எச்.எம்.பௌசி : இடர் முகாமைத்துவ அமைச்சர்
36. ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் : பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

37. பி. ஜெயரட்ன இராஜாங்க வளம்இமற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சர்

பிரதி அமைச்சர்கள் விபரம்

1. விநாயகமூர்த்தி முரளீதரன்
2. டிலான் பெரேரா
3. சாலிந்த திசாநாயக்க
4.லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன
5. சந்ரசிறி கஜதீர
6. ஜெகத் புஷ்பகுமார
7. டி.பி.ஏக்கநாயக்க
8. மஹிந்த அமரவீர
9. ரோஹித்த அபயகுணவர்தன
10. எஸ்.எம்.சந்திரசேன
11. குணரத்ன வீரகோன்
12. மேர்வின் சில்வா
13. பண்டு பண்டாரநாயக்க
14. ஜெயரட்ன ஹேரத்
15. தயாசிறி டி திசேரா
16. துமிந்த திஸாநாயக்க
17. ரஞ்சித் சியம்பலாபிட்டிய
18. லசந்த அழகியவண்ண
19. எம்.ஆர்.மித்ரபால
20. நிர்மல கொத்தலாவல
21. பிரேமலால் ஜெயசேகர
22. கீத்தாஞ்சன குணவர்த்தன
23. சுசந்த புஞ்சிநிலமே
24. இந்திக பண்டாரநாயக்க
25. முத்து சிவலிங்கம்
26. சிறிபால கம்லத்
27. டபிள்யூ.பி.ஏக்கநாயக்க
28. சந்ரசிறி சூரியாராச்சி
29. நியோமால் பெரேரா
30. சரத் குணரத்ன
31. நந்தமித்ர ஏக்கநாயக்க
32. நிரூபமா ராஜபக்ஷ
33. நவீன் திஸாநாயக்க
34. சரத் குணவர்த்தன
35. ரெஜினோல்ட் குறே
36. விஜித் விஜேமுனி சொய்சா
37 எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
38. ரோகண திஸாநாயக்க
39. வீரகுமார திஸாநாயக்க

Thursday, April 22, 2010

7வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று 20வது பிரதமராக தி.மு ஜயரட்ன பதவிப் பிரமாணம்.

இலங்கையின் 20வது பிரதமராக தி. மு. ஜயரட்ன நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று மாலை 6.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதோடு புதிய பிரதமருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதேவேளை, பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளுமென உத்தியோகபூர்வ வட்டாரங்கள் கூறின.
40 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவை ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் வரை இருக்குமென சு.க. செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்கிடையில், இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.45க்கு ஆரம்பமாகிறது.
இலங்கையின் 20வது பிரதமராக பதவியேற்றுக்கொண்ட டி. எம். ஜயரட்ன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் இன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர். அதற்கு முன்னதாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராக தெரிவு செய்யப்படும் உறுப்பினர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இடம்பெறும்.
குழுக்களின் பிரதித் தலைவர், ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத் தலைவர் போன்றோரின் தெரிவுகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும். நடந்து முடிந்த பொதுத் தேர்தல்மூலம் ஏழாவது பாராளுமன்றத்துக்கு தெரிவான 196 உறுப்பினர்களும், தேசியப் பட்டியல் மூலம் தெரிவான 29 உறுப்பினர்களுமாக 225 பேரும் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர்.
குறிப்பாக ஐ.ம.சு.மு., ஐ.தே.க., ஐ.தே.கூ., இ. தமிழரசுக் கட்சி ஆகியவற்றில் புது முகங்களாக சுமார் 70 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.45க்கு நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் சபை எதிர்வரும் மே 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.

Wednesday, April 21, 2010

பயிற்சியை முடித்து 41 தமிழ்ப் பொலிஸார் வெளியேற்றம்..

ஆறு மாத கால பயிற்சியை நிறைவு செய்த தமிழ்ப் பேசும் 41 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று காலை உத்தியோக பூர்வமாக வெளியேறினர்.
மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூயில் பயிற்சியை நிறைவு செய்த பொலிஸ் வீரர்களுக்கான அணி வகுப்பு மரியாதை கல்லடி பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறும் ஆறாவது தமிழ்ப் பேசும் பொலிஸ் பிரிவினர் இவர்களாவர்.
இது தொடர்பான வைபவத்தில் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிப் பணிப்பாளர் அஜித் பண்டார பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கல்லடி பயிற்சிக் கல்லூரி பணிப்பாளர் எஸ். செல்வராசா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
திறமையாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களூக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

திருமலை, கண்டி மாவட்டங்களிலும் ஐ.ம.சு.முன்னணிக்கு அமோக வெற்றி..

திருமலை: ஐ.ம.சு.மு. - 02; ஐ.தே.க. 01; தமிழ் அரசுக்கட்சி - 01
கண்டி: ஐ.ம.சு.மு. - 08; ஐ.தே.க. - 04
மொத்த ஆசனங்கள்
ஐ.ம.சு.மு. - 127; இ.த.அ.கட்சி - 13
ஐ.தே.க. - 51; ஜன.தே.மு. - 05

திருகோணமலை, கண்டி மாவட்டங்களிலும் ஐ. ம. சு. மு. அமோக வெற்றி பெற்றுள்ளது.

மேற்படி இரு தேர்தல் மாவட்டங்களின் முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

இதன்படி திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. இரு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதே நேரம் கண்டி மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. 3,39,813 வாக்குகளைப் பெற்று எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. திருமலை மாவட்டத்தில் ஐ. தே. க. ஒரேயொரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தை எடுத்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஐ. தே. க. 1,92,798 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை மாத்திரமே எடுத்துள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணி ஆசனம் எதனையும் பெறவில்லை.

இதன்படி, கண்டி மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. 1,47,02 வாக்கு வித்தியாசத்தால் வெற்றிபெற்றிருக்கிறது.

குளறுபடிகள் காரணமாக இரத்துச் செய்யப்பட்டிருந்த நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டி மீள் வாக்குப் பதிவு முடிவுகள் நேற்றிரவு வெளியானதைத் தொடர்ந்து, கண்டி, திருமலை மாவட்டங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. 59,784 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது 42.78 வீதமாகும். இங்கு போட்டியிட்ட ஐ. தே. க. 39,691 வாக்குகளையும், தமிழரசுக் கட்சி 33,268 வாக்குகளையும் பெற்று தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளன. கடந்த 8ம் திகதி நடந்த பொதுத் தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தினதும், கண்டி மாவட்டத்தினதும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

திருமலை மாவட்டத்திலுள்ள கும்புறுப்பிட்டி வாக்குச் சாவடியிலும், கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 37 வாக்குச் சாவடிகளிலும் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இவைகளுக்கான மீள் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது.

தேர்தல் முடிவுகள் நேற்றிரவு 8.15 அளவில் வெளியிடப்பட்டன. திருமலை மாவட்டத்தின் முடிவு முதலில் அறிவிக்கப்பட்டது. இரவு 11.25 அளவில் நாவலப்பிட்டித் தேர்தல் தொகுதிக்கான முடிவு வெளியாகியது.

இதற்கமைய, திருமலை மாவட்டத்தின் முடிவுகள் வெளியாகின. இதன்படி, திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. இரண்டு ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் ஐ. தே. க. ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. (திருமலை மாவட்டத்தில் மொத்தம் நான்கு ஆசனங்களைக் கொண்டதாகும்.

இதேநேரம், கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டித் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவும் வெளியாகின.

நாவலப்பிட்டியத் தொகுதியில் ஐ. ம. சு. மு. 38,153 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐ. தே. க. 11,646 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தல் தொகுதியில் 26,507 வாக்கு வித்தியாசத்தில் ஐ. ம. சு. மு. அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்தச் செய்தி அச்சுக்குப் போகும் வரை கட்சிகளின் தேசியப்பட்டியல் தொடர்பான முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.

நேற்று நள்ளிரவு வரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி, ஐ. ம. சு. மு. 127 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஐ. தே. கட்சி 51 ஆசனங்களை மாத்திரமே எடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், ஜனநாயகத் தேசிய ஐந்து முன்னணியினால் ஆசனங்களை மாத்திரமே பெற முடிந்துள்ளது.

மோசடி மற்றும் குளறுபடிகள் காரணமாக வாக்களிப்பு ரத்துச் செய்யப்பட்ட நாவலப்பிட்டி, கும்புறுபிட்டி மீள் வாக்கெடுப்பு எதுவிதமான அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நிறைவடைந்துள்ளது. காலை ஏழு மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு மாலை நான்கு மணிவரை மிகச் சுமுகமாக இடம்பெற்றதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் பொலிஸாரும் தெரிவித்தனர்.

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 37 வாக்குச் சாவடிகளிலும் 55% - 60% வாக்குப் பதிவு இடம்பெற்றதாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கோட்டாபய ஜயரட்ன தெரிவித்தார்.

தேர்தல் மிக அமைதியாக இடம்பெற்றதாகவும் எதுவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவுபெறும் வரை கண்டி மாவட்டச் செயலக வளாகம் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவத்தாட்சி அதிகாரி நேற்று மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் 37 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் கண்டி மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் கடமையில் அமர்த்தப்பட்டிருந்ததாகத் தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

12 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கண்டி மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளிலும் 17 சுயேச்சைக் குழுக்களிலுமாக 465 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் சுமுகமாக வாக்களித்துள்ளனர். நாவலப்பிட்டியின் சகல இடங்களிலும் காணப்பட்ட போஸ்டர்களையும் பதாதைகளையும் பொலிஸார் கிழித்தெறிந்தனர்.

இங்கு 37 வாக்களிப்பு நிலையங்களிலும் 50,947 பேர் வாக்களிக்கவிருந்தனர். எனினும் 60% மட்டுமே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

இதேநேரம், திருகோணமலை கும்புறுபிட்டி வாக்களிப்பு நிலையத்திலும் மீள் வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றுள்ளது.

இங்கு 977 பேர் வாக்களிக்கவிருந்தனர். முப்படையினரும் பொலிசாருமாக சுமார் இரண்டாயிரம் பேர் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

கண்டி, திருகோணமலை மாவட்டங்களின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் உரித்தான தேசியப் பட்டியல் ஆசன விபரங்களும் வெளியிடப்படும்.

Friday, April 16, 2010

காலிமுகத்திடலில் ஜனாதிபதி....

தமிழ் சிங்களப் புத்தாண்டை தமது கிராமப் பிரதேசங்களில் கொண்டாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையில் எண்ணெய் தேய்க்கும் பாரம்பரியக் கடமையை நிறைவேற்றியபின்னர் நேற்று கொழும்பு திரும்பும் வழியில் சற்று நேரம் காலி முகத்திடலில் தமது நண்பர்களுடன் உல்லாசமாக பொழுதைக் கழித்தார்.
விமானம் மூலம் கொழும்பு வந்த ஜனாதிபதி அலரி மாளிகைக்குச் செல்வதற்கு முன்னரே காலி முகத்திடலுக்குச் சென்றார்.
ஜனாதிபதியின் இத்திடீர் நடவடிக்கையால் அங்கு கூடியிருந்த பொது மக்கள் வியப்படைந்தனர். நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுவதை ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக பொது மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்

Wednesday, April 14, 2010

சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....


இணையத்தள வாசகர்களுக்கு எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Friday, April 9, 2010

பொதுத் தேர்தல்2010. 21மாவட்டங்களின் இறுதித் தேர்தல் முடிவுகள்...

திருகோணமலை மாவட்ட முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மொத்த முடிவுகள். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு-120 ஐக்கிய தேசிய முன்னணி-47 இலங்கைத் தமிழரசுக் கட்சி-12 ஜனநாயக தேசியக் கூட்டணி-6 (இவைதவிர தேசியப் பட்டியல் மூலம் தெரிவாக உள்ளவர்களும் இணைக்கப்படுவார்கள்.)
--------------------------------------
கொழும்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
-------------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 480,896 (10 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 339,750 (7 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 110,683 (2 ஆசனங்கள்)
--------------------------------------
காலி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
------------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 305,307 (7 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 120,101 (2 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 33,663 (1 ஆசனம்)
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
பொலன்னறுவை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
-----------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 118,694 (4 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 45,732 (1 ஆசனம்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 6,457
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
-------------------------------------
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 66,235 (3 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 62,009 (1 ஆசனம்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 22,935 (1 ஆசனம்)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ‐ 16,886 (ஆசனம் இல்லை)
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்.
-----------------------------------------
இலங்கைத் தமிழரசுக் கட்சி 65,119 (5 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 47,622 (3 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 12624 (1 ஆசனம்)
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 6362
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
வன்னி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்.
-----------------------------------------
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 41673 (3 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 37522 (2 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 12783 (1 ஆசனம்)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ‐ 5900
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
நுவரெலியா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்.
------------------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 149,111 (5 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 96,885 (2 ஆசனங்கள்)
மலையக மக்கள் முன்னணி ‐ 13,189 (ஆசனங்கள் இல்லை)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 3,984 (ஆசனங்கள் இல்லை)
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
-------------------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 132,096 (4 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 90,757 (2 ஆசனங்கள்)
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‐ 26,895 (1 ஆசனம்)
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
-------------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 589,476 (12 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 266,523 (5 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 69,747 (1 ஆசனம்)
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
புத்தளம் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்.
-------------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 167,769 (6 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 81,152 (2 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 8,792 (ஆசனம் இல்லை)
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
களுத்துறை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்.
-----------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 313,836 (7 ஆசனங்கள் )
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 139,596 (2 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 36,722 (1 ஆசனம்)
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
கேகாலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
--------------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 242,463 (7 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 104,925 (2 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 13,518 (ஆசனங்கள் இல்லை)
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
----------------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 221,204 (7 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 80,360 (2 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 18,129
சிங்களே மஹா சம்பத்த பூமிபுத்திர ‐ 11,445
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
இரத்தினபுரி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
--------------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 305,327 (07 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 125,076 (03 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 11,053
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
குருணாகல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்.
---------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 429316 (10 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 213713 (5 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 26440 (ஆசனங்கள் இல்லை)
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
மாத்தளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்.
---------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 131,069 (4 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 55,737 (1 ஆசனம்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 7,636
---------------------------------
பதுளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்.
--------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 203,689 (6 ஆசனங்கள் )
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 112,886 (2 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 15,768
மலையக மக்கள் முன்னணி ‐ 11,481
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
மொணராகலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்
-----------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 120,634 (4 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 28,892 (1 ஆசனம்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 9018 (ஆசனம் இல்லை)
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்
---------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 213,397 (6 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 91,114 (2 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 20,465
‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்
---------------------------------
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ‐ 174,808 (5 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய முன்னணி ‐ 83,027 (2 ஆசனங்கள்)
ஜனநாயக தேசியக் கூட்டணி ‐ 19,186

Thursday, April 8, 2010

அக்கறைப்பற்றில் சற்றுமுன்னர் மோதல் சம்பவம்.

அக்கறைப்பற்று ஆளையடிவேம்பு பகுதியில் சற்றுமுன்னர் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தேர்தலின் பின்னரான வன்முறைகள் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நாவலப்பிட்டியவில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான வாக்கெடுப்பு நிலையங்களில் கள்ளவாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் அதனால் குறிப்பிட்ட வாக்கெடுப்பு நிலையங்களின் முடிவுகளை இரத்துச் செய்யுமாறும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 15 பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Thursday, April 1, 2010

வடக்கின் மீள் கட்டுமானப் பணிகள் 4 இலட்சம் சீமெந்து மூடைகள் இந்தியாவினால் கையளிப்பு.

வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களின் மீள் கட்டுமானப் பணிகளுக்கென இந்திய அரசு 200 மில் லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சம் சீமெந்து மூடைகளை நேற்று கையளித்தது.
இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த், தேச நிர்மான, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செய லாளர் டபிள்யூ. கே.கே. குமாரசிறியிடம் சீமெந்து மூடைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
கொழும்பு பேலியாகொடையிலுள்ள அல்ரா டெக் சிமென்ட் லங்கா நிறுவனத்தில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வீடு வாசல்களை இழந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
மீளக் குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 சீமெந்து மூடை கள் வீதம் வழங்க தேச நிர்மான அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசு ஏற்கனவே 2600 மெற்றிக் தொன் கூரைத் தகடுகளை வழங்கியிருந்தது. அதற்கு மேலதிகமாகவே 20,000 மெற்றிக் தொன் கொண்ட நான்கு இலட்சம் சீமெந்து மூடைகளை வழங்க முன் வந்துள்ளது.
மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு அந்தந்த பகுதியிலுள்ள பிரதேச செயலாளரின் சிபாரி சுகளுக்கு அமைய சீமெந்து மூடைகள் வழங் கப்படும். இந்திய அரசு இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் சமைய லறை பாத்திரங்கள் என இலங்கை நாணயப்படி 610 மில்லியன் ரூபா பெறுமதி யான பொருட்களையும் முன்பே கையளித் திருந்தது.
மீளக் குடியமர்த்தவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்தும் உதவிகளை செய்யும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.