Thursday, December 31, 2009

கிழக்குமகள் இணையத்தின் இனிய புதுவருட வாழ்த்துக்கள்

பிறக்கும் புதுவருடம் உலக
மக்கள் எல்லோரும்
சாந்தியும் சமாதானத்துடனும்
சமத்துவமாக வாழ இதய
பூர்வமான இனிய வாழ்த்துக்கள்
கிழக்குமகள்

அன்னை மரியின் படத்தில் அதிசயக் கரங்கள்: வவுனியாவிலும் சம்பவம்

வவுனியா கூமாங்குளத்தில் வீடொன்றில் மாதா உருவப்படத்தில் திடீரென இரண்டு கைகள் தோன்றியுள்ளன. மாதாவின் உருவத்தை ஏந்தியிருப்பது போன்ற வகையில் இந்தக் கைகள் இரண்டும் காணப்படுகின்றன. இரு தினங்களுக்கு முன்னர் இந்த அதிசயம் ஏற்பட்டுள்ளதாக அந்த வீட்டுக்காரராகிய அகிலன் கவிதா என்ற குடும்பப் பெண் தெரிவித்தார். கூமாங்குளத்தில் உள்ள சாயி சிறுவர் இல்லத்திற்கருகில் இந்தப் பெண் வசித்து வருகின்றார். இரண்டு குழந்தைகளின் தாயாராகிய அவர் நேர்த்திக் கடன் ஒன்றை நிறைவேற்றுவதற்காகக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மடுக்கோவிலுக்குச் சென்றபோது, மாதாவின் இரண்டு உருவப்படங்களை வாங்கி வந்ததாகவும், அவற்றில் ஒன்றிலேயே இவ்வாறு இரண்டு கைகள் தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாதா படத்தில் தோன்றியுள்ள இந்த அதிசயக் கைகளை தரிசிப்பதற்காக தினசரி பெருமளவிலான மக்கள் அவரது வீட்டிற்குச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. அதேவேளை இது போன்று மடு அன்னையின் திருவுருவப் படத்திலிருந்து அதிசயக் கரங்கள் இம்மாதம் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டிலும், கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு வீட்டிலும் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 29, 2009

வெள்ளவத்தையிலும் அன்னை மரியின் அதிசயம்

கொழும்பு வெள்ளவத்தையிலும் அன்னை மரியின் கைகள் தெரியும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. அன்னை மரியின் உருவப் படத்திலிருந்து கைகள் இரண்டு வெளிப்பட்டுள்ளதை இந்தப் படத்தில் காணக்கூடியதாக இருக்கும். வெள்ளவத்தை, பெர்னாண்டோ வீதியில் உள்ள கணேந்திரன் என்பவரின் வீட்டில் நிகழ்ந்த அதிசயத்தினை நாம் கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம். கிறிஸ்மஸ் தினமான கடந்த 25ஆம் திகதி மாலை 3 மணியளவில் குடும்பத்தினர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த சமயம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த அதிசயம் நிகழ்ந்ததாக வீட்டார் கூறுகின்றனர். 2006 ஆம் ஆண்டளவில் புனித மடு தேவாலயத்தில் இந்தப் பிரார்த்தனை புத்தகத்தை வாங்கியுள்ளனர். தொடர்ச்சியாக செய்துவந்த புனிதமான பிரார்த்தனையே இதற்குக் காரணம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். ஆணைக்கோட்டை வராளி கோவிலடியிலுள்ள வீடு ஒன்றில் இதேபோன்ற சம்பவம் அண்மையில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது

அபிவிருத்தி ஏற்பட்டு வரும்போது மாற்றம் தேவையென கூறுவது வேடிக்கை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமையில் நாட்டில் அபிவிருத்தி துரிதகெதியில் முன்னெடுத்துச் செல்லப்படும் போது இதைவிட சிறந்த மாற்றம் தேவையென ரவூப் ஹக்கீமும் அவரது ஜனாதிபதி வேட்பாளரும் கூறுவது வேடிக்கையாக உள்ளது என பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலையொட்டி புத்தளம் நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் பாயிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
புத்தளம் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பாயிஸ் மேலும் கூறியதாவது, எந்த அடிப்படையில் அந்த மாற்றம் அமைய வேண்டும் என சகோதரர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கவில்லை. யுத்தம் ஒழிக்கப்பட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழும் இத்தருணத்தை மாற்றம் செய்து விட்டு மீண்டும் நாட்டில் யுத்தப் பீதியையும் அமைதியின்மையும் ஏற்பட வேண்டும் என்ற மாற்றத்தை ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?
இந்த நாட்டில் நிலவுகின்ற ஜனநாயகத்தையும், சுபீட்சத்தையும் குழிதோன்றிப் புதைத்துவிட்டு இராணுவ மயமான ஆட்சியை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற மாற்றத்தை ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா? என்று பாயிஸ் கேள்வி எழுப்பினார்.
இந்த நாட்டில் ஜனநாயகவாதிகளும் அரசியலில் பாண்டித்தியமும் பெற்றவர்களை ஒழித்துவிட்டு அரசியல் என்ன என்றே தெரியாத இராணுவ ஆட்சியில் விருப்பம் கொண்ட சரத் பொன்சேகாவை ஆட்சியில் அமர்த்தும் மாற்றம் வேண்டும் என ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?
கடந்த 18 வருடங்களாக புத்தளம் தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாததை மாற்றி புத்தளத்தின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து எமது மாணவ்கள் பட்டதாரியாக மாறிக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் மாற்றம் ஏற்படுத்தி மீண்டும் எமது மாணவர்களுக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையை அவர்கள் ஏற்படுத்தப் போகின்றார்களா?
நாட்டிலுள்ள வளங்களை மேற்கு நாட்டினர் சூரையாடவும், மன்னர் பகுதியில் கண்டெடுக்கப்படும் பெற்றோல் வளங்களை அப்படியே அள்ளி தமது நாடுகளுக்கு கொண்டு செல்லும் மேற்குல நாடுகளின் சதித் திட்டத்தை விரும்பும் சரத் பொன்சேகாவுக்கு இந்த மாற்றம் மூலம் வழிவகுத்து கொடுக்க ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?
நாட்டுக்கு என்ன மாற்றம் வேண்டும் என்பதை ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யூகித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றார். இது இவ்வாறு இருக்க ரவூப் ஹக்கீமும் அவரது குழுவினரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை எந்த விதமான மாற்றமும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று பாயிஸ் மேலும் குறிப்பிட்டார்.

Monday, December 28, 2009

கிழக்கு மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகே கிடைக்கும் என்று அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்தார்.

நாட்டுக்கு பெரும் சேவை செய்துள்ள ஆளுமை மிக்கத் தலைவர் ஒருவர் இருக்கும்பொது வேறு ஒரு தலைவர் நாட்டுக்குத் தேவையில்லை என தேசிய நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் வினாயமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இன்று தெரிவித்தார்.
கொழும்பு மாகாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அமைச்சர் கருணா அம்மான் மேலும் கூறியதாவது
கடந்த நான்கு வருட காலத்தில் கிழக்கில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக கிழக்கில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் பெரும் நன்மையடைந்துள்ளனர். எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்க் கட்சியினர் போலியான ஒரு அரசியலையே முன்வைக்கின்றனர். அவர்களிடம் மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்கள் இல்லை. இதனை நாட்டு மக்கள் நன்கறிவர். கிழக்கு மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகே கிடைக்கும் என்றும் அமைச்சர் கருணா அம்மான் கூறினார்

Sunday, December 27, 2009

மாத்தயாவின் பெயரை பிரபாகரன் உச்சரித்ததுமே தனக்கு ஆபத்து என்பதை கருணாஅம்மான் உணர்ந்து கொண்டார்

அலி சாஹிர் மெளலானா தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஐ. தே. க. எம்.பியாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தவர் தான் அலி சாஹிர் மெளலானா. இந்தப் பெயரை கேட்டதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது இன்று அமைச்சராகவிருக்கும் கருணா அம்மான் தான். நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்னர் நாடு திரும்பியுள்ள அலி சாஹிர் மெளலானாவை கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு தினகரனுக்குக் கிடைத்தது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்பதற்கான நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு அவரது வருகைக்காக காத்திருந்தோம். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு தன் பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வரும் அவரை சந்தித்த போது, அவர் கொழும்புக்கு வந்து விட்டார் என்ற செய்தி கேட்டு, அவரைச் சந்திக்க நண்பர்கள், ஆதரவாளர்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்களை சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுமாறு கூறி தினகரன் வாசகர்களுக்காக கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் அலி சாஹிர்.
உங்கள் அரசியல் பிரவேசம் எவ்வாறு அமைந்தது?
நான் 1987களிலிருந்து ஆரம்பிக்கிறேன். எனது உயர் கல்வியை முடித்துக் கொண்டு (கம்பியூட்டர் சயன்ஸ்) அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்தேன். இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. 13ஆவது திருத்தச் சட்டமும் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஜனாதிபதித் தேர்தலும் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய ஜனாதிபதியாக ஆர். பிரேமதாஸாவும் எதிர்க்கட்சியில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் வேட்பாளராக போட்டியிட்டனர்.
திருமதி பண்டாரநாயக்க என்னை மட்டு. மாவட்ட ஸ்ரீல. சு. க. அமைப்பாளராக நியமித்தார். அத்துடன் திருமதி பண்டாரநாயக்காவின் மாவட்ட முகவராகவும் நியமிக்கப்பட்டேன்.
இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையில், எந்த வகையிலும் முஸ்லிம் மக்களின் ஆலோசனை பெறப்படவில்லை என்பதை திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சுட்டிக்காட்டினார். இச்சந்தர்ப்பத்தில் ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானார். இதன்பின்னர் புலிகளுடன் சமாதான பேச்சுக்கள் ஆரம்பமாகின. இந்தியப் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். புலிகள் முஸ்லிம்கள் மீது மோசமான தாக்குதலையும் நடத்தினர். காத்தான்குடி படுகொலை, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. நான் அகதிகள் நிவாரண அமைப்பு (ஞிஞிலி) என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஊடக சுயாதீனமாக செயற்பட்டேன்.
1994 ஆம் ஆண்டு கிழக்கில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு ஏறாவூர் பிரதேச சபைத் தலைவராக தெரிவானேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ. தே. க. போன்ற கட்சிகளின் பலத்த சவால்களுக்கு மத்தியில் இந்த வெற்றியை ஈட்ட முடிந்தது.
சிரேஷ்ட அமைச்சர்களான எம். எச். மொஹமட், அன்று வெளிவிவகார அமைச்சராக இருந்த ஏ. சீ. எஸ். ஹமீத் போன்றோரின் அழைப்பையேற்று ஐ. தே. கவில் இணைந்து கொண்டேன். முன்னாள் ஜனாதிபதி டி. பி விஜேதுங்க பாராளுமன்றத்தைக் கலைத்ததன் காரணமாக பொதுத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானேன். 1977களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரேனும் எம்.பி.யாக அதுவரை தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. 1987களில் தேவநாயகம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தேசிய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் பாதகச் செயல் செய்வதாகவே முத்திரை குத்தப்பட்டார்கள்.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் 45,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். நான் 115,000 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினேன்.
கருணா அம்மான் விவகாரம் வரையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்தேன்.
கருணா அம்மானுடனான உறவை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?
அமைச்சர் முரளிதரன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர். நான் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் கல்வி கற்றேன். முரளிதரன் என்னைவிட வயதில் இளையவர். நான் விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்வோம். என் மீது அவருக்கு எப்பவும் மரியாதையுண்டு.
1977இல் க. பொ. த. உயர்தரத்தை முடித்துக் கொண்டு இந்தியா சென்றேன். அங்கு எனது முதலாவது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கலிபோர்னியா சென்றேன். 1987களில் மீண்டும் நாடு திரும்பினேன். நான் வரும் போது முற்றிலுமாக மாறிப் போயிருந்தது.
1977 - 83 போன்ற காலகட்டங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக புலிகள் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு அதிகமாயிற்று. இளைஞர், யுவதிகள் கூட்டம் கூட்டமாக சென்று இணைந்து கொண்டனர். க. பொ. த. உயர்தரத்தில் பயின்றுக் கொண்டிருந்த கருணா அம்மானும் இதில் ஒருவராக இணைந்துக் கொண்டார். இனி எமக்கு இலங்கையில் எதிர்காலம் இல்லை என்ற எண்ணத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்டார். இந்தியா சென்று பயிற்சிகளையும் பெற்றார்.
1990களில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையேயான சமாதான பேச்சு ஆரம்பமானது. அரச தரப்பில் பிரதான சமாதான தூதுவராக அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் காலக் கட்டத்தில் கேர்ணல் கருணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அப்போது எம்.பியாக இருக்கவில்லை. கருணா அம்மானுடன் கரிகாலனையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத், பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவராக இருந்த அர்ஜுன அலுவிகாரே ஆகியோருடன் புலிகளைச் சந்தித்தோம். கிழக்கு பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சு நடத்தினோம். கருணா உடனடியாக அதற்கு செவிமடுத்தார். புலித் தலைமையின் கவனத்திற்கும் உடனடியாகக் கொண்டு வந்தார். மட்டக்களப்பு விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் தப்பபிப்பிராயங்கள் களையப்படுவது குறித்தும் பேசினோம். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக புலிகளால் நியமிக்கப்படுகின்ற முஸ்லிம் ஏஜென்டுகள் தரமானவர்கள் அல்ல. தகுதி வாய்ந்தவர்கள் அல்ல மக்களை மதிக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை ஏ. சி. எஸ். ஹமீத் சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். உடனடியாக குறிப்பிட்ட நபர்களை நீக்கவும் தகுதியானவர்களையும் கனம் பண்ணத் தெரிந்தவர்களையும் நியமித்தார்.
இவரது செயல் என்னை வெகுவாக கவர்ந்தது. எப்போதும் அன்பாக அவர்களில் ஒருவனாக என்னை ‘அண்ணன்’ என அன்புடன் அழைப்பார்.
சமாதானப் பேச்சு பலனளிக்கவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார், பிரேமதாசவும் கொல்லப்பட்டார். 1994இல் சந்திரிகா குமாரதுங்க கொண்டு வந்த சமாதானப் பேச்சும் தோல்வியடைந்தது.
2002 ஐ. தே. க. கட்சி வந்ததும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். கருணா மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு அரசியல் பிரிவு பொறுப்பாளராக வந்தார். நான் மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு தொடர்பாக பிரதமரின் ஆலோசகராக செயற்பட்டேன். இந்தக் காலக்கட்டத்தில் கருணாவை மீண்டும் சந்திக்க முடிந்தது.
அண்ணன் சில அரசியல்வாதிகள் ஊழல் நிறைந்தவர்களாகத்தான் காணப்படுகிறார்கள். என்றாலும் நான் உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளேன். நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என கருணா கூறினார். சிறுசிறு சம்பவங்கள் தொடர்பாக கருணாவின் கவனத்திற்கு கொண்டு வந்த போதெல்லாம் கருணா உடனுக்குடன் தீர்வு வழங்கினார். இதனூடாக எமது நட்பு மேலும் வளர்ந்தது.
களமுனைகளில் கருணா என்பவர் மிகவும் முரட்டுத் தனமாவர் முர்க்கத்தனமானவர் என்பதை நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அவர் எனக்கு மரியாதை செய்வதை நேரடியாக பார்த்திருக்கிறேன். நான் அவரை அம்மான் என்றே அழைப்பேன். இவரிடம் விஷயமிருக்கிறது. மக்களை மதிக்கத் தெரிந்தவர் என்பதை உணர்ந்தேன்.
இந்த வேளையில்தான் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டு பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகின. ஒஸ்லோ, தாய்லாந்து, ஜேர்மன் எனப் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றன. 5ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஒஸ்லோவில் நடைபெற்றது. அரசாங்கம் சமஷ்டி முறையை முன்வைத்தது.
சமஷ்டி முறை தொடர்பாக ஆராய்வதற்கு புலிகள் இயக்கம் ஆயத்தமாகவுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்ச்செல்வன், அன்டன் பாலசிங்கம், கருணா அம்மான் ஆகியோர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்ததுடன் அதற்கு அடையாளமாக கையெழுத்தையும் இட்டனர்.
இவர்கள் நாடு திரும்புவதற்கு முன்னதாக பிரபாகரனின் காதில் இந்த விடயம் போடப்பட்டு விட்டது. நியூயோர்க்கிலிருந்து வந்திருந்த உருத்திர குமாரன் பிரபாகரனிடம் இதனை கூறிவிட்டார். அரசாங்கம் முன்வைக்கும் ஆலோசனைக்கு கருணா இணக்கம் தெரிவிக்கிறார். தனது அதிகாரத்தையும் மீறி செயற்படுகிறார் எனப் பிரபாகரனிடம் தெரிவித்து விட்டார். அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரபாகரன் காரசாரமாக பேசியதால் அன்டன் பாலசிங்கம் இலங்கை வராமலேயே லண்டன் சென்று விட்டார். அதன் பின்னர் அவர் பிரபாகரனுடன் பேசவே இல்லை.
கருணா கிளிநொச்சி திரும்பியதும் பிரபாகரன் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதுடன், ‘மாத்தயா’ போன்று நீயும் எனக்கு துரோகம் செய்ய எண்ணுகிறாயா? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
‘மாத்தயா’ என்ற பெயர் கேட்ட உடனேயே கருணா அம்மான் தன்னை சுதாகரித்துக் கொண்டார். இது ஒருவகையாக சமிக்ஞை என்பதும் தெளிவானது.
பிரபாகரனின் தலைமையில் 20 தலைவர்கள் இருந்தனர். ஒவ்வொரு துறைக்கும் ஒருவர் என்றபடி இருந்தனர். கல்வி, பொலிஸ், நீதி, விளையாட்டு, வருவாய் என்ற 20 பேர் இருந்தனர். இது தான் பிரபாகரனின் அமைச்சரவை இந்த 20 பேர்களுள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒருவரேனும் இருக்கவில்லை. சிலர் எந்த ஆயுத போராட்டத்திலும் ஈடுபடாதவர்களாக இருந்தனர். அவர்களும் பிரபாகரனுடன் சேர்ந்து கொண்டு கருணாவுக்கு நிந்தனை செய்தார்கள். கருணா மிகவும் புண்பட்டுப் போனார். எனினும் கருணா லாவகமாக பிரபாகரனிடம் சமாளித்துவிட்டு வெளியேறினார். உடனடியாக சர்வதேச கண்காணிப்புக் குழுவுடன் தொடர்பு கொண்டு மட்டக்களப்பு செல்வதற்கு தனக்கு ஹெலிக்கொப்டர் ஏற்பாடு செய்து தருமாறு கூறினார். எனினும் ஹெலிகொப்டர் கிளிநொச்சிக்கு வரமுடியாது என்றும் ஓமந்தைக்கு வரமுடியும் என்பதால் அங்கு வரும்படி கூறினார்கள்.
கிளிநொச்சியில் ஹெலி தரையிறங்கும் இடம் புலிகளின் தலைவரின் இடத்துக்கும் மிக அருகே அமைந்திருந்தது. ஹெலி வருவதும் கருணா அதில் புறப்படுவதும் தெரிந்துவிடும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவே பிரபாகரனுடனான இறுதி சந்திப்பாக இருந்தது.
இரவோடு இரவாக கருணா அம்மான் ஓமந்தை வந்து அங்கிருந்து மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தார்.
மட்டக்களப்புக்கு வந்த கருணா அம்மான் என்னோடு தொடர்பு கொண்டார். அண்ணன் நான் உங்களுடன் உடனடியாக பேச வேண்டும் என்றார்.
நான் ஒருவரை ஒருவர் கொல்வதும், மறைந்து திரிவதும் எத்தனைக் காலத்துக்கு? இது தான் சரியான சந்தர்ப்பம். இதனை தவற விடக்கூடாது. நாம் ஒருவரோடு ஒருவர் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.
இவர்கள் இன்னமும் யுத்தம் என்ற மனப்பான்மையிலேயே இருக்கிறார்கள். எனக்கு விளங்கவில்லை. ஆட்சேர்ப்பு செய்யும்படி கூறுகிறார்கள். ஆயுதம் வந்த வண்ணம் இருக்கிறது என்றார்.
இவர் செல்லும் பாதை வேறு என்பதை உணர்ந்தேன். அவர் எதனை விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன். அவர் தலைமையுடன் முரண்படுகிறார் என்பதைக் கண்டேன். அவரது முடிவு சரியானதாக தென்பட்டது.
2004 சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளுமன்றத்தை கலைத்தார். மே 3ம் திகதி தேர்தல் தினம். கருணா என்னை தொலைபேசியில் அழைத்தார். இவர்களுடன் தொடர்ந்தும் செயலாற்ற முடியவில்லை.
பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் பிரச்சினைகளை வளர்க்கின்றனர் என்று கூறினார்.
எதற்காக இயக்கத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்தோமோ அது இன்று நடைபெறவில்லை. கிழக்கு மக்களை அவர்கள் வாட்டி வதைக்கிறார்கள்.
கிழக்கிலிருந்து களமுனைக்கு கொண்டு சென்ற இளைஞர், யுவதிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை பல முறை பிரபாகரனின் அமைச்சரவையில் சமர்ப்பித்திருக் கிறேன். அவை பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு வரப்படாமலேயே கிழித்து குப்பையில் போடப்பட்டன.
அண்ணன் நான் உங்களுடன் இணைந்து வேலை செய்யப் போகிறேன். எனக்கு ஆலோசனை வழங்குவதுடன் என்னை வழிநடத்துங்கள் எனக் கூறினார். எதனையும் நம்ப முடியாத நிலை.
தனக்கு தனது ஆதங்கங்களை வெளியில் சொல்லவும், மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எவ்வாறு கொண்டு வருவதும் நம்பகத்தன்மையான ஒருவர் வேண்டும் என்று நினைத்த கருணாவுக்கு நான் நம்பிக்கையுள்ள நண்பனாகத் தென்பட்டேன். இன்று வரை எந்த ரகசியத்தையும் நான் வெளியே சொன்னதில்லை. இப்போதுதான் நான் வெளியே கூறுகிறேன்.
ஏனெனில் கருணா இன்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர். நான் ஒருபோதும் அவரை வீழ்த்த விரும்பவில்லை. அவருக்காக ஐ. தே. க.விலிருந்து விலகிச் செல்வதற்கும் நான் வகித்த சகல பதவிகளையும் தியாகம் செய்யவும் நேர்ந்தது.
இதனை எண்ணி வருந்துகிர்களா?
இல்லை. ஒருபோதும் இல்லை. நான் நிறைய தியாகங்கள் செய்துள்ளேன். அவை அனைத்தும் நாட்டுக்காக என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அது இன்று நாட்டுக்கு சமாதானத்தை கொண்டு வந்திருக்கிறது. சமாதான உடன்படிக்கையின் படி புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிக்கலாம் என்ற சரத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதன்படி ஆயுதம் எதுவுமின்றி அவர் வந்து போகலாம். ஆனால் வன்னி புலிகள் ஆயுதங்களுடன் சர்வதேச கண்காணிப்புக் குழுவினரின் உதவியுடன் வந்தது மட்டுமல்ல பொது மக்களையும் தாக்கினர். கண்காணிப்புக்குழு இந்த விடயத்தில் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது.
காயமடைந்தவர்களை கொண்டு செல்வதற்காகச் சென்ற அம்பியூலன்ஸ் சாரதியையும் சுட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கருணா எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்தார். தனது ஆதங்கத்தை என்னிடம் கொட்டித் தீர்த்தார். தானும் பதிலுக்கு தாக்குதல் நடத்துவதா? எனக் கேட்டார். இல்லை.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் மெளனமாக பின்வாங்கிச் செல்வது நல்லது. இல்லையேல் இரத்த ஆறு ஓடும் நிலை ஏற்பட்டுவிடும் எனக் கூறி பாரிய அழிவை தடுத்து நிறுத்தினேன்.
தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எமது மக்கள் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள் என்பதற்காகவே நாம் இந்த போராட்டத்தில் இறங்கினோம். இன்று எமது ஆட்களே எமது மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரே என வருத்தப்பட்டார்.
அண்ணன் நான் கொழும்புக்கு செல்ல வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள். வெளி உலகுக்கு நான் இவற்றைக் கூற வேண்டும். கண்காணிப்புக்குழு பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது எனக் கூறியதுடன் என் மீது நம்பிக்கையும் வைத்தார்.
கருணா என்னுடன் தொடர்புகளை வைத்திருக்கிறார் என்பதற்காக நான் புலிகளினால் அச்சுறுத்தப்பட்டேன். எனக்குத் தெரியாமலேயே என்னை பின் தொடர்ந்தனர். நான் செல்லும் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.
எனது மைத்துனர் இரண்டு முறை கடத்தப்பட்டார். எனது குழந்தைகள் பாடசாலைக்கு செல்லும் போது கூட புலிகள் அவர்கள் பின் தொடர்ந்தனர். கருணாவை நான் எனது வீட்டில் மறைத்து வைத்திருக்கிறேன் எனச் சந்தேகப்பட்டனர். பொட்டு அம்மானின் சகாக்கள் ஊடுருவி ஐ. தே. க. வேட்பாளராக இருந்த சுந்தரம் பிள்ளை என்பவரை சுட்டுக் கொன்றனர். பொட்டு அம்மானின் சகாவான ரமணன் என்பவர் தான் அவரை சுட்டுக் கொன்றார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக என்னால் அறிமுகப்படுத்தப்பட்டு கருணா அம்மான் ஊடாக நியமிக்கப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியும் கொல்லப்பட்டார். இவர் வேறுயாருமல்ல, மட்டக்களப்பு மேயராக இருக்கும் சிவகீதா பிரபாகரனின் தந்தையார் தான் இவர். இவரது படுகொலையுடன் கருணாவை மேலும் ஆத்திரமடையச் செய்தது.
1999 ஏப்ரல் 2 தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ. தே. க. வேட்பாளராக நான் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனையை ரவூப் ஹக்கீம் ஐ. தே. க விடம் முன்வைத்தார். நான் போட்டியிடுவதாயின் ஸ்ரீல. மு. கா. விலேயே போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்தார். நான் என்றுமே இன ரீதியான, பிரதேச ரீதியான கட்சிகளை விரும்புவதில்லை. அவற்றில் இணைந்து போட்டியிட விரும்பியதுமில்லை.
வன்னிப் புலிகளின் ஊடுருவலைத் தொடர்ந்து கருணா தனது சகாக்களுடன் தொப்பிகல பகுதிக்கு பின்வாங்கினார். தனி ஒரு மனிதராக கருணா அம்மான் மட்டும் புலிகள் இயக்கத்திலிருந்து பிரியவில்லை. 6000 போராளிகளுடன் அவர் பிரிந்தார். அழிவுகளையும் உயிரிழப்புகளையும் தவிர்ப்பது தான் அவரது நோக்கம். இயக்கத்திலிருந்த போராளிகளை அவர்களின் பெற்றோரிடமே ஒப்படைத்தார். யுனிசெப் ஊடாக இவர்கள் கையளிக்கப்பட்டனர். தான் கொழும்பு செல்ல வேண்டும் என்று கூறியதுடன் சாரதி ஒருவருடன் வாகனமொன்று ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.
கருணா உங்களுடன் எப்படி தொடர்பு கொண்டார்?
என்னுடைய கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்புகளை எடுப்பார். வேறுபட்ட தொலைபேசிகளினூடாக என்னோடு பேசுவார். எனது கையடக்க தொலைபேசி அன்று முதல் இன்று இப்போது வரையிலும் எந்நேரமும் எவரும் பேசக் கூடிய நிலையில் தான் இருக்கும்.
2004 ஏப்ரல் 12 ஆம் திகதி தொப்பிகலவுக்கு அண்மித்த பகுதிக்கு சாரதியுடனும் மற்றுமொரு நபருடனும் நான் சென்றேன். சமிக்ஞைக்காக இன்னுமொரு வாகனத்தை பின் தொடர்ந்து கருணா அனுப்பியிருந்தார். இந்தப் பகுதியை அண்மித்த போது கருணா ஒரு வயல் வெளி போன்ற திறந்த வெளிப் பகுதியில் புஷ்ஷேர்ட் ஒன்றை அணிந்தவாறு கையில் பிரிவ்கேஸ் ஒன்றுடனும் நின்றிருந்தார்.
கருணா புலிகளால் மிகவும் தேடப்பட்டு வந்த நபர். அவரது தலைக்கு மில்லியன் கணக்கான ரூபாய்களை வழங்கவும் புலிகள் ஆயத்தமாக இருந்தனர்.
உயிரோடோ, பிணமாகவோ, கருணாவை பிடிக்க வேண்டும் என்றே புலிகள் நினைத்தனர். இதனால் எவரையும் நம்பத் தயாராகாத நிலையிலேயே நானே நேரடியாகச் சென்றேன். கருணாவுடன் 4 பெண்களும் இருந்தனர்.
அவர்கள் நால்வரும் பெண்கள் பிரிவில் போராளிகளாக இருக்கலாம். அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்னர் எக்காரணம் கொண்டும் தங்களுடன் எதுவித ஆயுதங்களும் எடுத்து வரக் கூடாது என்பதை கூறினேன். கருணா உட்பட ஏனையோர் தங்களது பயணப் பொதிகளை திறந்து ஒவ்வொன்றாக காட்டினர்.
கருணா தனது பெட்டியை திறந்து காட்டினார். அதில் ஆவணங்கள் மட்டுமே இருந்தன. “அண்ணன் ஒரு போதும் உங்களை பிரச்சினைக்குட்படுத்த மாட்டேன்” எனக் கூறினார்.
கருணாவை கொழும்புக்கு அழைத்து வரும் டிரான்போர்ட் வேலை மட்டும் தான் செய்தேன் என்பது வெளியில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதற்கு பின்னணியில் நடந்த உரையாடல்கள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் என்ன என்பது எவருக்கும் தெரியாது. உயிரை பணயம் வைத்து இந்தக் காரியத்தை செய்தேன்.
அதன் பலனை இன்று அனைவரும் அனுபவிக்கின்றனர். வடக்கில் இறுதி யுத்தத்தில் எவ்வளவு இழப்புக்கள் ஏற்பட்டன. புலித் தலைவர்களின் கதி என்னவாயிற்று. இதே நிலை கிழக்கிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதைத் தான் கருணாவும் நினைத்தார். நானும் நினைத்தேன்.
2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பிளவு ஏற்பட்டதன் பின்னர் கருணா அம்மான் என்னுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்றதிற்காக எனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டியும் இருந்தது. 2006 ஆம் ஆண்டு எனக்கு அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் ஏற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி என்னை தனிமைப்படுத்திவிட்டது. இதனாலேயே நான் நாட்டை விட்டும் வெளியேறினேன்.
விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனமடையச் செய்தது தனது கட்சி தான் என ஐ. தே. கட்சியினர் கூறிக் கொண்டிருக்கிறார்களே?
ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் நோக்கத்திற்காகத்தான் இந்த விடயத்தில் என்னை தொடர்பு படுத்திக் கூறியிருப்பதும் எனக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அமைச்சர் முரளிதரன் அன்று பிரிந்திருந்தார். இந்தப் பிரிவுக்கும் எனக்கும் தொடர்பில்லை. மோதல் தவிர்ப்புக்கான முயற்சியில் ஈடுபட்டோமே தவிர புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படவில்லை. அது ஒரு மனிதாபிமான நடவடிக்கையே.
இங்கிருந்து சென்றதன் பின்னர் அங்கு என்ன செய்தீர்கள்?
2007 ஆம் ஆண்டு ஐ. நா. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்திருந்த போது என்னைச் சந்தித்து மீண்டும் நாடு திரும்புமாறும் அரசியலில் ஈடுபடுமாறும் பாதுகாப்பான நிலை உருவாகியிருப்பதாகவும் கூறினார். அத்துடன் இலங்கைத் தூதரகத்தில் உயர் பதவியொன்றையும் வழங்கினார்.
இப்போது நாடு திரும்பியதன் நோக்கம் என்ன? அரசியலில் ஈடுபடுவீர்களா? ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவீர்களா?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பவர் எனது நல்ல நண்பர். அதே நேரம் மக்களின் ஜனாதிபதியாக பார்க்கிறேன். அவரை 1970 களில் இளம் அரசியல்வாதியாக சந்தித்திருக்கிறேன். எனது மாமனாரான அலவி மெளலானாவுடன் பல தடவைகள் அவரை நான் சந்தித்திருக்கிறேன். என்னாலான சிறு உதவிகளை அந்தக் காலத்தில் நான் செய்திருக்கிறேன்.
எளிதில் மறந்துவிட முடியாத நபர் அவர். கருணா அம்மானுடன் ஜனாதிபதியை சந்திக்கச் சென்றபோது ஜனாதிபதி கடந்த காலங்களில் நான் செய்த சிறு உதவியையும் மறக்காமல் நினைவு கூர்ந்தார். “அண்ணன் நீங்கள் எனக்கு மட்டும் உதவியதாகவே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என கருணா என்னிடம் வேடிக்கையாக கேட்டார்.
என்னை யாரும் இங்கு அழைக்கவில்லை. நானாகத்தான் வந்தேன். நான் வகித்த பதவி இரண்டு வருடங்களுக்கானது. விமான நிலையத்தில் எனது நண்பர் கருணா என்னை வரவேற்றார்.
இன்று தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மட்டக்களப்பு மட்டுமல்ல, நாட்டில் எந்தப் பாகத்துக்கும் சென்று வரலாம்.
நான் என்றுமே பிரதேச ரீதியான, கட்சிகளை விரும்பியதில்லை. இணைந்து செயற்பட எண்ணியதும் இல்லை. இது என்னுடைய சுபாவம். என் மக்களுக்கு நன்றாக தெரியும்.
மட்டக்களப்பில் 1,15,000 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியதாக கூறினீர்கள். அந்த ஆதரவு இன்றும் இருக்கிறது என நினைக்கிaர்களா?
இருக்கிறது மட்டுமல்ல. இன்னும் அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். என்னிடம் கேட்பதை விட என் மக்களிடம் இதைக் கேட்கலாம்.
அரசுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஏதாவது நிபந்தனைகளை வைக்கிர்களா?
ஒரு போதும் இல்லை. அது என் வழக்கமும் அல்ல.
அடுத்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவீர்களா?
ஆம். நிச்சயமாக அரசுடன் இணைந்து செயற்படுவேன். அது தான் சிறந்தது என நினைக்கிறேன். அப்போது தான் மக்களுக்கு ஏதேனும் செய்ய முடியும்.
ஐ. தே. க. - ஜே. வி. பி. கூட்டு பற்றி கூறுவதாயின்?
ஐக்கிய தேசியக் கட்சிக்கென்று சில தனிப்பட்ட நல்ல கொள்கைகள் உண்டு. ஜே.வி. பி.யுடன் இணையும் என்று நான் நினைக்கவே இல்லை.
ஜே. வி. பி யினரின் அரசியல் ஒரு குளறுபடியானது. எந்நேரமும் எதிர்மறை சிந்தனையாளர்கள்.
சரத் பொன்சேகா ஒரு இராணுவ அதிகாரி. அவர் ஒரு அரசியல்வாதியல்ல. இப்போது அரசியல் பேசுகிறார்.
தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினர் என்றும் அவர்கள் பெரும்பான்மையிடம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது, எமது மக்களின் மனதை புண்படுத்தியிருக்கிறது.
இவர் ஒரு நிறைவேற்று அதிகாரத்திற்கு வந்தால் நிச்சயமாக சிறுபான்மையினர் அதிர்ச்சியடைந்துவிடுவார்கள் என்றும் அலி சாஹிர் மெளலானா தனது நேர்காணலின் போது தெரிவித்தார்.

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாபெரும் கலைகலாச்சார நிகழ்வு 2009.

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழத்தின் 2009ம் ஆண்டுக்கான மாபெரும் கலைகலாச்சார நிகழ்வு கடந்த 22ம் திகதி நடைபெற்றது. வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழ மாணவர் ஓன்றியத்தினால் ஏற்பாடு செய்ப்பட்ட இவ் நிகழ்வு காலை 9 மணிக்கு பல்கலைகழக ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பான வரவேற்புடன் ஆரம்பமானது. இவ் கலாச்சார நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி ஆகியோரும் கௌரவ அதிதிகளாக ஒலுவில் பல்கலைக்கழக துனைவேந்தர் ஸ்மாயில், கிழக்கு பல்கலைக்கழக பதில் துனைவேந்தர் பிறேம்குமார் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் மற்றும் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாளர் துரையப்பா ஆனந்தராஜா (ரஞ்சன்) ஊடக செயலாளர் யூலியன் ஞானப்பிரகாசம் (நியுட்டன்) மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் பல்கலைக்கழக நிர்வாகிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்ட நிகழ்வில் மும்மொழியை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவ் நிகழ்வில் உரைநிகழ்த்திய கௌரவ அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பண்டைய காலத்தில் நிலவிய தகவல் தொழிநுட்பத்தை வைத்து ஐவு எனும் தொழிநுட்பம் அறிமுகமானது தற்போது யேழெ புதிய தொழிநுட்பம் அறிமுகமாகியுள்ளது இந்த நனோ ரெக்னோலிஜி என்று கூறப்படுகின்ற புதிய முறையிலான தொழிநுட்பத்தோடு இன்று கல்வி முறையை வளப்படுத்தி கொண்டு இருக்கின்றோம் கடந்த காலத்தில் விட்ட தவறுகளையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கின்றோம் என குறிப்பிட்டார். அதேவேளை தென்கிழக்கு பல்கலைகழக துனைவேந்தர் கூறுகையில் முன்னையொரு காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையிலான உறவு பிட்டும் தேங்காய்ப்பூ போன்று காணப்பட்டது கடந்த காலங்களில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களினால் நிலைகுலைந்திருந்த அந்த மக்களிடையிலான உறவு மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வந்திருக்கின்றது இதற்க்கு காரணம் எமது அமைச்சர் கருணா அம்மான் தான் என கூறிமுடித்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர் கருணா அம்மான் அவர்கள் போன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

தகவல், புகைப்படம் ஊடகச் செயலாளர் யூலியன்.




Saturday, December 26, 2009

அமெரிக்க விமானத்தை தகர்க்க நைஜீரிய பயணி முயற்சி

அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி ஒருவரை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளன.நைஜீரியாவைச் சேர்ந்த அப்துல் முதல்லாத் (வயது 23) என்பவர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து டெட்ராய்ட் நகருக்கு வடக்கு மேற்கு ஏயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார். அப்போது விமானத்தில் ஒரு சாதனத்தை வெடிக்க வைக்க அவர் முயற்சித்துள்ளார்.சக பயணிகள் மற்றும் விமானத்திற்குள் இருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து அவரது முயற்சியைத் தடுத்து விட்டனர். அப்துல்லுக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.வெள்ளிக்கிழமை அந்த விமானம் டெட்ராய்ட்டில் தரையிறங்கவிருந்த சமயத்தில், தான் வைத்திருந்த அந்த சாதனத்தை வெடிக்க வைக்க அந்த நைஜீரியர் முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தீயால் புகை வாசம் வந்ததைத் தொடர்ந்து அருகில் இருந்த பயணிகள் அப்துல்லை மடக்கிப் பிடித்தனர். மேலும் தீயை அணைக்கவும் முயற்சித்தனர்.இந்த அமளியைப் பார்த்து பிற பயணிகளும் ஓடி வந்து அப்துல்லை தடுத்துப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த முயற்சியின்போது அப்துல்லுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவருக்கு அருகில் இருந்த மேலும் 2 பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விமானத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாக தரையிறங்கியது.கைது செய்யப்பட்ட அப்துல்லிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Friday, December 25, 2009

சுனாமியாக வந்து சென்ற கடல்கொந்தளிப்பே


சுமைகளை சுமந்த மக்களை
சோகத்தில் ஆழ்த்திச்சென்ற
சுனாமியே.....உனை
சுட்டித்தனமாக நினைத்த எங்களை
சுறுட்டிவாரி சென்றதேனோ?
அன்பதை பரிமாறி அவனியில்
அகம்மகிழ்ந்து கொண்டாடும் உறவுகளிடம்
ஆழ்ந்த சோகத்தை தந்து விட்டு
அமைதியாக நகர்ந்து சென்றதேனோ??
தன்மானத்தை சுமந்த எங்கள் இனத்தை
தத்தளிக்க வைத்துவிட்டு
தற்புகழ்ச்சி சுனாமியெனும் நாமம் சுமந்து
தரைதனில் தவழ்ந்து சென்றதேனோ??
திரும்பிய திசைகள் எல்லாம்
திகைத்து நின்ற அப்பாவிகளுக்கு தீய
திருப்புமுனை களமாக அன்று
திராவகத்தை தெளித்ததேனோ??
ஈன்றவரை தொலைத்த தனையன்களுக்கு
ஈட்டி நெஞ்சில் துளைத்தது போல்
ஈனத்தனமான செயலை செய்தவன் நீ
ஈடுசெய்ய முடியுமா இப்பிறப்பில்
ஈசனிடம் கேட்டு மண்றாடி கேட்கிறோம்
எனிமேலும் வேண்டாம்...எங்கள் உறவுகளை
அள்ளிச்செல்ல வேண்டாம்..............
அலைகடலில் சங்கமமான எங்கள் உறவுகளுக்காக..
கிழக்குமகள் இணையம்

Thursday, December 24, 2009

நத்தார் வாழ்த்துக்கள்

பிறந்திருக்கும் புனித திருநாளாகிய
நத்தார் பண்டிகையில் உலகிலுள்ள
அணைத்து மக்களும் சுபிட்சத்துடன்
வாழ இதயம் நிறைந்த இனிய
வாழ்த்துக்களை கூறுகின்றது
கிழக்குமகள்

Saturday, December 19, 2009

அன்னை மரியைத் தாங்கும் அதிசய கரங்கள்! ஆனைக்கோட்டையில் சம்பவம்

ஆனைக்கோட்டை வராளி கோவிலடி அருகிலுள்ள வீடு ஒன்றில், அன்னை மரியின் படத்திலிருந்து கைகள் தெரியும் அதிசயம் நடந்துள்ளது.ஆனைக்கோட்டை வராளி கோவிலடி வீடு ஒன்றில் அன்னை மரியின் படம் வைத்து வழிபட்டு வந்தனர். நேற்றிரவு இந்தப் படத்தில் இரண்டு கரங்கள் மாதாவைத் தாங்கியபடி நிற்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த அற்புதத்தைக் காண்பதற்காக பலர் அவ்வீட்டுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதற்கு முன்னரும் பருத்தித்துறையில் இரு இடங்களில் மாதாவின் படத்தில் அதிசயமாகக் கரங்கள் தெரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Friday, December 18, 2009

ஏ-9 வீதியூடாக இன்று முதல் சகல வாகனங்களும் பயணிக்கலாம் யாழ். அரச அதிபர்

ஏ-9 வீதியினூடாக இன்று முதல் தனியார் மற்றும் சகல வாகனங்களும் கட்டுப்பாடுகள் இன்றிப் பயணிக்க முடியும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி தனக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், "யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ-9 பாதையில் இன்று 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றிப் பயணிக்க முடியும். காலை 6.00 மணி முதல் மாலை 4.00மணி வரை இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்குமிடையிலும் இந்த அடிப்படையில் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் சகல பஸ்களும் யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து தொடரணி இல்லாமல் ஏ-9 வீதியினூடாக பயணிக்க முடியும். தேவைக்கேற்ப இடையிடையே இராணுவச் சோதனை நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.யாழ்ப்பாணத்திலிருந்து பொருட்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டு செல்லுதல் போன்ற செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரும் வரை நடைமுறையில் உள்ளவாறே நாவற்குழி களஞ்சியத்திலிருந்து தொடரணி மூலம் பயணிக்கலாம்.பயணத்தை மேற்கொள்ளும் சகல வாகனங்களும், சாரதி, நடத்துனர்கள், பயணிகள் யாவரும் இச்செயற்பாட்டில் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்

Wednesday, December 16, 2009

வெல்லாவெளியில் வெள்ளம் மக்கள் மீட்புப் பணியில் செஞ்சிலுவைச் சங்கம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் வெள்ளத்தினால் சூழப்பட்ட ஊற்றுமடு கிராமத்து மக்களை, இலங்கை செஞ்சிலுவைச் சங்க மீட்புக் குழுவினர் மீட்டு வந்து, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். படகுகள் மூலம் அழைத்து வரப்பட்ட 75 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது வெல்லாவெளி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு, பாராமரிக்கப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து ஆராயும் பொருட்டு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடை பெற்றது.இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இடம் பெயர்ந்துள்ள குடும்பங்களுக்குச் சமைத்த உணவு வழங்குவதற்கும், பாதிப்புக்கு உள்ளான ஏனைய குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்குமான பணிப்புரையை அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி இக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு விடுத்தார். வெள்ளத்தினால் சூழவுள்ள கிராமங்களிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மூலம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்ட அவர், அதற்கான செலவுகளை தனது அமைச்சு வழங்கும் என்றும் குறிப்பிட்டார். இக்கூட்டம் முடிந்த பின்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சகிதம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில இடங்களையும் அமைச்சர் சென்று பார்வையிட்டார். அதேவேளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.விமலராஜ் வெள்ளம் காரணமாக 58 ஆயிரத்து 897 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார். நேற்று மாலை வரை பிரதேச செயலாளர்களிடமிருந்து கிடைத்தத் தகவல்களின் படி 350 குடும்பங்களைச் சேர்ந்த 779 பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.வெள்ளம் தற்போது வடிந்து வருகின்றது. வீதிகளில் வெள்ள நீர் காணப்படுவதால் போக்குவரத்து சேவைகளும் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. இடி மின்னலுக்கு இலக்காகி 4 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி பட்டிப்பளை பிரதேசத்தில் மட்டும் 61 வீடுகள் சேதமடைந்துள்ளன. கடந்த ஒருவார கால மழை வெள்ளம் காரணமாக அந்தப் பிரதேசத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளான் என்றும் அவர் தெரிவித்தார்.

Monday, December 14, 2009

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்வு - இனியபாரதி மேற்கொண்ட முயற்சியின் பலன்

இரு தசாப்தங்களாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் பல சுயநல அரசியல்வாதிகளின் தலையீடுகளால் தடைப்பட்டுவந்துள்ள இந்நிலையில், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தற்போது தனியான பிரதேச செயலகமாக செயற்படுவதற்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான வர்த்தமான பத்திரிகை அறிவித்தல் வெளியாகவுள்ளதாகவும் தெரியவருகிறது.இத்தரமுயர்த்தலுக்காக ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி மேற்கொண்ட முயற்சியின் பலனாக இதற்கான அனுமதியினை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.இம்மகிழ்ச்சியான செய்தி கேட்டு கல்முனை பிரதேச தமிழ்ப்பிரிவு மக்கள் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தும் பட்டாசுகள் கொழுத்தியும் தமது மகிழ்ச்சியைத் வெளிப்படுத்தும் அதவேளை, இதற்கான பாடுபட்ட ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளார் இனியபாரதிக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.இது தொடர்பாக கல்முனை பிரதேச புத்தியீவிகள் தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் இனியபாரதிக்குத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரியவருகிறது.

Saturday, December 12, 2009

திருக்கோவில் கல்வி வலயத்திற்கு தனி வலயமாக. அனுமதி இனிய பாரதிக்கு கௌரவிப்பு

நீண்ட காலமாக திருக்கோவில் கல்வி வலயத்தை தனி வலயமாக அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியினை அடுத்து இன்று முதல் திருக்கோவில் கல்வி வலயம் தனிக் கல்வி வலயமாக செயற்படுவதற்கு ஜனாதிபதியினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4 மணியளவில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வொன்று திருக்கோவில் கல்வி வலயப் புத்திஜீவிகளால் நடத்தப்பட்டது.இந்நிகழ்வு ஆசிரியர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் கதாநாயகன் இனியபாரதி அவர்களை பேண்ட வாத்தியங்கள் முழங்க மலர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டார். இந்திகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி கைத்தொழில் அமைச்சின் மக்கள் தொடர்பாளர் திரு. நந்தகுமார் அவர்களும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திருக்கோவில் கல்வி வலயப் பாடசாலைகளின் அதிபர்கள், 300இற்கு மேற்பட்ட் ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நீண்ட காலமாக இக்கல்வி வலயத்தினை அமைப்பதற்கு பல்வேறு அரசியல்வாதிகள் பலவழிகளிலும் முட்டுக்கட்டைகளை போட்டுவந்துள்ள நிலையில் இன்று இக்கல்வி வலயம் அமையப்பெறுவது எமக்கு பெரிய வரப்பிரசாதமாகும் என புத்தஜீவிகள் கருத்துத் தெரிவித்தனர்.இதுவரையும் அக்கரைப்பற்று வலயத்தினுள் இயங்கிவந்துள்ள ஆலயடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் கோட்ட தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இவ்வலயத்தில் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 9, 2009

இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுமாத்தளன் பிரதேசத்துக்கு விஜயம்

இவ்வருடம் மே மாதம் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இறுதிச் சமர் நடைபெற்ற புதுமாத்தளன் பிரதேசத்துக்கு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயமொன்றை மேற்கொண்டார். இலங்கையில் 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாதத்தை, புலிகளுடன் கடுமையாகப் போரிட்டு முடிவுக்குக் கொண்டுவந்த படையினரின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.நாட்டை ஒன்றுபடுத்திய படை வீரார்களின் பெருமையை என்றும் பறைசாற்றும் வண்ணம் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது

Tuesday, December 8, 2009

ஈராக் தலைநகர் பக்தாத்தில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பியில் 101 பேர் பலி

ஈராக் தலைநகர் பக்தாத்தில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 101 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 182 காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.பக்தாத்தின் தென்பகுதி மாவட்டமான டோராவில் இன்று காலை 10 மணியளவில் முதலாவது குண்டு வெடித்தது.ஏனைய மூன்று கார் குண்டுகளும் பக்தாத்தின் மத்திய நகரப்பகுதியில் 10.30 மணியளவில் வெடித்தன.இவற்றுள் ஒன்று சமூக மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சின் முனபாகவும், ஏனையவை வர்த்தக நகரங்களான நாடா மற்றும் அல்-கஷ்லா சதுக்கம் போன்றவற்றில் வெடித்துள்ளன.ஐந்தாவது குண்டு பக்தாத்தின் மேற்கு மாவட்டமான மன்சூரிலுள்ள கார்க் சிவில் கோட்டிலும் வெடித்துள்ளன.

Monday, December 7, 2009

மட்டக்களப்பு அபிவிருத்திக்குழுக் கூட்டதில் இரண்டரை வருடங்களின் பின் கூட்டமைப்பு எம்.பிக்கள் பங்கேற்பு....

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்ற போது மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டரை வருடங்களின் பின்னர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர்களான எஸ்.எச்.அமீர் அலி ,விநாயகமூர்த்தி முரளீதரன்(கருணா அம்மான்) மற்றும் மாகாண ஆளுனர் வைஸ் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் ,தங்கேஸ்வரி கதிர்காமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்(கருணா அம்மான்) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும்.
இன்றைய கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச காணிகளில் அத்து மீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டினர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப் பிரதேசமான கெவிலியாமடு மற்றும் மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப் பிரதேசமான தோணி தாண்ட மடு ஆகிய இடங்களில் தொடரும் சட்டவிரோத குடியேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க அதிபர் ,மாகாண காணி ஆணையாளர் ,பிரதேச செயலாளர் பொலிஸ் ,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படை அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் அறிக்கையை எதிர்வரும் திங்கள் கிழமைக்கு முன்னர் சமர்ப்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் கேட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - கல்முனை வீதியில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் முன்பாக மூடப்பட்டுள்ள வீதியை உடனடியாக திறந்து பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Friday, December 4, 2009

அறிமுகமாகும் புதிய ஆயுதம்.......

அறிமுகமாகும் புதிய ஆயுதம் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல்
இல்லை.....

Wednesday, December 2, 2009

சிந்தியுங்கள் தமிழ் மக்களே........

இன்று ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக
போட்டியிடும் சரத்பொன்சேகா அன்று இராணுவத்
தளபதியாக இருந்த போது எத்தனையோ போர்
குற்றங்களையும் தமிழர்களையும் கொன்று குவித்தார்
என்று புலிகள் பிரச்சாரம் செய்தர்கள் அன்று ஆனால்
இன்று அவர்களே சரத்பொன்சேகாவை ஆதாரிக்கின்றார்கள்
என்றால் புலிகள் இன்னும் தமிழ் மக்கள் கொன்று
குவிகப்படுவதை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொன்டிருக்கின்றார்கள்
என்பது உண்மை சற்று சிந்தியுங்கள் தமிழ் மக்களே

அன்று சரத்பொன்சேகா இலங்கைக்கு தமிழர்களும் முஸ்லிங்களும்
வந்து குடியேறியவர்கள் அவர்களுக்கு இலங்கை சொந்தமில்லை
இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் எங்கள் பரம்பரை
நாடு என்று கூறிவர் என்பதை மறந்து விட வேன்டாம்

இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம் மக்களே சரத்பொன்சேகா
ஜனாதிபதியாக வந்தால் இலங்கைத் திருநாடு எவ்வாறான
பிரச்சனையை எதிர் நோக்கும் என்று சிந்தியுங்கள் மக்களே

மேலும் சரத்பொன்சேகாவை புலிசார் இனையத்தளங்கள் இன்று
ஆதரித்து செய்திகள் வெளியிட்டுயிருக்கின்றது இவர்களுக்கு
இலங்கையில் எப்போதும் குழப்ப நிலை இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்

இன்று நீங்கள் யாரால் வளமுடனும் சமாதானத்துடனும்
வாழ்கின்றீர்களோ அவரை ஆதரித்து வெற்றி பெற
வையுங்கள் இதனால் நிம்மதியுடனும் சுபிட்சமுடனும்
வாழ முடியும்..

ஆக்கம் ராஜா

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு வெளியில் சென்று வர அனுமதி

அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்ததற்கு அமைய வவுனியா மனிக்பாம் முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு வெளியில் சென்று வருவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் அனுமதி வழங்கியுள்ளது.

ஆயிரக்கணக்கானவர்கள் மனிக்பாம் முகாம் தொகுதியில் இருந்து வெளியில் தனியாகவும் குடும்பமாகவும் வெளியில் வந்து பல இடங்களுக்கும் சென்றார்கள்.

ஒரு நாள் தொடக்கம் 15 நாட்கள் வரையில் வெளியில் சென்று தங்கியிருந்துவிட்டுத் திரும்பி வருவதற்கு முகாம்களில் உள்ள அதிகாரிகள் தமக்கு அனுமதி வழங்கியிருப்பதாக முகாம்களில் இருந்து வெளியில் வந்த பலரும் தெரிவித்தனர்.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை என்று நாட்டின் பல இடங்களுக்கும் செல்வதற்காகத் தாங்கள் முகாம்களில் இருந்து வெளியில் வந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முகாம்களில் தடுத்து வைத்திருந்த தங்களுக்கு வெளியில் சுதந்திரமாகச் சென்று வருவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாகவும் அவர்களில் பலர் தெரிவித்தனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் செட்டிகுளம் மனிக்பாம் முகாம்களில் இருந்து வெளியில் வந்ததனால், செட்டிகுளத்திற்கும் வவுனியாவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள பேரூந்து வண்டிகள் மக்களின் பிரயாணத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாமல் திணற நேரிட்டதாக பேரூந்து சாரதிகள் தெரிவித்தனர்.

எனினும், ஒரு முகாமில் இருந்து மற்ற முகாமுக்குச் சென்றவர்களுக்கு அங்கு உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கௌரவ அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விஜயம்.

கிழக்கு மாகாணத்தின் அதி சிறந்த கல்விக்கூடமாக திகழும் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழத்திற்கு தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விஜயத்தினை மேற்கொண்டார் அங்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தினை முதலில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் பின்பு அப் பல்கலைக்கழகத்தின் துனைவேந்தர் பத்மநாதன் மற்றும் பீடாதிபதிகள், பதிவாளர், சபை உறுப்பினர்களை சந்தித்து பல்கலைக்கழத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பாகவும், அண்மையில் மாணவர்களால் நடத்தப்பட்ட பதிவாளர் மாற்றம் தொடர்பான பகிஸ்கரிப்பு மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது எமது பல்கலைக்கழகம் பின்செல்கின்ற நிலை தொடர்பாகவும், மாணவர்கள் மனங்களில் நாம் முதலில் இடம்பிடித்து அவர்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஒற்றுமைப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பில் இந்த உயர் அதிகாரிகள் இருக்கின்றீர்கள் என்றும், வெளிநாட்டில் தங்கள் உயிர்களை காப்பாற்ற சென்ற புத்திஜீவிகள் விசேடமாக கூறப்போனால் எமது பல்கலைகத்தில் இருந்து வெளிநாடு சென்ற இவர்கள் மீண்டும் இங்கு அனுமதி வழங்கி அவர்களை உள்வாங்க வேண்டும் என்றும், எதிர்வரும் 5ம் திகதி பதிவாளருக்கான காலவகாசம் நிறைவுறும் வேளையில் புதிய பதிவாளரை நியமணம் செய்ய வேண்டும் எனவும், ஏனைய பல அபிவிருத்தி தொடர்பாகவும், சிறப்பாகக் கூறப்போனால் எமது மருத்துவ பீடத்தினை நவீன முறையில் கட்டியெழுப்பக் கூடியவகையில் ஒரு நிறுவனத்திடம் உதவி கோரியுள்ளேன். அது விரைவில் கிடைக்கும் என்றும் எமது ஒற்றுமையில்தான் எம்மினத்தின் சிறந்த அபிவிருத்தியும், பலமும் தங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். அத்தோடு எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில். எமது இனத்தினை மதித்து எமக்கு இலங்கைத் திருநாட்டில் சிறந்த கௌரவத்தினை வழங்கியுள்ள அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை நாங்கள் மீண்டும் அதே ஜனாதிபதியின் கதிரையில் அவரை அமர்த்தி நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் அவரை நாம் பலமாக்கி பயன்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.


Monday, November 30, 2009

மீண்டும் ஒரு வரலாற்று தவறை செய்யக்கூடாது என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்......

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்க வேண்டும்.



வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்கு தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் கருணா அம்மான் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் அமைச்சர் கருணா அம்மான் கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பார்கள் என உறுதியுடன் தெரிவித்தார்.
குறிப்பாக வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துதல், மற்றும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்னெடுத்து வருகிறார்.
குடாநாட்டுடன் தென்பகுதியை இணைக்கும் ஏ-9 வீதி அபிவிருத்தி செய்யப்படுகிறது. யாழ். குடாநாட்டுக்கான ரயில் பாதைகளை அமைக்கும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீன்பிடி, சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடபகுதி மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தருணத்தில் நாம் உங்களுடன்தான் இருக்கிறோம். உங்களுக்கே எமது ஆதரவு என்பதை உணர்த்த வேண்டும். ஒரு வரலாற்றுத் தவறை மீண்டும் தமிழ் மக்கள் செய்துவிடக்கூடாது என அந்த மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டவர். அவர் நல்லதொரு அரசியல் பின்னணியைக் கொண்டவர். சரத் பொன்சேக்கா போன்றோரின் பின்னணி முற்றிலுமாக இராணுவப் பின்னணியைக் கொண்டது. இதனை தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

Sunday, November 29, 2009

சிந்தியுங்கள் கிழக்கு மக்களே...........

கிழக்கு மக்களே நீங்கள் அன்று போரினால் இடம் பெயர்ந்து அகதியாக
நின்ற போது உங்களை பார்க்க வராதவர்கள் குரல் கொடுக்கதவர்கள் இன்று
எந்த முகத்துடன் உங்களை நாடி வருகின்றார்கள் இவர்களுக்கு வெட்கம்
இல்லையா இன்று கிழக்கு மக்கள் நிம்மதியுடனும் வளமுடனும் வாழ்ந்து
வருகின்றார்கள் இதனை சின்னா பின்னமாக்கு வதற்காகவா இவர்கள்
வருகின்றார்கள் கிழக்கு வாழ் மக்களே இவர்களை நம்பி காலா காலம்
முட்டாளாக வாழ்ந்தது போதும் இனியும் முட்டாள்களாக வாழாமல்
சிந்தித்து முடிவு எடுங்கள்......................

இவர்களின் விஜயம் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது..



தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்..
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தனர்..
இவர்களுடன் கிழக்கு மாகாணத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த அக் கட்சியின் பொதுச் செயலாளரான பிரசன்னா இந்திரகுமாரும் தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ளார்..
தமது கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கட்சி உறுப்பினர்களுடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனர்..
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களையும் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரொருவரை நிறுத்துவது தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறியதாகவும் தெரியவருகின்றது. .
தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர் மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிய பின்பு அன்றிரவே கொழும்பு திரும்பினர்.

Friday, November 27, 2009

புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லை என்பது உறுதியாகிவிட்டது

இன்று புலிகளின் மாவீரர் நாள் ஆனால் மாவீரர் தின உரை ஆற்றுவதற்கு
புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லை என்பது உறுதியாகி விட்டது
இதற்கு புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராம் ஆற்றிய ஒலி வடிவமான
உரையே காரணம்.(சென்ற வாரம் ராமையும் அவருடன் சேர்ந்தவர்களையும் துரோகிகள் என்றுகூறியதையும் மறந்துவிடவேண்டாம்)

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26இல் ஆணையாளர் அறிவிப்பு ........


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆந் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.