Wednesday, August 25, 2010

மக்களை மீள்குடியமர்த்தி வசதிகளை ஏற்படுத்தி தருவேன் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் .


மழைக்காலம் வருவதற்கு முன்னர் அனைத்து மக்களையும் மீள்குடியமர்த்தி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவேன் என மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

திருமலை மாவட்டத்தின் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கடற்கரைச் சேனை, கூனித்தீவு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான கலந்துரையாடலில், மீள்குடியேற்ற அமைச்சர் வி.முரளிதரன் இன்று காலை ஈடுப்பட்டார். இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை காலை கிளிவெட்டி முகாமில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து உரையாடிய அமைச்சர், மக்களிடமே அவர்களுக்கான இடங்களைத் தெரிவு செய்து தருமாறு கேட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார்.

2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் 2000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பட்டித்திடல், மணல்சேனை, கட்டைபறிச்சான், கிளிவெட்டி ஆகிய இடங்கிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விரைவில் மீள்குடியமர்த்துவதற்கான வேலைகளில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன் தீவிரமாக ஈடுப்பட்டுவருகிறார்.

மீள்குடியமர்த்துவது தொடர்பாக கலந்துரையாடல் நடத்திய அமைச்சர், முகாமைச் சுற்றி பார்வையிட்டதுடன். மக்களின் குறைகளையும் கேட்டறிந்துக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.எச் ஹலிபா, மீள்குயேற்ற அமைச்சின் இனைப்புச் செயலாளர் ரவிந்திரன், கிளிவெட்டி முகாம் பொறுப்பாளரும், கிராம சேவையாளருமான செல்வ ரெட்ணம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Monday, August 9, 2010

மட்டக்களப்பு வீதி விபத்தில் காயமடைந்த தாயும் மகளும் மரணம்.

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் கிரான்குளத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த இருவர் நேற்றிரவு உயிரிழந்தனர்.
றம்புக்கனையைச் சேர்ந்த அப்துல் ஹசன் நோனா தல்ஹா (44) , அவரின் மகளான பாத்திமா ரிமா (7) ஆகியோரே மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தனர். இதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஐவரும் இவ்விபத்தில் காயமடைந்தனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும் மகளும் நேற்றிரவு உயிரிழந்தனர்.

இதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், றம்புக்கணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

றம்புக்கணையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் ஒரு முச்சக்கரவண்டியில் மட்டக்களப்பை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது கற்கள் ஏற்றி வந்த லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபது ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் அப்துல் ஹசன் சுப்ஹான், நோனா தல்ஹா (வயது 44) என்ற தாயும் அவரது மகளான பாத்திமா ரிமா (வயது 7) என்ற மகளுமே பலியானவர்களாவர் என காத்தியானதாக காத்தான்குடிப் பொலிஸ் நிலைய வாகன போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஹேரத் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், லொறியும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதால் காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Sunday, August 8, 2010

நிவாரண பொருட்கள் அடங்கிய விமானம் பாகிஸ்தான் பயணம் .

பாகிஸ்தானில் ஏற்ப்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிய விமானப்படை விமானம் ஒன்று இன்று காலை பாகிஸ்தான் செல்லவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் அடிப்படையில் ஒரு தொகை பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளத்தினால 1500 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிட்த்தக்கதாகும்.