Thursday, September 30, 2010

கடவுச் சீட்டில் மாற்றம் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

கடவுச் சீட்டில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சுலானந்த பெரேரா தெரிவித்தார்.
அதன்படி ஆ மற்றும் என்ற தொடரிலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன் படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டை பெற வேண்டும்.
அதற்கு விண்ணப்பிக்கும் வகையில் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப் படுவதுடன் அதற்கென குடிவரவூ குடியகல்வு திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது.
அக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் நடை முறைக்கு வருகிறது என குடிவரவு குடியகல்வு
கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
ஆமற்றும் தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டை உடையவர்கள் இரண்டு புகைப்படங்கள் கடவுச் சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தையு டைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது.
சமாதான நீதவானின் சான்று படுத்தவோ அடையாள அட்டை பிறப்பு அத்தாட்சி பத்திரமோ இணைத்தல் அவசியமில்லை.
முதற் தடவையாக கடவுச் சீட்டொன்றை பெறவிரும்பும் ஒருவர் முன்பு போன்று கடவுச் சீட்டுக்கான முன்னைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின் சான்றுபடுத்தலும் அவசியமானது.

Tuesday, September 28, 2010

புலிபாய்ந்தகல்லில் சுகாதார பணிமனைக்கு அடிக்கல்


யுத்தம்காரணமாக இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியத்தின் யுனிசெப் அனுசரணையுடன் 22 மில்லியன் ரூபா செலவில் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை அமைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபை வழிகாட்டலில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நேற்று நாட்டி வைத்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தயசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.அச்சுதன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், மட்டக்களப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Tuesday, September 14, 2010

உதயம் விழா 2010..



இடம்
Gemeinschaftszentrum Affoltern
Bodenacker - 25
8046 Zurich