Tuesday, March 2, 2010

கல்வி நடவடிக்கைகளை ஆராய கிழக்கில் திடீர் சோதனைக் குழுக்கள்............

கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கவும் கிழக்கு மாகாண கல்வியமைச்சினால் திடீர் சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இத்திடீர் பரிசோதனைக் குழுக்கள் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்கு நேரத்திற்கு சமூகமளிப்பதையூம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுற்று நிருபத்திற்கமைய நேரசுசி வழங்கப்பட்டு கற்பித்தல் பணியில் ஈடுபடுவதையூம் கண்காணிக்கும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது
வலயம் மட்டும் கோட்ட மட்டத்தில் அமைக்கப்படவுள்ள இத்திடீர் பரிசோதனைக்குழுக்களில் கோட்டமட்ட கல்வி பணிப்பாளர்கள் இடம்பெறுவதோடு ஒரு நாளைக்கு மூன்று பாடசாலைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயக்கல்வி அலுவலகங்கள் போன்றவற்றை கண்காணிக்க தனியான குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment