Tuesday, March 30, 2010

தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விஜயம்.

தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) தாழங்குடாவில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விஜயம் செய்தார். அங்கு சென்ற அவர் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி திரு.எஸ். பாக்கியராஜா உள்ளிட்ட பல விரிவுரையாளர் கொண்ட குழுவினை அமைச்சர் சந்தித்தார்.அதில் தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பான விடங்கள் ஆராயப்பட்டது. இதன்போது தேசிய கல்வியியல் கல்லூரியின் குறைபாடுகள் கேட்டறிந்த அமைச்சர் இதனை நிறைவு செய்து தருவதாக வாக்குறுதியளித்தார். தொடர்ந்து இசை, நடனம் போன்ற பாடங்களை நடாத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன் மாணவர்களுக்கு தற்காலிக வகுப்பறை ஒன்றினை ஏற்படுத்தித் தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.

Monday, March 29, 2010

மக்கள் நலனுக்காக எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கத் தயார் ஜனாதிபதி

நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளை நன்கறிந்துள்ள நான் இந்நாட்டு மக்களுக்காக எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பண்டாரகமவில் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எனது வாழ்நாளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கருத்தில் கொள்ளாது செயற்பட்டேனேயன்றி தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடத்தும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் பண்டாரகம பொது விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எனக்கு எதிராக பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை நாட்டு மக்கள் நிரகரித்து விட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நான் முகம் கொடுத்த அச்சுறுத்தல்களிலிருந்து என்னை மீட்டெடுத்தது இந்நாட்டு மக்கள்தான். எனக்கு இந்த நாட்டை விடவும் பெறுமதி யானது எதுவுமே இல்லை. அதனால் விடுவிக்கப்பட்டி ருக்கும் நாட்டைப் பாதுகாப் பதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாட்டு மக்கள் தான் வலு சேர்க்க வேண்டும்.
நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருப்பது வலுவாகவும், துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டிய வேலைகள்தான்.
நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத பாராளுமன்ற ஆட்சி அதிகாரமே ஐ.ம.சு. முன்னணிக்கு இருந்தது. என்றாலும் அண்மையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது 47 மேலதிக ஆசனங்களைக் கொண்டதாக அரசாங்கம் இருந்தது. அதனால் சகலரும் ஒற்றுமையாக செயற்படுங்கள்.
2005 ஆம் ஆண்டில் நான் மஹிந்த சிந்தனையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். அச்சமயம் நாடு பிளவுபட்டிருந்தது. கடல் பரப்பில் மூன்றிலிரண்டு பகுதியும், சிங்கப்பூரைப் போன்ற 23 பங்கு நிலப்பரப்பும் பயங்கரவாதிகளிடம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் தனியான பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள் போன்ற கட்டமைப்புக்களைக் கொண்டிருந்தார்கள். அவர்களை அச்சமயம் ஏதாவது ஒரு நாடு ஏற்றுக் கொண்டிருந்தால் நிலமை வேறுவிதமாக அமைந்திருக்கும்.
அதனால் பதவிக்கு வந்ததும் தாயகத்தின் மீது அன்பு கொண்ட சக்திகளை இணைத்துக் கொண்டு நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையை மக்களின் வேண்டுகோள்படி மேற்கொண்டேன். அந்தவேளையில் சபாநாயகர் ஒருவரை எம்மால் தெரிவு செய்ய முடியாத பாராளுமன்றம் இருந்த போதிலும் பாராளுமன்றத்தைக் கலைத்து நான் தேர்தல் நடத்தவில்லை. மாறாக நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயற்பட்டேன்.
மக்களின் வேண்டுகோள்படி நாட்டைக் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஐக்கியப்படுத்தி யுள்ளேன்.
அத்தோடு நின்றுவிடாமல் அரச துறையை வலுப்படுத்தவும், நாட்டைத் துரித அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லவும் நடவடிக்கை எடுத்தேன். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாயகத்தைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதனடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வீதிகள், துறைமுகங்கள், நீர்ப்பாசனத்துறை மின்னுற்பத்தி, மின்வழங்கல் உட்பட சகல துறைகளும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
நாம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகத்தான் கடன் பெறுகின்றோம். மாறாக கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று உண்பதற்காக அல்ல. அந்த ஆட்சிக் காலங்களில் கோதுமை மாவுக்கென மில்லியன் கணக்கில் கடன் பெறப்பட்டிருக்கின்றது. அந்தக் கடன்களை இன்றும் நாம் வட்டியுடன் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நாம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பை எமது விவசாயிகளிடம் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு நாம் உரமானியம் வழங்குகின்றோம். மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றோம்.
இதுதான் எமது கொள்கை. நாட்டில் பிரச்சினை இருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை. அதனால் எமக்கு துரித அபிவிருத்தி மிகவும் அவசியம். இதற்கு வலுவான பாராளுமன்றம் இன்றியமையாதது. கிராமத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்களது பொறுப்பு என்றார்.
இக்கூட்டத்தில் ஐ.ம.சு.மு.யின் களுத்துறை மாவட்ட அபேட்சகர்களான அமைச்சர்கள் குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, டாக்டர் ராஜித சேனாரட்ன, ரோஹித அபேகுண வர்தன, நிர்மல கொத்தளாவல மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் டியூடர் தயாரட்ன, ஜயந்த ஜயவீர, அப்துல் காதர் மசூர் மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Thursday, March 25, 2010

கருணாஅம்மான் கல்குடா விஜயம் மக்களுடன் கலந்துரையாடல்.

தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கல்குடா பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.இங்கு உள்ள மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததுடன் மீன்பிடி தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.மட்டக்களப்புக்குப் பொறுப்பான மீன்பிடிவள திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். அத்துடன் ஆலயங்கள், பாதைகள் என்பவற்றையும் பார்வையிட்டார்.மேலும் அவர் கொங்கிரீட் பாதை ஒன்றையும் கல்மடு பிரதேசத்திற்கு பெற்றுக்கொடுத்தார்.

ஆயிரம் ரூபாவாக சமுர்த்திக் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம் அமைச்சர் லஷ்மன் யாப்பா தெரிவிப்பு.

அரசாங்கம் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி ஆகக் குறைந்த கொடுப்பனவுத்தொகை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது என்று தகவற்றுறை அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சமுர்த்தி அதிகார சபையின் ஊழியர்கள் 23700 பேருக்கு ஓய்வுதியம் வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார். மனிதாபிமான செயற்பாடுகளின் முடிவில் சேமிக்கப்பட்ட நிதியின் மூலமே இவ்வாறான நலன்புரி நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
16 இலட்சம் பேர் சமுர்த்தி வறுமை ஒழிப்பு நிவாரண உதவியை பெற்று வருகின்றனர். மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரப்பிரசாதங்களுககு ஏற்ப சமுர்த்தி அதிகார சபை அவர்களுக்கு இலகு கடன் சுய வேலை வாய்ப்பு மற்றும் சிறு முதலீட்டு திட்டங்களுக்கும் உதவி வருகிறது. என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

Wednesday, March 24, 2010

வடக்கில் பாடசாலைகளை நிர்மாணிக்க ரூபா 100 மில்லியன்

வடக்கில் பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்க அரசாங்கம் 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்தார். 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ், இதுவரை 23 பாடசாலைகள் கட்டி முடிக்கப்பட்டு, கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறந்துவைக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று பாடசாலைகள் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளன.
வடக்குப் பகுதி மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு மேலும் 250 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது இந்த திட்டம் இன்னும் மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Tuesday, March 23, 2010

காணாமல்போனவர் அறிவித்தல் பெயர் பாலசுப்பரமணியம் கம்சா


நடந்து முடிந்த இறுதியுத்தின் முன்னர் கிளிநொச்சி முல்லைதீவு பகுதிகளில் அதிகமான சிறுவர்சிறுமியர் காணாமல் போயுள்ளனர் கடந்த வருடம் பெப்ரவரிமாதம் எராளமான பிள்ளைகள் காணமல் போனதையடுத்து பெற்றோர்கள் மிகவும் வேதனையடைந்தவண்ணம் தெருத்தெருவாக பிள்ளைகளைதேடி வவுனியா இடம் பெயர்ந்த முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் கண்ணீருடன் விசாரித்து அலைந்தவண்ணம் உள்ளனர் அப்படி காணாமல் போன தனது ஒரேயொரு செல்ல மகளை தேடி தந்தையும் தாயும் மனநிலை பாதிக்கப்பட்டு வாழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது அன்பா புலம் பெயர்வாழ் உறவுகளே பாதிக்கப்பட்ட இந்த பெற்றோரின் கவலைதீர்க்க உங்களால் முடியுமா??இவர்களது ஒரேயொரு செல்லமகளை யாராவது பார்த்திருந்தாலோ அல்லது உங்கள் உறவுகள்மூலமாக அறிந்திருந்தாலோ மனிதநேயஅடிப்படையில் உதவி புரிய
காத்திருக்கும் எங்களுடன் தயவு செய்து தொடர்கொள்ளுமாறு கேட்டுக்கொகிறோம் காணாமல் போனவரின்தகவல் தருவோர்க்குதகுந்த சன்மானம் வழங்கப்படும் நன்றி வணக்கம்
தொடர்புகட்கு s.p. karan 0041783130889

வடக்கு-கிழக்கை இணைக்கக் கோரும் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் குறித்து எதிர்க்கட்சிகளின் மௌனம் ஏன்? டலஸ் அழகப்பெரும கேள்வியெழுப்பினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன்? என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும கேள்வியெழுப்பினார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணி வேட்பாளருக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையில் ரகசிய உடன்படிக்கை இருப்பதாக நாங்கள் கூறினோம். அந்த விடயத்தை தற்போது மீண்டும் நாங்கள் நினைவூட்டுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். அதன் உள்ளடக்கங்களை பார்க்கும்போது எங்களுக்கு கவலையாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்தே பொது எதிரணி கூட்டணியாக செயற்பட்டன. இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு ஏன் இன்னும் தெரிவிக்கப்படவில்லை? குறைந்தபட்சம் நிறையாகவோ அல்லது குறையாகவோ விமர்சனம் ஒன்றை முன்வைத்திருக்கலாம் அல்லவா? ஆனால் இன்றுவரை மௌனம் சாதிக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணி வேட்பாளருக்கும் தமிழ்க்கூட்டமைப்புக்கும் இடையில் ரகசிய உடன்படிக்கை இருப்பதாக நாங்கள் கூறினோம். அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்கவில்லை.எனினும் ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அதனை கடுமையாக மறுத்திருந்தன. அந்த இரகசிய உடன்படிக்கையில் வடக்கு கிழக்கு பிரிப்பு விடயம் காணப்பட்டதாக நாங்கள் கூறினோம். இந்நிலையில் அந்த விடயத்தை தற்போது மீண்டும் நாங்கள் நினைவூட்டுகின்றோம் . காரணம் நாங்கள் அன்று கூறிய விடயங்கள் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாங்கள் அன்று கூறிய விடயத்தை தமிழ்க் கூட்டமைப்பு இன்று நிரூபித்துள்ளது. எமது நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஏன் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிக்கின்றன என்ற கேள்வியை நாங்கள் எழுப்புகின்றோம் என்றார்.

Thursday, March 18, 2010

மன்னார் சமாதானப் பாலத்தை இன்று ஜனாதிபதி திறந்துவைத்தார்.....

மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பையும் மன்னார் தீவையும் இணைக்கும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில்அமைச்சர் றிஷாட் பதியுதீன் மன்னார் அரச அதிபர் நீக்கிலாப்பிள்ளை மற்றும் அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 2007 இல் ஜப்பான் அரசு வழங்கிய நிதியில் 'மன்னார் சமாதான பாலம்' என்ற பெயரில் 137 கோடி ருபா ஒதுக்கப்பட்டுக் கைச்சாத்திடப்பட்டது.
உள்நாட்டு வெளிநாட்டுத் தொழில்நுட்பவியலாளர்கள் இப்பாலத்தை நிர்மாணித்தனர். இரண்டரை வருடங்களுக்கு மேல் பால நிர்மாண வேலைகள் இடம்பெற்று வந்தன. அதி நவீன முறையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பிரதேச மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படுவதோடு அவர்களது பொருளாதார வளங்களும் மேம்பாடடமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொன்சேகாமீதான விசாரணை காலவரையறையின்றி ஒத்திவைப்பு........

இராணுவச் சட்டங்களை மீறி நடந்தார்ரென்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நீதிமன்றம் நேற்று முதன்முறையாகக் கூடியபோது அதன் விசாரணைகள் எதிர்வரும் எப்பரல் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. அதே நீதிபதிகள் தலைமையில் இன்று இரண்டாவது நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமானபோது ஜெனரல் பொன்சேகா சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிபதிகள் தொடர்பாக தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Monday, March 15, 2010

மீள்குடியேற்றம் இடம்பெறும் பகுதிகளில் இலவச மின்சாரம் வவுனியா வடக்கில் திட்டம் இவ்வாரம் ஆரம்பம்........

மீள்குடியேற்றம் இடம்பெறும் பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இலவச மின்சாரம் வழங்கும் விஷேட திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதன்படி வவுனியா வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.
மின்சார இணைப்பு வழங்கப்பட்டது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இலவசமாக மின் விநியோகம் செய்யப்படுமெனவும் இதற்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்தார்.வடக்கின் வசந்தம் மற்றும் கமநெகும வேலைத் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் மின் இணைப்பை பெற்றுக் கொடுக்கும் 14 செயற்திட்டங்களே இவ்வாரம் முதல் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
அதன்படி கணேசபுரம் ஓமந்தை நொச்சிமோட்டை கட்டான்குளம் உள்ளிட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்கள் இவ்வாரம் முதல் மின் இணைப்பை பெற்றுக் கொள்கின்றனர்.இவர்களுள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கே இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது.வவுனியா மற்றும் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவூகளுக்கு உட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் தற்போது 500 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்களுள் குறித்த திகதிக்கு பின்னதாக மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கும் சுமார் 200 குடும்பங்களே இலவச மின் இணைப்பை பெறவுள்ளன.வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 200 செயற் திட்டங்களுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில் முதற் கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் 14 செயற்திட்டங்களே பொதுமக்களின் இவ்வாரம் முதல் கையளிக்கப்படவிருப்பதாகவும் அரசாங்க அதிபர் நேற்றுத் தெரிவித்தார்.

Sunday, March 14, 2010

எதிரணி அரசியலை விடுத்து இணக்கப்பாட்டு அரசியலுக்கு வாருங்கள் அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) .........

வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆளும் கட்சிக்குப் பின்னால் வந்தால் மட்டுமே அபிவிருத்தி என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து எனக்கு தெரிந்தவர் போட்டியிடுகிறார், உறவினர் போட்டியிடுகிறார் என வாக்களித்தால், தமிழ் பிரதிநிநிதித்துவத்தை இழக்க நேரிடும். இந்த நிலையில் அபிவிருத்தியைச் செய்ய முடியாது. ஜனாதிபதி இன்னும் ஏழு வருடங்கள் பதவியில் இருக்கப் போகிறார். இதனை நாம் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதில் நாம் மீண்டும் தவறிழைத்துவிடக் கூடாது. என்கிறார் அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரனை (கருணா அம்மான்) அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோது அவர்..

கிழக்கில் சட்டவிரோத குடியேற்றங்கள் நடை பெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இவ்வாறான ஒரு நிகழ்வு கிடையாது காணி அதிகாரம் முழுமையாக ஒவ்வொரு பிரதேச செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக தமது காணிகளை தமிழ், முஸ்லிம் மக்களிடம் விற்றுவிட்டுச் சென்ற சிலர் தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் மீண்டும் வந்து தமது காணிகளை பலவந்தமாகக் கேட்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மைதானா?

இவ்வாறான சில பிரச்சினைகள் வந்தனதான். இல்லையென்று சொல் வதற்கில்லை. ஆனால் அவற்றை தலையிட்டு தீர்த்துவைத்திருக்கிறேன். தமது காணிதான் என்று கூறுவதற்கான உறுதி கையிலிருக்கும் போது எவராலும் எதனையும் செய்துவிட முடியாது. கடைசிவரையும் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை. அண்மையில் வாகரையில் இவ்வாறான ஒரு பிரச்சினை நடந்தது. அதனை சுமுகமாகத் தீர்த்துவைத்தேன். சொந்த இடங்களுக்கு மக்கள் திரும்பிவரலாம். அதில் எந்தப்பிரச்சினையும் இல்லை.

உதாரணமாக அண்மையில் ஏறாவூரில் பெளத்த விகாரையை நானே திறந்துவைத்தேன். ஏறாவூரிலுள்ள பெளத்த விகாரை இப்போது முளைத்ததல்ல. நாம் சிறுவயதாக இருந்த காலத்திலிருந்தே பூர்வீகமாக அங்கு இந்த பெளத்த விகாரை இருந்தது. இந்த நிகழ்வில் பெருந்தொகையான தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டார்கள். அது சந்தோசமான நிகழ்வாக இருந்தது. அதனை எவரும் தவறாகப் பார்க்கக் கூடாது.

இதற்குத் தான் நான் தமிழ்- பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் அதிகரிக்க வேண்டும் எனக் கூறுகிறேன். குறிப்பாக ஆளுங்கட்சியில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். குறிப்பாக வடக்கில் மக்கள் ஆளும் தரப்பினரை ஆதரிக்க வேண்டும்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள எஞ்சியுள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது பற்றி உங்களது பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது?

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை நேரடியாக சென்று பார்த்துவிட்டு வந்ததன் பின்னர் அவர்களை துரிதகதியில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற யோசனையை நானே முதலில் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.

இந்த மக்களை துரிதமாக குடியமர்த்தினால்தான் புலிகள் யார்? அரசாங்கம் யார்? என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதையும் எடுத்துக் கூறினேன். ஜனாதிபதியும் அதற்கு உடன்பட்டது மட்டுமல்ல துரித கதியில் மிதிவெடிகளை, நிலக்கண்ணி வெடிகளை அகற்ற நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தார். இப்போது அந்தமக்களைத் தொடர்ந்தும் முகாமில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று எவருக்குமே கிடையாது. மீள்குடியேற்றம் துரிதமாக நடபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இடம்பெயர்ந்து வரும் மக்களை முகாமுக்குள்ளேயே தடுத்துவைக்க வேண்டும் என்பதில் அன்று உறுதியாக இருந்தவர் சரத் பொன்சேகாதான். தமிழ் மக்களை முகாமைவிட்டு வெளியேற விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

இவ்வாறான ஒருவருக்குத்தான் தமிழ் மக்கள் ஏன் வாக்களித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை. வேடிக்கையான விடயம்.

இந்த உண்மை தமிழ் மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம் இல்லையா?

இதற்கு முன்னரும் தேர்தல் பிரசாரங்களின் போது நான் தெளிவு படுத்தியிருக்கிறேன்.

சரத் பொன்சேகாவின் கோட்பாடு எப்படி இருந்ததென்றால் 30 வருடங்கள் விடுதலைப் புலிகளின் பிடிக்குள் இருந்த மக்களை குறைந்தது 3 வருடங்களாவது முகாம்களில் தடுத்துவைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஜனாதிபதி “இல்லை அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும், மீளக் குடியமர்த்த வேண்டும்” என்றார்.

முப்படைகளின் தளபதிகள், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, நான் உட்பட கலந்துகொண்ட கூட்டத்தின் போதே அவர் இப்படித் தெரிவித்தார். வாகரை பள்ளிக்கூடம் திறந்துவைத்த போதுதான் இந்த சம்பவம் இடம்பெற்றது.

ஜனாதிபதி மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த வேண்டும் எனச் சொல்லும் போது அவரது வார்த்தையை மீறி சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி கருணா சொல்வது சரி அந்த மக்களை தடுத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுவிப்போம் என்று கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் அவர்களை வெளியே விடமுடியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இருப்பினும் முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் வருவது வரட்டும், மக்களை வெளியே விடுங்கள் என ஜனாதிபதி தெரிவித்தார். அவரது அந்த முடிவுதான் மக்களை சொந்த இடங்களில் துரிதமாக மீளக்குடியமர்த்துவதற்கு வாய்ப்பாக இருந்தது. இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. மக்களை மீளக் குடிமர்த்தும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக நடைபெறுகின்றன.

தமிழ் மக்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

சின்னச் சின்னக் கட்சிகள், துவேசமாக பேசும் கட்சிகள் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் வெளி நாடுகளின் தலையீடுகள் எல்லாம் உள்ளன.

இங்கு குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில வெளிநாடுகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முயற்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. முன்னரும் இதனைத்தான் செய்தன. வெளிநாடுகளின் சூழ்ச்சிகளுக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது.

நீங்கள் சொல்வது போன்று பிராந்தியக் கட்சிகள் இல்லாமல் போனால் சிறுபான்மையினருக்கு அது ஒரு ஆபத்தாக அமைந்துவிடாதா?

இல்லை. பிராந்திய கட்சிகள் இருப்பதால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது என்பது பற்றியும் பார்க்கத்தானே வேண்டும். எதுவும் இல்லையே. நாம் முதலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை ஆளும் தரப்பில் அதிகரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

இப்போது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இ. தொ. கா. போன்ற கட்சிகள் உள்ளனவே. இவை நன்றாக தமது பகுதிகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனவே?

மலையகக் கட்சிகளை இவர்களுடன் ஒப்பிடக்கூடாது அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். அந்த மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடு கிறார்கள். தனித்து நின்று தேர்தலில் நின்றாலும் ஆளுந்தரப்புடன் இணைந்து செயற்படுகிறார்கள்.

இங்கு அவ்வாறில்லையே, இனத் துவேசத்தை தூண்டுபவையா கத்தானே உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால் எப்போதும் எதிராக இருந்து கொண்டு துவேசத்தைக் கிளப்பி கிளப்பி மக்களை குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறார்களே யொழிய வேறு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

இவற்றை விடுத்து வெற்றியடைந்த பின்னர் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களின் வளர்சசிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுமாகஇருந்தால் அதனை முதல் முதல் வரவேற்கும் நபர் நானாகத்தான் இருப்பேன். ஆனால் இவர்கள் அப்படிச் செய்கிறார்கள் இல்லையே.

முஸ்லிம்களும் இன்று வளர்ச்சியடைந்துள்ளார்கள். எப்படி? தனித்தனிக்கட்சியாக போட்டியிட்டாலும், அரசுடன் இணைந்து கிடைக்கும் வளங்களை, அபிவிருத்திகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர். வெறுமனே கிழக்கை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. வடக்குப் பகுதியிலும் உங்களது பங்களிப்பு தேவை. இதற்கு என்ன செய்யப் போகிர்கள்?

துவேச மனப்பான்மையுடன் செயற்படும் பிராந்திய அடிப்படை யிலான சிறு சிறு கட்சிகளை முத லில் இல்லாமல் செய்ய வேண்டும். மக்களால் இந்தக் கட்சிகள் புறக் கணிக்கப்பட வேண்டும். மக்கள் தேசிய அரசியலில் ஈடுபட வேண்டும். ஈடுபடுவதற்கான வாய்ப்பை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும். இன்று சிங்கள மக்களின் பிரதேசங்களை விட வடக்கு கிழக்கில் தான் ஜனநாயகம் நன்றாக செயற்படுகிறது. வடக்கு, கிழக்கில்தான் அதிகளவு கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனை கண்கூடாக காணலாம். இது ஜனநாயகத்தின் வெளிப்பாடு.

முன்னாள் போராளிகள் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள், இவர்களது விடுதலை குறித்து ஏதாவது பேசியிருக்கிர்களா?

இவர்கள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்கள் தொழிற் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர் பாக நானும் பேசியிருக்கிறேன்.

முன்னாள் போராளிகளின் விடுதலையாகட்டும், முகாம்களிலுள்ள மக்களாகட்டும். இவர்களது வெளியேற்றத்துக்கு இன்னமும் தடையாக இருப்பது வெளிநாட்டி லுள்ளவர்களின் செயற்பாடுகள்தான்.

விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என உருத்திரக்குமாரன் வெளிநாட்டில் தெரிவிக்கிறார். இங்குள்ள போராளிகளின் விடுதலை குறித்து நாம் சென்று பேசும் போது அதிகாரிகள் மட்டத்தில் இதற்கு எதிர்ப்பு வருகிறது.

கண்மூடித்தனமாக இவர்களை விடுதலை செய்து விட்டால் இவர்கள் மீண்டும் சேர்ந்துவிட மாட்டார்களா? என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை முன்வைக்கிறா ர்கள். இவர்கள் மீண்டும் சேர மாட் டார்கள் என்பது எமக்குத் தெரியும். ஏனெனில் தமிழ் இளைஞர்கள் புலிகளால் நொந்து நூலாகிப் போய் இருக்கிறார்கள்.

எனினும் எமக்கு இவர்களது விடுதலை குறித்து வாதிட முடியாமல் இருப்பதற்கும் காரணம் எமது தமிழன்தானே!

இதேபோன்று பூஸா மற்றும் வெலிக்கடை சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் ஏற்பாடுகள் செய்துளர்களா?

இவர்களின் விடுதலை தொடர்பாகவும் நான் நீதியமைச்சருடன் பேசியிருந்தேன். உண்ணாவிரதம் இருந்த போதும் அமைச்சர் மிலிந்த மொரகொடவுடன் பேசி நிறைய வேலைத்திட்டங்களை செய்தேன்.

இனி தேர்தலுக்குப் பின்னர்தான் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கலாம். ஏனெனில் அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவரை நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அதிகளவு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவில்லை. குறிப்பாக குறைந்தளவு வாக்கையே அளித்தனர். இதனையிட்டு ஜனாதிபதி தமிழ் மக்களை அவர் வெறுக்கிறாரா? அல்லது ஒதுக்குகிறாரா?

நிச்சயமாக இல்லை. அவர் அத்தனை குறையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல் லாமல் யாழ்ப்பாணத்தில் மட்டு மல்ல, வட மாகாணத்தில் 44,000 மக்கள் தனக்கு வாக்களித்திருக்கி றார்கள் என பெருமையுடன் பலரிடம் கூறியிருக்கிறார். இது அவரு க்குப் பெரிய சந்தோஷமான விடயம். விடுவிக்கப்பட்ட பின்னர் முதல் முதலாக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் இந்தளவு கிடைத்திருக்கிறது. இதன் பின்னர் நடைபெறும் தேர்தலில் இதனைவிடக் கூடுதலான வாக்குகள் கிடைக்கும். மக்கள் இப்போது நான்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடக் கூடாது. இம்முறை தமிழ் மக்களை காப்பாற்றியவர்கள் சிங்களவர்கள்தான். சரத் பொன்சேகா வந்திருந்தால் சரியான கெடுபிடிகள் நடந்திருக்கும். சரத் பொன்சேகாவால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் எந்த கெடுபிடிகளையும் தடுத்திருக்க முடியாது. சிங்கள மக்கள் ஜனாதி பதிக்கு வாக்களித்ததன் காரணமா கத்தான் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது சரத் பொன் சேகாவின் சுயரூபம் தமிழ் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது என்கிர்களா?

ஆமாம். இப்போது புரிந்து கொண்டுவிட்டார்கள். தேர்தலில் போட்டியிடும் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவரே என ரணில் விக்ரம சிங்கவை அழைத்த பொன்சேகா தேர்தலில் வெல்வோம் என்ற ஒரு இறுமாப்பில் மிஸ்டர் ரணில் என அழைத்தாராம். சிங்கள ஊடகங்கள் இதனை வெளியிட்டிரு ந்தன. சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால் ஜே. வி. பியுடன் தான் சேர்ந்திருப்பார். ஐ. தே. கவை ஒதுக்கிவிட்டிருப்பார். இது தமிழ் மக்கள் மீது கடும் நெருக்குதல் களையே கொண்டுவந்திருக்கும். இதனை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள தவறிவிட்டார்கள்.

ஆனால் ஜனாதிபதி தமிழ் மக்களுடன்தான் இருக்கிறார். தமிழ் மக்களுக்கு ஏதாவதென்றால் கேட்பதற்கு ஜனாதிபதியுடன் நானும் இருக்கிறேன்.

தமிழ் மக்கள் செய்ய வேண்டியது வாக்களிப்பதுதான், வாக்களித்துக்காட்ட வேண்டும். வாதிடும் உரிமையை மக்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். அந்த உரிமையை வழங் காமல் ஜனாதிபதியிடம் அதைத் தாருங்கள், இதைத் தாருங்கள் எனக் கேட்க முடியாது.

தமிழ் மக்கள் எப்போதும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். எதிரணி அரசியலை விட்டு இணக்கப்பாட்டு அரசியல் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கருணா அம்மான் அவர்கள் தெரிவித்தார்..

Friday, March 12, 2010

இலங்கையுடன் இஸ்ரேல் பொருளாதார ஒப்பந்தம்...........

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பொருளாதார ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதுடில்லி மற்றும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் மார்க் சோபருக்கும் இடையில் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Thursday, March 11, 2010

அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் தேர்தல் ஆணையர் நாயகம் சந்திப்பு வாக்கு எண்ணுவதை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்...........

எதிர் வரும் ஏப்ரல் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்றை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் நடத்தவுள்ளார்.
அதற்கமைய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க நாளை வெள்ளிகிழமை அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்து உரையாடவுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான விடயங்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அனுமதிப்பது அரசியல் கட்சிகளின் தேர்தல் வன்முறைகள் ஆகியவை பற்றி இந்த சந்திப்பின் போது பேசப்படும் என்று தேர்தல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Tuesday, March 9, 2010

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும் பொன்சேகா மீது உடனடி விசாரணை.....

சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும் உடனடியாக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகும். 3 அல்லது 5 நீதிபதிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தும். அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு ஏற்ப இராணுவ தளபதி மேற்படி 3 அல்லது 5 நீதிபதிகளை நியமிப்பார என இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது.
இந்த நீதிபதிகள் குழுமம் மேற்படி இராணுவ நீதிமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதி மீது விசாரணை நடத்தும். குறிப்பிட்ட இந்த இராணுவ நீதிமன்றம் எந்த இராணுவ முகாமில் இடம் பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு இராணுவத் தளபதியிடம் கடந்தவாரம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சாட்சியங்களின் தொகுப்பில் 35 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 22 இராணுவத்தினரிதும் 7 பொலிஸ் உத்தியோகத்தரினதும் ஏனையவை பொது மக்களிடமிருந்தும் கிடைத்துள்ளன. சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய மேற்படி அறிக்கை தற்போது இராணுவத்தின் சட்டப் பிரிவு அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசீலனை முடிவுற்றதும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களின்படி முன்னாள் இராணுவத் தளபதி மீது ஐந்துக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும்.
அடுத்த சில நாட்களில் இந்த குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படும். இராணுவ சட்டத்தின் விதி முறைகளின்படி இராணுவ நீதிமன்றத்தில் வைத்தே அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

Monday, March 8, 2010

இம்மாதம் நடுப்பகுதியில் இடைக்கால பருவப் பெயர்ச்சி மழை காலநிலை அவதான நிலையம் எதிர்பார்ப்பு...........

இம்மாதம் நடுப்பகுதியில் இடைக்கால பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்பொழுது நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளைகளில் சிறிது மழை பெய்து வருவதாக குறிப்பிட்ட அவர் ஒரு மாத காலமாக வரட்சியான காலநிலை நாடு பூராவூம் காணப்படுகிறது எனக் கூறினார்.
தற்பொழுது நிலவிவரும் வரட்சியான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
தற்பொழுது ஊவா சப்ரகமுவ மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் மாலை வேளைகளில் இடைக்கிடை மழை பெய்து வருவதாகவூம் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது.
நேற்று காலையூடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நுவரெலியாவில் 5 மில்லி மீட்டரும் இரத்மலானையில் 1.2 மி. மீ. உம் மழை பெய்துள்ளது.

Sunday, March 7, 2010

ஊனமுற்ற முன்னாள் போராளிகளை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை.....

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊனமுற்ற முன்னாள் போராளிகளில் 500 பேர் எதிர்வரும் தினங்களில் உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் கீதாஞ்சலி தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் வவுனியா அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் தற்போது இருப்பவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் இன்னும் சில தினங்களில் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Wednesday, March 3, 2010

அக்கரைப்பற்று – யாழ் பஸ் சேவை இம்மாதம் முதல் ஆரம்பம்............

வடபகுதி பயணிகளின் வசதி கருதி அக்கரைப்பற்று- யாழ்ப்பாணம் புதிய இரவு நேர பஸ் சேவை இம்மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பஸ் நிலைய அத்தியட்சகர் யூ.எம்.சம்சுடீன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கல்முனை பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசுந்தரம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு யாழ். பயணிகளுக்கான பிரயாணச் சீட்டை வழங்க பஸ் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

Tuesday, March 2, 2010

கல்வி நடவடிக்கைகளை ஆராய கிழக்கில் திடீர் சோதனைக் குழுக்கள்............

கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கவும் கிழக்கு மாகாண கல்வியமைச்சினால் திடீர் சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இத்திடீர் பரிசோதனைக் குழுக்கள் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்கு நேரத்திற்கு சமூகமளிப்பதையூம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுற்று நிருபத்திற்கமைய நேரசுசி வழங்கப்பட்டு கற்பித்தல் பணியில் ஈடுபடுவதையூம் கண்காணிக்கும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது
வலயம் மட்டும் கோட்ட மட்டத்தில் அமைக்கப்படவுள்ள இத்திடீர் பரிசோதனைக்குழுக்களில் கோட்டமட்ட கல்வி பணிப்பாளர்கள் இடம்பெறுவதோடு ஒரு நாளைக்கு மூன்று பாடசாலைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயக்கல்வி அலுவலகங்கள் போன்றவற்றை கண்காணிக்க தனியான குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலை காரணம் காட்டி மீள்குடியேற்றம் தாமதிக்கப்படாது எஞ்சிய 70,000 பேரும் விரைவில் மீள் குடியேற்றம்.........

பாராளுமன்றத் தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும், எஞ்சியுள்ள சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களையும் துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்தது. போர்ச் சூழல் காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மீள்குடியே ற்றப்பட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமானதோடு மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். இந்த மாதத்திலும் பெரும்பாலானவர்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதோடு, அவர்கள் வசித்த இடங்களில் உள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்க ப்படுவதாகவும் அந்த உயரதிகாரி கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவ டைந்து வருவதோடு, ஏனைய பகுதிகளிலும் மிதிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. மிதிவெடி அற்றப்படும் பணிகள் பூர்த்தியடைந்தவுடன் அப்பகுதிகளில் மக்கள் துரிதமாக மீள்குடியேற்றப்பட்டு வருவதோடு, எதிர்வரும் வாரங்களில் ஏ-9 வீதியின் கிழக்கு பகுதியில் மீள்குடி யேற்றங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட த்தில் அடுத்த மாத முதற்பகுதியில் மக்கள் மீள்குடி யேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் காரணமாக மக்கள் மீள்குடியேற்றும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படவோ தாமதிக்கப்படவோ மாட்டாது என அமைச்சு குறிப்பிட்டது.

Monday, March 1, 2010

விருப்பு வாக்கு இலக்கங்களை தெரிவுசெய்யும் பணிகள் தீவிரம்.....

வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்களை கூடிய விரைவில் மாவட்ட அடிப்படையில் தேர்தல்கள் செயலகத்தினூடாக அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல்கள் செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு தொடர்பான பணிகளில் தேர்தல்கள் செயலகம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு இன்று உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கப்படுமென்று தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அது தொடர்பான பணிகள் பூர்த்தியாகவில்லை எனவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.