Sunday, January 31, 2010

சுவிஸ் ஊடகவியலாளரின் விசாவை ரத்துச்செய்யும் தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளது

சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையைஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்துள்ளது. இந்த நிலையில் அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தகவல் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின் படி குறித்த செய்தியாளருக்கான வீசா ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் பி பி அபயகோன் தெரிவித்துள்ளார்.எனினும் அதற்கான காரணம் எதுவும் தமக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிடடுள்ளார். இது தொடர்பில் கருத்துரைத்து கரின் வெங்கர், தாம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த போதும் அது நிராகரிக்கப்பட்டு தம்மை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தாம் அரசாங்கத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்,அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வி ஒன்றை கேட்டமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரின் வெங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறுமாறும், அதுவரை எந்த ஒரு செய்தியாக்கல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாதெனவும் கரின் வெங்கர் இலங்கை அரசாங்கத்தினால் கேட்கப்பட்டுள்ளார்.

Friday, January 29, 2010

62 வது சுதந்திர தின வைபவம் கண்டியில்

பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 62 ஆவது சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பிரதேசத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்தார்.
பொலிஸாரினதும் முப்படையினர்களதும் கண் காட்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் விசேடமாக இடம் பெறவுள்ளன.
இதேவேளை "தேசத்தின் மகுடம்" கண்காட்சியும் கண்டி பள்ளேகலையில் அன்றைய தினம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

Thursday, January 28, 2010

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் மைத்திரிபால சிறிசேன..

நாடாளுமன்றத்தை விரைவில் கலைத்து பொதுத் தேர்தஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் நாடாளுமன்ற அமர்வுகள் அனைத்தும் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 27, 2010

ஜனாதிபதி தேர்தலின் அனைத்து வேட்பாளர்களும் பெற்றவாக்குகள்..



மகிந்த ராஜபக்ச 6015934 (57.88)
சரத் பொன்சேகா 4173185 (40.15)
மொகமட் காசின் மொகமட் இஸ்மாயில் 39226 (0.38)
அச்சல அசோக சுரவீர 26266 (0.25)
சன்ன ஜானக்க சுகத்சிறி கமகே 23290 (0.22)
டபிள்யூ.வீ.மகிமான் ரஞ்சித் 18747 (0.18)
பீ.டீ.பி.சொலமன் அணுர லியனகே 14220 (0.14)
சரத் மனமேந்திரா 9684 (0.09)
எம்.கே.சிவாஜிலிங்கம் 9662 (0.09)
உக்குபண்டா விஜேகோன் 9381 (0.09)
லால் பெரேரா 9353 (0.09)
சிறிதுங்க ஜயசூரிய 8352 (0.08)
விக்கிரமபாகு கருணாரத்ன 7055 (0.07)
இட்ருஸ் மொகமட் இல்லியாஸ் 6131 (0.06)
விஜே டயஸ் 4195 (0.04)
சேனத் பின்னடுவ 3523 (0.03)
மொகமட் முஸ்தபா 3134 (0.03)
பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 2770 (0.03)
சேனாரத்ன டீ சில்வா 2620 (0.03)
அருண டீ சொய்சா 2618 (0.02)
முத்து பண்டார தெமினிமுல்ல 2007 (0.02)
உபாலி சரத் கொஹன்கே 144 (0.03)

Tuesday, January 26, 2010

முன்னாள் கொமாண்டோக்கள் 20 போர் கைது பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்....

தேர்தல் தினமான இன்று வன்முறைகளில் ஈடுபடுவதற்கென தயாராகவிருந்த 20 முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
காலி கொக்கரெல்ல பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தலின் போது வன்முறைகளை முன்னெடுப்பதற்காக பாரிய திட்டங்களை இவர்கள் தீட்டி வருவதாக கிடைத்த தகவலையடுத்து கொழும்பிலிருந்து சென்ற விசேட இராணுவக் குழுவினரே மேற்படி இருபது முன்னாள் கொமாண்டோக்களை ஆயுதங்களுடன் கைது செய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 20 பேரும் இராணுவ பொலிஸார் மற்றும் சி. ஐ. டி.யினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.
இவர்கள் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவினரென தெரியவந்த போதும் இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தரங்களைச் சேர்ந்தவர்களென்ற விவரம் பூரண விசாரணகளுக்குப் பின்னரே தெரியவருமெனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பில் ஜானாதிபதி தேர்தல் 2010 வாக்களிக்கும் கருணா அம்மான் ..

இலங்கையின் அடுத்த ஜானாதிபதியை தெரிவுசெய்யும் ஜானாதிபதி தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் தங்களது அடுத்த ஜானதிபதிக்கு வாக்களித்து கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச தலைவர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகிறார்கள். குறிப்பாக மட்டக்களப்பு கிரான் பகுதியில் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய வி.முரளிதரன் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.


Monday, January 25, 2010

தேர்தல் கண்காணிப்பில் 35,000 வெளிநாட்டு, உள்நாட்டு பிரமுகர்கள் 1000 வாகனங்கள் பணியில்..

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக சுமார் ஆயிரம் வாகனங்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் பொது நலவாய மற்றும் தெற்காசிய பிராந்தியம் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும் 85 க்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமது பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் தேர்தல் திணைக்களம் மற்றும் தனியார் கணிகாணிப்பு அமைப்புக்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் கணிகணிப்புக்கான வலையமைப்பு, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் ,தேசிய வாக்களிப்பு கண்காணிப்பு நிலையம், பெப்ரல், கபே உள்ளிட்ட சில தனியார் தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தேர்தல் ஆணையாளர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தெற்காசிய பிராந்தியத்திலிருந்து 40 பேரையும் பொது நலவாயத்திலிருந்து 10 பேரையும் இலங்கைக்கு வரவழைத்திருப்பதாகவும் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறினார்.
இதேவேளை, பெப்ரல் அமைப்பு 17 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் சி. எம். இ. வி. 18 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் வரவழைத்திருப்பதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார், தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, சுவீடன், கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கிஸ், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்தே இலங்கை வந்துள்ளனர்.
வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் நடமாடும் கண்காணிப்பினை நடத்துவதற்காக சுமார் ஆயிரம் வாகனங்களை மேற்படி தனியார் கண்காணிப்பு நிலையங்கள் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் நிவாரணக் கிராமங்களில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளுக்கென விசேடமாக உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெப்ரல் அமைப்பு ஆறாயிரம் உள்நாட்டு மற்றும் 17 வெளிநாட்டவர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தவிருப்பதாக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஆசிய நாடுகளிலிருந்தும் ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, சுவீடன் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும் 17 பேரும் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, பெப்ரல் அமைப்பினால் 352 வாகனங்கள் இம்முறை நடமாடும் சேவைக்கு ஈடுபடுத்தப்படுமெனவும் ரோஹண கூறினார்.
சி. எம். ஈ. வி. – நிலையம் 3500 உள்நாட்டவர்களையும் 18 வெளிநாட்டவர்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ள அதே நேரம், 80 வாகனங்களை நடமாடும் சேவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஆசிய நாடுகளிலிருந்தும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து 18 பேரை சி. எம். ஈ. வி. வரவழைத்துள்ளது. இதில் நேபாளத்திலிருந்தே ஆகக் கூடுதலாக 10 கண்காணிப்பாளர்கள் வந்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, புத்தளம், அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை, ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனரெனவும் அவர் கூறினார்.
ஐ. எப். எச். ஆர் நிலையம் நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 872 பேரை இம்முறை கண்காணிப்பில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் 08 வாகனங்கள் நடமாடும் சேவையினை மேற்கொள்வதாகவும் அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் 6 ஆயிரத்து 563 உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 300 வாகனங்களையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக அதன் பேச்சாளர் கி. பி. தென்னகோன் கூறினார்.
தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் இம்முறை 1200 உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 150 வாகனங்களையும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக அதன் அதிகாரி தெரிவித்தார்.

Saturday, January 23, 2010

ஜனாதிபதியின் அமோக வெற்றி உறுதி பால்சோறு, பலகாரங்களுடன் அமைதியாக கொண்டாடுங்கள் - அமைச்சர் மைத்திரி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெறுவது உறுதி என்றும் எதிர்வரும் 27ம் திகதி இந்த நாட்டிலுள்ள சகல இன மக்களும் பாற் சோறு, பலகாரங்களை செய்து இந்த வெற்றியைக் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை எதிர் அணி ஆதரவாளர்களுக்கு எந்தவித பாதிப்புக்கள் ஏற்படுத்தாத வகையிலும் வன்முறைகளை ஏற்படுத்தாத வகையி லும் முன்னெடுக் குமாறு அவர் சகல ரையும் கேட்டுக் கொண்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர்களான அமைச்சர் டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச எம்.பி. ஆகியோர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றிக்காக இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாங்கள் எதிர்பார்ப்பதைவிட பாரிய ஒத்துழைப்புக் களை வழங்கியுள்ளதுடன் வாக்குகளை வழங்கவும் தயாராகவுள்ளனர்.
உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புக்கள் நடத்திய சகல கருத்துக் கணிப்புகளிலும் ஜனாதிபதி முன்னணியில் இருக்கின்றார்.
ரணில் - சரத் பொன்சேகா - சம்பந்தன் ஒப்பந்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் பெறும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் தற்பொழுது காணப்படுகின்ற சமாதானத்தை மீண்டும் பலிகொடுக்க எந்த இன மக்களும் தயாராக இல்லை.
ஈழ நீதிமன்றத்திற்கு ஈழப் பொலிசுக்கு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்ட விரோத வரிக்கு, பிள்ளைகளை பலாத்காரமாக பிடித்து, ஆயுதப் பயிற்சி வழங்கி, சிறு வர் படைக்கு சேர்க்கும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, வடக்கு, கிழக்கு மக்களும் இந்நாட்டில் மீண்டும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை. எனவே 70 வீதமான மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்க தீர்மானித்து விட்டனர் என்றார். தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறும் நடவடிக்கைகளும், பாரிய
வன்முறைகளும் இந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெறுகின்றது என்பதை சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்க எதிர்க்கட்சிகள் முனைகின்றனர். ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதி என்பதை தெரிந்தே எதிர்க்கட்சிகள் இது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். எனவே, 2005ம் ஆண்டு தேர்தலை அமை தியாக நடத்த முடிந்தது போன்று இந்த தேர்தலையும் அமைதியாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரினார்.
பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட போது இந்த நாட்டு மக்கள் ஜாதி, மத பேதங்களுக்கு அப்பால் கொண்டாடியது போன்று 27ம் திகதி ஜனாதிபதியின் அமோக வெற்றியையும் அமைதியாகவும், சந்தோஷத்துடனும் கொண்டாடுமாறும் தெரிவித்தார்.

Friday, January 22, 2010

தமிழ் அரசியல் கைதிகள் 200 பேர் அடுத்த வாரம் விடுதலை...

மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 200 பேர் அடுத்த வாரத்திற்குள் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 48 பேரில் 17 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளதுடன் 13 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 13 பேர் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியானதும் அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
200 பேரை அடுத்த வாரத்திற்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சும் சட்டமா அதிபர் திணைக்களமும் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் வவுனியா தெல்லிப்பழை வெலிக்கந்த ஆகிய இடங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 11 ஆயிரம் பேரில் 700 பேர் அண்மையில் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றங்கள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் படிப்படியாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை தொடர்பாக ஆராயவென சட்டமா அதிபர் திணைக்களம் 10 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கைது செய்யப்பட்ட பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்குவது என்றாலும் கூட நன்கு ஆராய்ந்தே விடுதலைப் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். யுத்த காலப் பகுதிகளில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டார்கள்.
இவ்விடயத்தில் அமைச்சு மிகவும் கவனமாக செயற்பட்டு வருகிறது. யுத்தம் முடிந்த பின்னரும் கூட வெறுமனே தடுத்து வைத்திருப்பதில் பலனில்லை. எவ்விதத்திலேயேனும் அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
சரணடைந்தவர்கள் தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகிறது. அவர்களை வெறுமனே வெளியில் விடாமல் அவர்களது பெற்றோருடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்கவும் சுயதொழில் செய்வதற்கு தேவையான உதவிகளையும் பெற்றோரிடம் கலந்தா லோசித்து பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.
எனவே இவ்விடயத்தில் எவரும் அரசியல் இலாபம் தேடக்கூடாது. அரசாங்கமும் அமைச்சும் இளைஞர்களின் விடுதலை தொடர்பான தேவையான சகல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Thursday, January 21, 2010

காலியில் பிரசார நடவடிக்கையில் 5000 இளைஞர்-யூவதிகள் அமைச்சர் பியசேன கமகே ஏற்படு

ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக காலிப் பகுதியில் விசேட தேர்தல் பிரசார நடவடிக்கை ஒன்றுக்கு அமைச்சர் பியசேன கமகே ஏற்படு செய்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் 5000 இளைஞர் - யுவதிகள் பங்குபற்றும் பாரிய பிரசார நடவடிக்கைகள் இன்று காலி நகர்ப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பியசேன கமகேயின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பிரசார நடவடிக்கைகளில் காலி மாவட்ட அமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும்; பங்குபற்றுகின்றனர்.

Wednesday, January 20, 2010

உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிப்பு..

யாழ்ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை உடனடியாக நீக்கி அந்தக் காணிகளை உரிய பொதுமக்களுக்கு வழங்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. வலி வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலய பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்வதற்கு வசதியாகவே பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
எனவே குடியேற விரும்பும் காணி உரிமையாளர்கள் உறுதிப்படுத்துவதற்கான காணிக்குரிய ஆவணங்களுடன் வலி-வடக்கு கோப்பாய் பிரதேச செயலகங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவு நேரடி ஒலிபரப்பு இல்லை தேர்தல் ஆணையாளர்..

இம்முறை ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவு பிரகடனம் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படமாட்டாது எனவும் பதிவு செய்யப்பட்டு பின்னரே அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

Tuesday, January 19, 2010

சம்மந்தன் ஜயாவுக்கு.........

ஜயா
நீங்கள் இன்னும் நித்திரை விட்டு எழும்பவில்லை
என்றால் மற்றவர்களும் நித்திரை விட்டு எழும்பவில்லை
என்றா நினைக்கின்றீர்கள் யாருடைய காலத்தில்
சிங்கள குடியேற்றம் இன அழிப்பு நடந்தது என்பதை
மறந்து விட வேண்டாம்
எங்களை காப்பாற்ற எங்களுக்கு தெரியும் இவ்வளவு
காலமும் இல்லாத அக்கறையும் கவலையும் இப்பொழுது
ஏன் ஏற்பட்டது என்பது புரியாத புதிராக இருக்கின்றது
நீங்கள்(கூட்டமைப்பு) எங்களுக்கு செய்த நம்பிக்கை
துரோகம் மாதிரி வேறு எவரும் எங்களுக்கு துரோகம்
செய்யவில்லை
இன்று நாங்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும்
வாழ்கிறோம் இதனை குலைக்க வேன்டாம் எங்களை
நிம்மதியாக வாழ விடுங்கள் முடிந்தால் மற்ற
மக்களையும் நிம்மதியாக வாழ விடுங்கள்
அன்புடன்
கிழக்கில் இருந்து ஒருவன்


சம்மந்தன் ஜயாவின் அறிக்கை கீழே

மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணம் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படும் - சம்பந்தன்
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக பதவி ஏற்றால் கிழக்கு மாகாணம் முழுவதும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விடும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் மேற்கொண்டு வரும் பரப்புரை நடவடிக்கையின் போதே சம்பந்தன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் சொந்தமாக வாழ்விடங்களை தற்போதைய அரசு ஆக்கிரமித்து வருவதாகவும் மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவி ஏற்றால் அந்த பகுதிகள் முற்றாக பறிபோய்விடும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்: 25-27 ஆம் திகதி வரை அரச பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும்...

எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.ஜனவரி 28 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்கான பாடசாலைகள் மீண்டும் திறக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை தேர்தலினை முன்னிட்டு இராணுவத்தினரது விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையின் நோக்கு பொருளாதார அபிவிருத்தியே பிரதமர் தெரிவிப்பு.....

மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு என அரசாங்கம் முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடனம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது தொடர்பானதேயாகும் என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற ஜனஹமுவ நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்
2005ஆம் ஆண்டு நாம் மஹிந்த சிந்தனை கொள்கை பிரகடனத்தை முன்வைத்தோம். நாட்டில் சமாதானம் ஏற்படுவது தொடர்பாக அதில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. அதனை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். அத்துடன் அபிவிருத்தியிலும் எமக்கு வெற்றியைப்பெற முடிந்தது.
மஹிந்த சிந்தனை 2 இல் குறிப்பிட்டுள்ளவாறு திட்டமிட்ட வேலைத் திட்டத்தின் மூலம் நாட்டில் தன்னிறைவை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Monday, January 18, 2010

யாழ். விவசாயிகளுக்கு தண்ணீர் இறைக்கும் 83 இயந்திரங்கள் கையளிப்பு...

யாழ் குடாநாட்டில் உள்ள விவசாயிகளின் தேவைகருதி 83 நீர் இறைக்கும் இயந்திரங்களும் விவசாய உற்பத்திப் பொருட்களை பக்குவமாகக் கொண்டு செல்லக் கூடிய பிளாஸ்ரிக் உறைகளும் யாழ். திருநெல்வேலியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று வழங்கப்பட்டன.
விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்பு அதிதியாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியும்; கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரைநிகழ்துகையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்விற்கு ஜே.வி.பி. ஒருபோதும் இடமளிக்காது. இந்நிலையில் ஜே.வி.பியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள எதிரணியினரால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்க முடியாது.
எனவே எதிர்த்தரப்பினர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினாலும் அவை ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. தற்போது உள்ள அமைதியான சுழ்நிலையை மென்மேலும் வளர்த்துக் கொள்வதற்காகவும் கௌரவமானதும் நிலையானதுமான அரசியல் ரீதியிலான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கும் நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதன் மூலமே அது சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார்.

மலையக மலர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும் கொட்டகலையில் ஜனாதிபதி ......

வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயத்தினை போல், மலையகத்தை அபிவிருத்தி செய்ய மலையக மலர்ச்சி எனும் வேலைத் திட்டத்தினை உருவாக்குவேன்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் நேற்று கொட்டகலை பொது விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்திற்கு இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதி அமைச்சர்களான முத்துசிவலிங்கம், ஜெகதீஸ்வரன், மாகாண அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன், மாகாணசபை அமைச்சர்கள், பிரதேச சபை, நகரசபை தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில், நான் உங்களிடம் வந்து உரையாற்றக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று எனக்குத் தெரியும், நீங்கள் பாரிய பொருளாதார சுமைக்கு முகம்கொடுத்து வருகிறீர்கள். மே 19 திகதிக்கு முன் இந்த நாட்டில் வேறு பிரச்சினைகள் இருந்தன. மலையக இளைஞர்கள் வேலைக்குச் செல்லமுடியாது; நிம்மதியாக இருக்க முடியாத நிலை இருந்தது. அதை இன்று நான் இல்லாது செய்துள்ளேன். அதேபோன்று, உங்கள் வாழ்க்கையையும் சுபீட்சமாக்குவேன்.மலையக மக்கள் இந்நாட்டின் உயிர்நாடிகளாவர். அதனை எவரும் மறுக்கமுடியாது. அதுதான் யதார்த்தம். எனவே,அவர்களின் வாழ்க்கை வளம் பெறுவதற்காக இன்னும் 3,000 அரச நியமனங்களை வழங்க உள்ளேன். இன்று மலையக இளைஞர்கள் பொலிஸில் சேரலாம்; இராணுவத்தில் சேரலாம். எவருக்கும் ஒரே நியாயம் தான். உங்கள் பிள்ளைகள் தேயிலை கொழுந்து பறிப்பவர்களாக இருக்கக்கூடாது. கணினிக் கல்வியைக் கற்று சர்வதேச ரீதியில் தொழில் வாய்ப்புக்களை பெற வேண்டும். தோட்டத்தொழிலாளர்கள் லயத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பதிலாக அவர்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிகொடுத்து லயத்து முறையினை இல்லாது செய்வேன். அத்தோடு அவர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது ஏனைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வேன்.வேலையில்லாத இளைஞர்களுக்குத் தரிசுக் காணிகளை வழங்கி புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவேன். நான் ஒரு போதும் பொய் சொன்னது கிடையாது. சொல்வதை செய்வேன்; செய்வதை சொல்வேன். நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். இந்த நாட்டில் கிராம மக்களுக்கு தங்கத்தை கொடுத்து இரும்பையும் தகரத்தையும் உங்களுக்கு ஒருபோதும் கொடுக்க மாட்டேன். இன்று இலங்கையில் சிறுபான்மை என்று ஒரு சமூகம் இல்லை. எல்லோரும் இலங்கை திருநாட்டின் பிள்ளைகள். ஆகவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம். எந்த நேரத்தில் உங்களது சம்பளம் உயர்த்த வேண்டுமோ அந்த நேரத்தில் நான் உங்கள் சம்பளத்தை உயர்த்துவேன். நான் தொழில் அமைச்சராக இருந்த போது உங்கள் உரிமைகள் தொடர்பாக உங்கள் தலைவர்களுடன் பல தடவைகள் பேசியுள்ளேன். எனவே, என்னை நம்புங்கள் நான் உங்கள் தோழன். நான் உங்களைக் காப்பேன். எனவே, வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து, என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.

Friday, January 15, 2010

வடக்கு கிழக்கில் 150000 வீடுகளை அமைக்கத் திட்டம்!

மஹிந்த சிந்தனை திட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் 1 இல்சத்து 50000 வீடுகளை அமைக்க இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கின் கீழ் நாட்டில் வீடு இல்லாதவர்களின் வசிப்பிட வசதிக்காக 6 இலட்சம் வீடுகளை எதிர்வரும் 6 வருடங்களில் அமைக்கும் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் 150000 வீடகள் அமைக்கப்படவுள்ளன.
இவற்றுக்குப் புரம்பாக அரச ஊழியர்களுக்கான 25 வீடமைப்புத் திட்டங்கள் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களுக்கான 5000 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கான 3 வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் கொழும்பு குடிசை வாசிகளுக்கான விடமைப்புத் திட்டம் போன்றவையும் மேற்கொள்ளப்படவுள்ளன.
கிராமப்புரங்களில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் மீனவ சமூகத்தவர்களுக்கும் வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Wednesday, January 13, 2010

இனிய தைப் பொங்கள் நல்வாழ்த்துக்கள்


இணைய வாசர்களுக்கும் எல்லா
மக்களுக்கும் பிறக்கும் தைப்பொங்கள்
என்றென்றும் சாந்தியும் சமாதானத்துடனும்
வாழ இனிதே வாழ்த்தும் கிழக்குமகள்

Tuesday, January 12, 2010

மடு வீதி 24 மணி நேரமும் மக்கள் பாவனைக்கு இராணுவப் பேச்சாளர் தகவல்...

மடு வீதி இன்று முதல் 24 மணி நேரமும் மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நானாயக்கார தெரிவித்தார்.
மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க யாத்திரீகர்களுக்கு தடையின்றி மடு புனித தேவாலயத்துக்கு யாத்திரை மேற்கொள்ள இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

காலிமுக வீதி பயணிகள் போக்குவரத்துக்கு திறப்பு....

காலிமுக வீதி பயணிகள் போக்குவரத்துக்காக ஒரு வழிப் பாதையாக நேற்று முதல் திறக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு பயணிகள் பஸ் போக்குவரத்துக்காக தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இப்பாதை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடலினூடாக கொழும்பு கோட்டைக்கான பஸ் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Sunday, January 10, 2010

ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாலாலியில் அமைந்துள்ள வடபகுதிக்கான இராணுவத் தலைமயகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி அங்குள்ள பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் படைவீரர்கள் மத்தியில் உரையாற்றுவார்
ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்திலுள் பலதரப்பட்ட மக்ககளையும் சந்திக்கவும் உள்ளாதாகவும் ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.

Saturday, January 9, 2010

தமிழ்கைதிகள் விரைவில் விடுதலை நீதி அமைச்சின் செயலாளர் தகவல்.....

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப் பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவிருப்பதாக நீதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ்ப் புத்தீஜீவிகள் குழு ஒன்று அவரை நேற்று சந்தித்த போதே அவர்; இவ்வாறு தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் குழு ஒன்று ஜனாதிபதியை அண்மையில் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி போது "எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டு; கைதிகள் ஒவ்வொருவரினதும் விடயங்கள் தொடர்பாக தனித்தனியாக ஆராயப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்படவுள்ளனர்.
கொழும்பு சிறையில் 359 பேரும் மகசின் சிறையில் 120 பேரும் மட்டக்களப்பு சிறையில் 9 பேரும் அனுராதபுரம் சிறையில் 45 பேரும் போகம்பரை சிறையில் 56 பேரும் திருகோணமலை 66 பேரும் தங்காலை 2 பேரும் நீர்;கொழும்பு 13 பேரும் தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களில் பெரும்பான்மையானவர்களே விடுதலை செய்யப்படவிருப்பதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Friday, January 8, 2010

மீள் குடியேற்றத்துக்கான இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தகவல்....

மீள் குடியேற்றத்துக்கான இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்தார். தற்போது வவுனியா நலன்புரி முகாம்களில் 79965 பேர் தங்கியுள்ளனர். மேலும் யாழ்ப்பாணத்தில் 1349 பேர் தங்கியள்ளனர். இதேவேளை வைத்தியசாலைகளில் 1626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி இன்னும் மீள் குடியேற்றத்துக்கு 82940 பேர் மாத்திரமே உள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் 2 இலட்சத்து 70000 பேராக இருந்ததாகவும் தற்போது அவர்களில் 169891 பேர் மீளக் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Wednesday, January 6, 2010

சரத் பொன்சேகாவின் ஆயூத கொள்வனவு ஊழல் ஆவணங்கள் மூலம் நிரூபனம்!

அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா போலி நிறுவமொன்றை நடத்திவந்துள்ளமை ஆவணங்கள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் இந்த ஆயுதக் கொள்வனவு ஊழல் தொடர்பான ஆவணங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆயுதங்களை கொள்வனவு செய்வது தொடர்பான கேள்விப் பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் சபைக்கு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி என்ற ரீதியில் சரத் பொன்சேகாவே தலைவராக இருந்தார்.
எனினும் தனது மருமகனான தனுன திலகரத்னவின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருந்த ஹைக்கோப் இன்டர் நெஷனல் நிறுவனத்திடமிருந்தே ஆயுதம் கொள்வனவு செய்யப்படுகின்றது என்ற உண்மையை சரத் பொன்சேகா வெளியே தெரியாமல் மறைத்தார் என்பதை ஹைக்கோப் இன்டர் நெஷனல் நிறுவனத்தின் இணையத்தளம் உறுதிசெய்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஷ் போனியோ டிபென்ஸ் என்ற நிறுவனம் என காண்பித்து டெக் சாசில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா போலி நிறுவமொன்றை நடத்திவந்துள்ளமை தெரியவந்துள்ளது
ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆயுதக் கொள்வனவு ஊழல் தொடர்பான ஆவணங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது
அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஷ் போனியோ டிபென்ஸ் என்ற நிறுவனம் என காண்பித்து டெக் சாசில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா போலி நிறுவமொன்றை நடத்திவந்துள்ளமையை அமைச்சர்கள் தங்களது உரையின்போது இதனை சுட்டிக்காட்டினர்.
இந்த சட்டவிரோத ஆயுதக் கொள்வனவால் கமிஷனாகக் கிடைத்த பணம் வெளிநாட்டு இரகசிய வங்கியொன்றில் வைப்புச்செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் 140 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் அசாதாரண சுழ்நிலை காரணமாக பல வருடங்களாக மூடப்பட்டிருந்த 140 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் 1015 தமிழ்,சிங்கள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
68 பாடசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்படும் நிலையிலுள்ளன.
இவ்வருடத்திற்குள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளுக்கு மேலதிகமாக புதிய பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.