Thursday, January 27, 2011

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவு 914 சுயேச்சைகள் நேற்றுவரை கட்டுப்பணம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடி வடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. நேற்று ஐ. ம. சு. முன்னணி, ஐ. தே. க., முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பன சில மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்தன.
பிரதான கட்சிகள் இன்று ஏனைய மாவட்டங் களுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளன. ஐ. ம. சு. முன்னணி நேற்று கம்பஹா மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது. அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது. ஐ. தே. க. அம்பாந்தோட்டை மற்றும் வவுனியா மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்தது.
இதேவேளை சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலஎல்லை இன்றுடன் முடிவடை கிறது. இதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 914 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலேயே அதிகூடுதலான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
இம் மாவட்டத்தில் 115 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதுடன் இதற்கு அடுத்ததாக களுத்துறை மாவட்டத்தில் 72 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் 70 சுயேச்சைக் குழுக்களும், கம்பஹா மாவட்டத்தில் 63 சுயேச்சைக் குழுக்களும், குருநாகலில் 56 சுயேச்சைக் குழுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 49 சுயேச்சைக் குழுக்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 சுயேச்சைக் குழுக்களும், இரத்தினபுரியில் 54 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளன.
வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 19 சுயேச்சைக் குழுக்களும், மன்னார் மாவட்டத்தில் 12 குழுக்களும் வவுனியாவில் 7 குழுக்களும் முல்லைத்தீவில் 2 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு சுயேச்சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.
கொழும்பு - 26, கம்பஹா - 63, களுத்துறை - 72, கண்டி - 34, மாத்தளை - 29, நுவரெலியா - 21, காலி - 42, மாத்தறை - 27, ஹம்பாந்தோட்டை - 30, யாழ்ப்பாணம் - 19, கிளிநொச்சி - -, மன்னார் - 12, வவுனியா - 7, முல்லைத்தீவு - 2, மட்டக்களப்பு - 42, அம்பாறை - 115, திருகோணமலை - 49, குருநாகல் - 56, புத்தளம் - 70, அநு ராதபுரதம் - 33, பொலன்னறுவை - 20, பதுளை - 34, மொனராகலை - 24, இரத்தினபுரி - 54, கேகாலை - 33.

No comments:

Post a Comment