Monday, November 30, 2009

மீண்டும் ஒரு வரலாற்று தவறை செய்யக்கூடாது என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்......

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்க வேண்டும்.



வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்கு தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் கருணா அம்மான் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் அமைச்சர் கருணா அம்மான் கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பார்கள் என உறுதியுடன் தெரிவித்தார்.
குறிப்பாக வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துதல், மற்றும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்னெடுத்து வருகிறார்.
குடாநாட்டுடன் தென்பகுதியை இணைக்கும் ஏ-9 வீதி அபிவிருத்தி செய்யப்படுகிறது. யாழ். குடாநாட்டுக்கான ரயில் பாதைகளை அமைக்கும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீன்பிடி, சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடபகுதி மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தருணத்தில் நாம் உங்களுடன்தான் இருக்கிறோம். உங்களுக்கே எமது ஆதரவு என்பதை உணர்த்த வேண்டும். ஒரு வரலாற்றுத் தவறை மீண்டும் தமிழ் மக்கள் செய்துவிடக்கூடாது என அந்த மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டவர். அவர் நல்லதொரு அரசியல் பின்னணியைக் கொண்டவர். சரத் பொன்சேக்கா போன்றோரின் பின்னணி முற்றிலுமாக இராணுவப் பின்னணியைக் கொண்டது. இதனை தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

Sunday, November 29, 2009

சிந்தியுங்கள் கிழக்கு மக்களே...........

கிழக்கு மக்களே நீங்கள் அன்று போரினால் இடம் பெயர்ந்து அகதியாக
நின்ற போது உங்களை பார்க்க வராதவர்கள் குரல் கொடுக்கதவர்கள் இன்று
எந்த முகத்துடன் உங்களை நாடி வருகின்றார்கள் இவர்களுக்கு வெட்கம்
இல்லையா இன்று கிழக்கு மக்கள் நிம்மதியுடனும் வளமுடனும் வாழ்ந்து
வருகின்றார்கள் இதனை சின்னா பின்னமாக்கு வதற்காகவா இவர்கள்
வருகின்றார்கள் கிழக்கு வாழ் மக்களே இவர்களை நம்பி காலா காலம்
முட்டாளாக வாழ்ந்தது போதும் இனியும் முட்டாள்களாக வாழாமல்
சிந்தித்து முடிவு எடுங்கள்......................

இவர்களின் விஜயம் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது..



தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்..
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தனர்..
இவர்களுடன் கிழக்கு மாகாணத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த அக் கட்சியின் பொதுச் செயலாளரான பிரசன்னா இந்திரகுமாரும் தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ளார்..
தமது கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கட்சி உறுப்பினர்களுடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனர்..
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களையும் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரொருவரை நிறுத்துவது தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறியதாகவும் தெரியவருகின்றது. .
தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர் மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிய பின்பு அன்றிரவே கொழும்பு திரும்பினர்.

Friday, November 27, 2009

புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லை என்பது உறுதியாகிவிட்டது

இன்று புலிகளின் மாவீரர் நாள் ஆனால் மாவீரர் தின உரை ஆற்றுவதற்கு
புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லை என்பது உறுதியாகி விட்டது
இதற்கு புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராம் ஆற்றிய ஒலி வடிவமான
உரையே காரணம்.(சென்ற வாரம் ராமையும் அவருடன் சேர்ந்தவர்களையும் துரோகிகள் என்றுகூறியதையும் மறந்துவிடவேண்டாம்)

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26இல் ஆணையாளர் அறிவிப்பு ........


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆந் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

Saturday, November 21, 2009

சிந்தியுங்கள் மக்களே.............

மீண்டும் கிழக்குத் தளபதிகளையும்,போராளிகளையும்
துரோகிகளாக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்
ஆனால் தயா மாஸ்டர் ஜோஜ் மாஸ்டர் இன்னும் எத்தனை
தளபதிகள்,போராளிகள் பற்றி இவர்கள் கூறாதது ஏன்..................

Wednesday, November 18, 2009

அகிம்சையின் வழிகாட்டி ஆசானாக எங்கள் தோழர்....


அன்பினால் அரவணைத்த எங்கள் தோழர்
அமைதி வடிவத்தை தந்த எங்கள் தோழர்
அத்தியாயமாக அரசியல் தந்த எங்கள் தோழர்
அப்பழுக்கில்லாத தோழன் எங்கள் தோழர்

சுயநலத்ததை சுட்டெரித்த எங்கள் தோழர்
சுகங்களை துறந்த எங்கள் தோழர்
சுகமாக மக்களை அணைத்த எங்கள் தோழர்
சுமைகளை சுமந்த எங்கள் தோழர்

கல்மனது இல்லதா எங்கள் தோழர்
கவரிமான் குணமுடைய எங்கள் தோழர்
கருந்தாடி அமைந்த எங்கள் தோழர்
காவியங்கள் பல படைத்த எங்கள் தோழர்
கர்மவீர்களின் தலைவன் எங்கள் தோழர்

நல் ஆசான் எங்கள் தோழர்
நல் வார்த்தைகளை விதைத்த எங்கள் தோழர்
நல்வழிகாட்டிக் கல்லாக எங்கள் தோழர்
நயவஞ்சகமறியா எங்கள் தோழர்
நல்மதிப்பு பெற்ற எங்கள் தோழர்

இறமை என்னவென்று அறிந்த எங்கள் தோழர்
இமைகளை என்றுமே மூடாத எங்கள் தோழர்
இறுமாப்பு இல்லாத எங்கள் தோழர்
இன்பங்களை துறந்த எங்கள் தோழர்

தீமைகள் செய்தவரை மன்னித்த எங்கள் தோழர்
திருந்திவா என்று கூறிய எங்கள் தோழர்
தினம் தினமும் காத்து நின்ற எங்கள் தோழர்
திறன் படைத்த கரங்களை முத்தமிட்ட எங்கள் தோழர்

எதிரிகள் உனை எதிர்க்காத எங்கள் தோழர்
எதிர்நீச்சல் போடுவதில் வீரன் எங்கள் தோழர்
என் எனது அறியா எங்கள் தோழன்
எதார்த்தம் நியைவே நிறைந்த எங்கள் தோழர்

இத்தனைக்கும் ஓரே வடிவம் எங்கள் தோழன்
இயல்பாக கூறமுனைந்தால் அவரே
இறுமாப்புடன் உலகிற்கு பறைசாற்றுவோம்
இன்றும் என்றும் இவர் தான்
இதய தெய்வம் எங்கள் தோழர் பத்மநாபா

பத்மநாபாவின் பிறந்தநாள் நினைவிற்காக
பாடுமீன்கள்---கிழக்குமகள் இணையதளங்கள்

Monday, November 16, 2009

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் அமைச்சர் காயமடைந்துள்ளார்.

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்திற்குள்ளானதில் அமைச்சர் காயமடைந்துள்ளார். மனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்தின்போது வாகனம் பலத்த சேதமடைந்துள்ளபோதும் அமைச்சர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வீதியின் குறுக்கே பாய்ந்த சிறுவனை தவிர்ப்பதற்கு சாரதி முயற்சி மேற்கொண்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்துள்ள வாகன சாரதி மற்றும் மெய்பாதுகாவலர்கள் அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மன்னார்- யாழ் பஸ் சேவை 20 வருடங்களின் பின் இன்று ஆரம்பம்

இன்று முதல் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ஏ9 விதியூடான போக்குவரத்து சேவை ஆரம்பிகப்பட்டிருப்பதாக இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலைக்கான அதிகாரி தெரிவித்தார்.
மன்னாரில் இருந்து நாளாந்தம் காலை 6 மணிக்கு மன்னாரி அரச பஸ் தரிப்பிடத்தில் இருந்து பஸ்ஸொன்று இச்சேவையில் ஈடுபடும்.மன்னாரில் இருந்து புறப்படும் பஸ் வவுனியா சென்று சோதனை நடவடிக்கைகளின் பின் ஏ 9 வீதியூடாக நேரடியாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.

பயணிக்கும் ஒவ்வொருவரும் தேசிய அடையாள அட்டையின் 3 பிரதிகளை எடுத்துவருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 20 வருடங்களின் பின் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ஏ 9 வீதியூடான நேரடி போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, November 12, 2009

நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அதிசய நாக சிலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிவேம்பு எனும் கிராமத்தில் நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் (10.11.2009) மாலை 4.00 மணியளவில் ஓர் அதிசயம் இடம்பெற்றுள்ளது. சிறுமியாக மனித உருவில் தோன்றிய நாகபூசணி அம்பாள் ஏனைய சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடியதாகவும் பின்னர் பெரியோர் அவதானித்ததும் ஆலமரத்திற்கு கீழே சென்று, நாகத்தின் உருவில் சிலையாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. பி.ப. 5.00 மணிவரையும் அச்சிலைக்கு இதயத்துடிப்பு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அதன் வால்பகுதி மரத்தில் உள்நுழைந்திருப்பதுடன் வெளியே தலைப்பகுதி மாத்திரம் காணப்படுகின்றது. நேற்றிலிருந்து பலர் புதிதாகத் தோன்றிய இந்தச் சிலையைப் பார்வையிட்டு வருகின்றார்கள்.

Tuesday, November 10, 2009

ஜனநாயக தமிழ் தேசிய முன்ணிக்கும்-தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் இன்று கொழும்பில் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனநாயக தமிழ் தேசிய முன்ணிக்குமிடையில் இன்று முதற் தடவையாக கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , என். ஸ்ரீகாந்தா, பா. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னனி சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல. எப். பத்மநாபா அணியின் தலைவர் சு.கு.ஸ்ரீதரன் உட்பட அம்முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை,மீள் குடியேற்றம் ,வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்ற முயற்சிகள் உட்பட சில பொதுவான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு இவ்விடயங்களில் ஒருமித்து செயல்பட வேண்டியதன் அவசியததை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையானது திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் ஒருமித்த கருத்ததாக கொண்டிருந்தன.

இச் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவோ ,பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவோ எதுவும் பேசப்படவில்லை என தெரிய வருகின்றது.

மேலும் எதிர் காலத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு மித்து செயல்படுவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்ட போதிலும் எதிர்காலத்தில் இது தொடர்பாக தொடர்ந்து பேசுவது என்றும் இரு தரப்பினருக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தம்புள்ள வைத்தியசாலையில் 14 மாணவர்கள் அனுமதி உணவு விசமாகியதால்

இன்று நண்பகல் தம்புள்ள இனாமிள பகுதியில் அமைந்துள்ள பயிற்சி ஹொட்டல் ஒன்றில் உணவு அருந்திய 14 மாணவர்கள் வாந்தி ஏற்பட்டு,மயக்கமடைந்தனர். இதன் பின் 14 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பின் மாணவர்களின் உடல் நிலை தேறிவருவதாகவும் உணவு விசமாகியதே மாணவர்களின் மயக்கநிலைக்கு காரணம் என தம்புள்ள வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பில் 5 மீனவக் குடும்பங்களுக்கு மீன் பிடி உபகரணங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட ஐந்து மீனவக் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் மீன் பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் குளிரூட்டிப் பெட்டிகளுடன் கூடிய சைக்கிள்கள்,தராசுகள்,மீன் பிடி வலைகள் போன்ற உபகரணங்களே வழங்கப்பட்டுள்ளன.இக்குடும்பத் தலைவர்கள் மீன் வியாபாரிகள் என்றும் 'சேவா லங்கா' நிறுவனத்தின உதவியுடன் இவை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தின் 18 ஆவது சிங்க படைப்பிரிவு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.குறித்த மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மீனவரும்தலா 75 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவிகளை பெற்றுள்ளனர்.

Monday, November 9, 2009

இடம்பெயர்ந்த சிறுவர்களுக்குப் புத்தகங்கள் அன்பளிப்பு

போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயரந்து வவுனியா சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர்களின் துணைவியர் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். முன்னாள் பொலிஸ் அதிபார்களின் துணைவியராகிய திருமதி பத்மினி இராஜகுரு, திருமதி சாந்தினி பெர்னாண்டோ, ஆகியோருடன் வவுனியா சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியூகேயின் துணைவியாராகியா திருமதி துஷாந்தி லியூகேயும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார். வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள சிறிலிய செவன சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த அன்பளிப்பு வழங்கும் வைபவத்தில் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கும், சிறிலிய செவன இல்லத்தைச் சே்ந்த சிறுவர்களுக்குமே இவ்வாறு அன்பளிப்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. கொழும்பு கிழக்கு லயன்ஸ் கழகத்தினரால் இந்த அன்பளிப்புக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, November 8, 2009

கருணா அம்மானின் பிறந்தநாளையொட்டி மட்டக்களப்பு சிறுவர் இல்லங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம் !

நேற்று மட்டக்களப்பிலுள்ள சிறுவர் இல்லங்களில் மிக விமர்சையாக தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் 43வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அமைச்சர் கருணா அம்மான் அவர்களின் மக்கள் தொடர்பாளர் ரஞ்சன் மற்றும் ஊடக செயலாளர் யூலியன் ஆகியோரினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிறந்தநாள் விழா வைபவங்கள் மட்டக்களப்பிலுள்ள கண்பார்வையற்ற சிறுவர்கள் தங்கியுள்ள கல்லடி தரிசனத்திலும் வசதி குறைந்த மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் E.D.S விடுதியிலும் பெற்றோறை இழந்த ஜீவயோதி இல்லத்திலும் சிறுவர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. இவ் இல்லங்களில் அமைச்சர் கருணா அம்மானின் ஏற்பாட்டில் மதிய போசன விருந்து வழங்கப்பட்டு இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டது. அதே போன்று மட்டு நகரிலுள்ள ஆட்டோ சாரதிகள் பொலீஸ் பாதுகாப்பு படையினர் மற்றும் பொது மக்கள் என எல்லோருக்கும் இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டு கருணா அம்மானின் பிறந்த நாள் மட்டு நகரில் கொண்டாடப்பட்டது.


Friday, November 6, 2009

உத்தம புத்திரனுக்கு இன்று பிறந்தநாள் வையகம் உங்கள் புகழ் வாழீ


நம் நாட்டில் தோன்றிய
பொன்மனச் செல்வனே
ஆயிரத்தில் ஒருவனாக
அடிமை விலங்கை உடைத்தவன்
அமைதி மைதானம் வேண்டி
மெல்ல திறந்தது உன் மனக்கதவு
அலைகள் ஓயாமல் அடித்ததினால்
பயணங்கள் முடியாது என்று
கடவுளுக்கோர் கடிதம் அனுப்பினர் மக்கள்
அவன்தான் மனிதனாக
ஆண்டவன் கட்டளையுடன்
அக்னிநட்சத்திரமாய்
தசாவதாரம் போல் ஓர் அவதாரமாய்
கலியுக கண்ணனாக--இன்று
நினைத்ததை முடிப்பவனாக--என்றும்
இலங்கை நாட்டு தங்கமாய்
தனிக்காட்டு ராஐவிடமிருந்து தப்பி வந்த
தங்கமகனாய் நீங்கள் மக்களை
உல்லாச பறவைகளாய் பறக்கவைத்தீர்கள்
உயர்ந்த உள்ளம் படைத்த எங்கள்
உத்தமபுத்திரனாய் வலம்வரும் நாயகனே
நல்லவனுக்கு நல்லவன் என்று
நெஞ்சிருக்கும் வரை நாம் உரைப்போம்
நெஞ்சிலோர் ஆலயம் கட்டி
நிறம்மாறாத மலர்கள் போல்
நினல்போல் உங்கள் பின்னே தொடர்வோம்
கவரிமான் இனத்திற்கு உரியவனே
பாலும் பழமும் நம் தருவோம்
பகலிலும் நிலவாய் எறித்து நிற்பாய்
மக்கள் உன்பக்கம் என்றும் ஐயா
சங்கு முழங்கி உனை நாம் என்றும் வாழ்த்துவோம்
பல்லாண்டு நீங்கள் வாழியவே... வாழீயவே

கிழக்குமகள் இணையதளம்