Sunday, March 14, 2010

எதிரணி அரசியலை விடுத்து இணக்கப்பாட்டு அரசியலுக்கு வாருங்கள் அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) .........

வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆளும் கட்சிக்குப் பின்னால் வந்தால் மட்டுமே அபிவிருத்தி என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து எனக்கு தெரிந்தவர் போட்டியிடுகிறார், உறவினர் போட்டியிடுகிறார் என வாக்களித்தால், தமிழ் பிரதிநிநிதித்துவத்தை இழக்க நேரிடும். இந்த நிலையில் அபிவிருத்தியைச் செய்ய முடியாது. ஜனாதிபதி இன்னும் ஏழு வருடங்கள் பதவியில் இருக்கப் போகிறார். இதனை நாம் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதில் நாம் மீண்டும் தவறிழைத்துவிடக் கூடாது. என்கிறார் அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரனை (கருணா அம்மான்) அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோது அவர்..

கிழக்கில் சட்டவிரோத குடியேற்றங்கள் நடை பெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இவ்வாறான ஒரு நிகழ்வு கிடையாது காணி அதிகாரம் முழுமையாக ஒவ்வொரு பிரதேச செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக தமது காணிகளை தமிழ், முஸ்லிம் மக்களிடம் விற்றுவிட்டுச் சென்ற சிலர் தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் மீண்டும் வந்து தமது காணிகளை பலவந்தமாகக் கேட்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மைதானா?

இவ்வாறான சில பிரச்சினைகள் வந்தனதான். இல்லையென்று சொல் வதற்கில்லை. ஆனால் அவற்றை தலையிட்டு தீர்த்துவைத்திருக்கிறேன். தமது காணிதான் என்று கூறுவதற்கான உறுதி கையிலிருக்கும் போது எவராலும் எதனையும் செய்துவிட முடியாது. கடைசிவரையும் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை. அண்மையில் வாகரையில் இவ்வாறான ஒரு பிரச்சினை நடந்தது. அதனை சுமுகமாகத் தீர்த்துவைத்தேன். சொந்த இடங்களுக்கு மக்கள் திரும்பிவரலாம். அதில் எந்தப்பிரச்சினையும் இல்லை.

உதாரணமாக அண்மையில் ஏறாவூரில் பெளத்த விகாரையை நானே திறந்துவைத்தேன். ஏறாவூரிலுள்ள பெளத்த விகாரை இப்போது முளைத்ததல்ல. நாம் சிறுவயதாக இருந்த காலத்திலிருந்தே பூர்வீகமாக அங்கு இந்த பெளத்த விகாரை இருந்தது. இந்த நிகழ்வில் பெருந்தொகையான தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டார்கள். அது சந்தோசமான நிகழ்வாக இருந்தது. அதனை எவரும் தவறாகப் பார்க்கக் கூடாது.

இதற்குத் தான் நான் தமிழ்- பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் அதிகரிக்க வேண்டும் எனக் கூறுகிறேன். குறிப்பாக ஆளுங்கட்சியில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். குறிப்பாக வடக்கில் மக்கள் ஆளும் தரப்பினரை ஆதரிக்க வேண்டும்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள எஞ்சியுள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது பற்றி உங்களது பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது?

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை நேரடியாக சென்று பார்த்துவிட்டு வந்ததன் பின்னர் அவர்களை துரிதகதியில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற யோசனையை நானே முதலில் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.

இந்த மக்களை துரிதமாக குடியமர்த்தினால்தான் புலிகள் யார்? அரசாங்கம் யார்? என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதையும் எடுத்துக் கூறினேன். ஜனாதிபதியும் அதற்கு உடன்பட்டது மட்டுமல்ல துரித கதியில் மிதிவெடிகளை, நிலக்கண்ணி வெடிகளை அகற்ற நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தார். இப்போது அந்தமக்களைத் தொடர்ந்தும் முகாமில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று எவருக்குமே கிடையாது. மீள்குடியேற்றம் துரிதமாக நடபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இடம்பெயர்ந்து வரும் மக்களை முகாமுக்குள்ளேயே தடுத்துவைக்க வேண்டும் என்பதில் அன்று உறுதியாக இருந்தவர் சரத் பொன்சேகாதான். தமிழ் மக்களை முகாமைவிட்டு வெளியேற விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

இவ்வாறான ஒருவருக்குத்தான் தமிழ் மக்கள் ஏன் வாக்களித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை. வேடிக்கையான விடயம்.

இந்த உண்மை தமிழ் மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம் இல்லையா?

இதற்கு முன்னரும் தேர்தல் பிரசாரங்களின் போது நான் தெளிவு படுத்தியிருக்கிறேன்.

சரத் பொன்சேகாவின் கோட்பாடு எப்படி இருந்ததென்றால் 30 வருடங்கள் விடுதலைப் புலிகளின் பிடிக்குள் இருந்த மக்களை குறைந்தது 3 வருடங்களாவது முகாம்களில் தடுத்துவைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஜனாதிபதி “இல்லை அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும், மீளக் குடியமர்த்த வேண்டும்” என்றார்.

முப்படைகளின் தளபதிகள், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, நான் உட்பட கலந்துகொண்ட கூட்டத்தின் போதே அவர் இப்படித் தெரிவித்தார். வாகரை பள்ளிக்கூடம் திறந்துவைத்த போதுதான் இந்த சம்பவம் இடம்பெற்றது.

ஜனாதிபதி மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த வேண்டும் எனச் சொல்லும் போது அவரது வார்த்தையை மீறி சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி கருணா சொல்வது சரி அந்த மக்களை தடுத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுவிப்போம் என்று கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் அவர்களை வெளியே விடமுடியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இருப்பினும் முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் வருவது வரட்டும், மக்களை வெளியே விடுங்கள் என ஜனாதிபதி தெரிவித்தார். அவரது அந்த முடிவுதான் மக்களை சொந்த இடங்களில் துரிதமாக மீளக்குடியமர்த்துவதற்கு வாய்ப்பாக இருந்தது. இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. மக்களை மீளக் குடிமர்த்தும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக நடைபெறுகின்றன.

தமிழ் மக்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

சின்னச் சின்னக் கட்சிகள், துவேசமாக பேசும் கட்சிகள் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் வெளி நாடுகளின் தலையீடுகள் எல்லாம் உள்ளன.

இங்கு குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில வெளிநாடுகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முயற்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. முன்னரும் இதனைத்தான் செய்தன. வெளிநாடுகளின் சூழ்ச்சிகளுக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது.

நீங்கள் சொல்வது போன்று பிராந்தியக் கட்சிகள் இல்லாமல் போனால் சிறுபான்மையினருக்கு அது ஒரு ஆபத்தாக அமைந்துவிடாதா?

இல்லை. பிராந்திய கட்சிகள் இருப்பதால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது என்பது பற்றியும் பார்க்கத்தானே வேண்டும். எதுவும் இல்லையே. நாம் முதலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை ஆளும் தரப்பில் அதிகரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

இப்போது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இ. தொ. கா. போன்ற கட்சிகள் உள்ளனவே. இவை நன்றாக தமது பகுதிகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனவே?

மலையகக் கட்சிகளை இவர்களுடன் ஒப்பிடக்கூடாது அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். அந்த மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடு கிறார்கள். தனித்து நின்று தேர்தலில் நின்றாலும் ஆளுந்தரப்புடன் இணைந்து செயற்படுகிறார்கள்.

இங்கு அவ்வாறில்லையே, இனத் துவேசத்தை தூண்டுபவையா கத்தானே உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால் எப்போதும் எதிராக இருந்து கொண்டு துவேசத்தைக் கிளப்பி கிளப்பி மக்களை குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறார்களே யொழிய வேறு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

இவற்றை விடுத்து வெற்றியடைந்த பின்னர் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களின் வளர்சசிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுமாகஇருந்தால் அதனை முதல் முதல் வரவேற்கும் நபர் நானாகத்தான் இருப்பேன். ஆனால் இவர்கள் அப்படிச் செய்கிறார்கள் இல்லையே.

முஸ்லிம்களும் இன்று வளர்ச்சியடைந்துள்ளார்கள். எப்படி? தனித்தனிக்கட்சியாக போட்டியிட்டாலும், அரசுடன் இணைந்து கிடைக்கும் வளங்களை, அபிவிருத்திகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர். வெறுமனே கிழக்கை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. வடக்குப் பகுதியிலும் உங்களது பங்களிப்பு தேவை. இதற்கு என்ன செய்யப் போகிர்கள்?

துவேச மனப்பான்மையுடன் செயற்படும் பிராந்திய அடிப்படை யிலான சிறு சிறு கட்சிகளை முத லில் இல்லாமல் செய்ய வேண்டும். மக்களால் இந்தக் கட்சிகள் புறக் கணிக்கப்பட வேண்டும். மக்கள் தேசிய அரசியலில் ஈடுபட வேண்டும். ஈடுபடுவதற்கான வாய்ப்பை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும். இன்று சிங்கள மக்களின் பிரதேசங்களை விட வடக்கு கிழக்கில் தான் ஜனநாயகம் நன்றாக செயற்படுகிறது. வடக்கு, கிழக்கில்தான் அதிகளவு கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனை கண்கூடாக காணலாம். இது ஜனநாயகத்தின் வெளிப்பாடு.

முன்னாள் போராளிகள் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள், இவர்களது விடுதலை குறித்து ஏதாவது பேசியிருக்கிர்களா?

இவர்கள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்கள் தொழிற் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர் பாக நானும் பேசியிருக்கிறேன்.

முன்னாள் போராளிகளின் விடுதலையாகட்டும், முகாம்களிலுள்ள மக்களாகட்டும். இவர்களது வெளியேற்றத்துக்கு இன்னமும் தடையாக இருப்பது வெளிநாட்டி லுள்ளவர்களின் செயற்பாடுகள்தான்.

விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என உருத்திரக்குமாரன் வெளிநாட்டில் தெரிவிக்கிறார். இங்குள்ள போராளிகளின் விடுதலை குறித்து நாம் சென்று பேசும் போது அதிகாரிகள் மட்டத்தில் இதற்கு எதிர்ப்பு வருகிறது.

கண்மூடித்தனமாக இவர்களை விடுதலை செய்து விட்டால் இவர்கள் மீண்டும் சேர்ந்துவிட மாட்டார்களா? என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை முன்வைக்கிறா ர்கள். இவர்கள் மீண்டும் சேர மாட் டார்கள் என்பது எமக்குத் தெரியும். ஏனெனில் தமிழ் இளைஞர்கள் புலிகளால் நொந்து நூலாகிப் போய் இருக்கிறார்கள்.

எனினும் எமக்கு இவர்களது விடுதலை குறித்து வாதிட முடியாமல் இருப்பதற்கும் காரணம் எமது தமிழன்தானே!

இதேபோன்று பூஸா மற்றும் வெலிக்கடை சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் ஏற்பாடுகள் செய்துளர்களா?

இவர்களின் விடுதலை தொடர்பாகவும் நான் நீதியமைச்சருடன் பேசியிருந்தேன். உண்ணாவிரதம் இருந்த போதும் அமைச்சர் மிலிந்த மொரகொடவுடன் பேசி நிறைய வேலைத்திட்டங்களை செய்தேன்.

இனி தேர்தலுக்குப் பின்னர்தான் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கலாம். ஏனெனில் அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவரை நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அதிகளவு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவில்லை. குறிப்பாக குறைந்தளவு வாக்கையே அளித்தனர். இதனையிட்டு ஜனாதிபதி தமிழ் மக்களை அவர் வெறுக்கிறாரா? அல்லது ஒதுக்குகிறாரா?

நிச்சயமாக இல்லை. அவர் அத்தனை குறையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல் லாமல் யாழ்ப்பாணத்தில் மட்டு மல்ல, வட மாகாணத்தில் 44,000 மக்கள் தனக்கு வாக்களித்திருக்கி றார்கள் என பெருமையுடன் பலரிடம் கூறியிருக்கிறார். இது அவரு க்குப் பெரிய சந்தோஷமான விடயம். விடுவிக்கப்பட்ட பின்னர் முதல் முதலாக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் இந்தளவு கிடைத்திருக்கிறது. இதன் பின்னர் நடைபெறும் தேர்தலில் இதனைவிடக் கூடுதலான வாக்குகள் கிடைக்கும். மக்கள் இப்போது நான்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடக் கூடாது. இம்முறை தமிழ் மக்களை காப்பாற்றியவர்கள் சிங்களவர்கள்தான். சரத் பொன்சேகா வந்திருந்தால் சரியான கெடுபிடிகள் நடந்திருக்கும். சரத் பொன்சேகாவால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் எந்த கெடுபிடிகளையும் தடுத்திருக்க முடியாது. சிங்கள மக்கள் ஜனாதி பதிக்கு வாக்களித்ததன் காரணமா கத்தான் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது சரத் பொன் சேகாவின் சுயரூபம் தமிழ் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது என்கிர்களா?

ஆமாம். இப்போது புரிந்து கொண்டுவிட்டார்கள். தேர்தலில் போட்டியிடும் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவரே என ரணில் விக்ரம சிங்கவை அழைத்த பொன்சேகா தேர்தலில் வெல்வோம் என்ற ஒரு இறுமாப்பில் மிஸ்டர் ரணில் என அழைத்தாராம். சிங்கள ஊடகங்கள் இதனை வெளியிட்டிரு ந்தன. சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால் ஜே. வி. பியுடன் தான் சேர்ந்திருப்பார். ஐ. தே. கவை ஒதுக்கிவிட்டிருப்பார். இது தமிழ் மக்கள் மீது கடும் நெருக்குதல் களையே கொண்டுவந்திருக்கும். இதனை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள தவறிவிட்டார்கள்.

ஆனால் ஜனாதிபதி தமிழ் மக்களுடன்தான் இருக்கிறார். தமிழ் மக்களுக்கு ஏதாவதென்றால் கேட்பதற்கு ஜனாதிபதியுடன் நானும் இருக்கிறேன்.

தமிழ் மக்கள் செய்ய வேண்டியது வாக்களிப்பதுதான், வாக்களித்துக்காட்ட வேண்டும். வாதிடும் உரிமையை மக்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். அந்த உரிமையை வழங் காமல் ஜனாதிபதியிடம் அதைத் தாருங்கள், இதைத் தாருங்கள் எனக் கேட்க முடியாது.

தமிழ் மக்கள் எப்போதும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். எதிரணி அரசியலை விட்டு இணக்கப்பாட்டு அரசியல் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கருணா அம்மான் அவர்கள் தெரிவித்தார்..

No comments:

Post a Comment