Monday, January 18, 2010

யாழ். விவசாயிகளுக்கு தண்ணீர் இறைக்கும் 83 இயந்திரங்கள் கையளிப்பு...

யாழ் குடாநாட்டில் உள்ள விவசாயிகளின் தேவைகருதி 83 நீர் இறைக்கும் இயந்திரங்களும் விவசாய உற்பத்திப் பொருட்களை பக்குவமாகக் கொண்டு செல்லக் கூடிய பிளாஸ்ரிக் உறைகளும் யாழ். திருநெல்வேலியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று வழங்கப்பட்டன.
விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்பு அதிதியாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியும்; கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரைநிகழ்துகையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்விற்கு ஜே.வி.பி. ஒருபோதும் இடமளிக்காது. இந்நிலையில் ஜே.வி.பியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள எதிரணியினரால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்க முடியாது.
எனவே எதிர்த்தரப்பினர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினாலும் அவை ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. தற்போது உள்ள அமைதியான சுழ்நிலையை மென்மேலும் வளர்த்துக் கொள்வதற்காகவும் கௌரவமானதும் நிலையானதுமான அரசியல் ரீதியிலான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கும் நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதன் மூலமே அது சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment