Saturday, October 10, 2009

வெற்றியீட்டிய வீரர்களுக்கான கௌரவிப்பும்,இசையாளனின் 3ம் ஆண்டு நினைவுதினமும், கருணா அம்மானின் வரவேற்பும்.....

கடந்த கிழக்கு மீட்புப்போரில் முதல் கல்லாய் நின்று முதற்கட்ட வாகரை நோக்கிய வெற்றிப் பயணத்தில் வீரகாவியமான இசையாளன் உள்ளிட்ட வீரர்களை நினைவு கூரும் முகமாகவும் மற்றும் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மண் பெற்றெடுத்த பெருந்தலைவனுமாகிய கருணா அம்மான் அவர்களின் வரவேற்பு நிகழ்வும் அத்தோடு எமது மண்ணிற்கு பெருமையை பெற்றுத்தந்த வீர, வீராங்கனைகளை வாழ்த்தி வரவேற்று கௌரவித்த நிகழ்வு மட்-சந்திவெளி விளையாட்டு அரங்கில் மிகவும் சிறப்பாக தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரின் மக்கள் தொடர்பாளர் ரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு இருந்தனர். இந்நிகழ்வில் மட்டு மாநகர முதல்வர் சிவகீத்தா மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சின் உத்தியோகத்தர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் கட்டிட ஒப்பந்தகாரர்கள் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்இ கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் கருணா அம்மான் ‘சாதனையாளர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றனர் இது போன்றுதான் எந்த ஒரு வீரர்களும் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றனர் இந்த வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரிய அந்த ஆசான்களை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகின்றேன் என தெரிவித்தார். மற்றும் நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டு தேசிய மட்டத்தில் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டது. இதில் தேசிய மட்டத்தில் மாகாண மட்ட கூடைப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வீரர்களும் (மட்டக்களப்பு) அஞ்சல் ஓட்டத்தில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய முதல் இடம் பெற்ற பாவற்கொடிச்சேனையை சேர்ந்த பெண்மணிக்கும் மற்றும்இ யூடோ போட்டியில் 2ம் இடம் பெற்ற பெண்மணிக்கான வெற்றிக் கிண்ணத்தினையும் மற்றும் அணிநடை (றில்) தேசிய மட்டத்தில் முதல் இடம் பெற்ற மற்றும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடம் பெற்ற தீலீவட்டை பாடசாலை மாணவிகளுக்கான கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வின் இறுதியில் மு. சுஜிவாவின் ரெட் அரோஷ் இன்னிசை நிகழ்வும் அந்நிகழ்வில் கருணா அம்மானின் பாடல் இறுவெட்டும் வெளியிடப்பட்டது. இப்பாடலை பாடிய பாடகிக்கான கௌரவிப்பும் மட்டு மாநகர மேயர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மற்றும் நடன நிகழ்வும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment