Tuesday, September 28, 2010

புலிபாய்ந்தகல்லில் சுகாதார பணிமனைக்கு அடிக்கல்


யுத்தம்காரணமாக இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியத்தின் யுனிசெப் அனுசரணையுடன் 22 மில்லியன் ரூபா செலவில் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை அமைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபை வழிகாட்டலில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நேற்று நாட்டி வைத்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தயசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.அச்சுதன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், மட்டக்களப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment